Published:Updated:

சீறிய தமன்னா, சூப் வைத்த சமந்தா, 90'ஸ் கிட் ஷெரின்... இது சோஷியல் மீடியா ரவுண்டப்!

#SocialMediaRoundup
#SocialMediaRoundup

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

இனவெறி தாக்குதல் குறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்கள் மெளனம் உங்களைப் பாதுகாக்காது. மனிதனோ, விலங்கோ ஒவ்வொரு வாழ்க்கையும் முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்துக்கு எதிரானது. நாம் கற்றுக்கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று சீறியிருக்கிறார். அதே சமயம், #AllLivesMatter என்ற ஹேஷ்டேக்குக்காக எதிர்மறை விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

'வாஷிங் பவுடர் நிர்மா...' என்ற விளம்பரம் 90-களில் மிகவும் பாப்புலர். அதில் வரும் குழந்தையைப் போலவே உடையணிந்து, அந்த விளம்பர பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் நடிகை ஷெரின். தவிர, "எத்தனை பேருக்கு இந்த விளம்பரம் நினைவிருக்கிறது?" என்று கேட்டு தான் ஒரு 90'ஸ் கிட் என்பதை நிரூபித்திருக்கிறார் ஷெரின்.

நடிகர் பாலசரவணனின் மனைவி ஹேமா 'Hems Home' என ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து நிறைய சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார். தற்போது அதில் அவரின் கணவர் பால சரவணனும் இணைந்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மதுரையில் இருக்கும் ஒரு ஹோட்டலை ரிவ்யூ செய்திக்கிறார் பால சரவணன்.

நிறைய நடிகைகள் நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியவற்றை பிரியத்துடன் வளர்த்து வருகின்றனர். ஆனால், நிவேதா பெத்துராஜுக்கு காகங்களின் மீது காதல் வந்திருக்கிறது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இந்த லாக்டெளனின்போது நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம், காகங்களுக்கு உணவளிப்பதும், அவர்களின் நடத்தையைக் கவனித்து ஆராய்ச்சி செய்வதும்தான். காகங்களுக்கு முதலில் நம்பிக்கை சார்ந்த பிரச்னைகள் இருந்தன. இப்போது நான் அவற்றுக்கு உணவளிக்கிறேன். ஒரு சிறிய கிண்ணத்தில் நிரப்பப்படும் நீர் அவற்றை நிறைவடையச் செய்கிறது. என் வருகைக்காகக் காகங்கள் அனைத்தும் தினமும் ஒரே நேரத்தில் எப்படிக் காத்திருக்கின்றன என்பது ஆச்சர்யப்படுத்துகிறது. காகங்களின் மீது புதிய காதல்" என்று கூறி தான் காகங்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் 'ஃபிரெண்ட்ஷிப்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதை "இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்க இதோ சூப்பர்ஸ்டார், தல, தளபதி, உலக நாயகன் கோட்டையில் நம்ம ஃபிரெண்ட்ஷிப்" என அவரது ஸ்டைலில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த லாக் டெளனில் கார்டனிங் கற்றுக்கொள்ளும் சமந்தா சமையலையும் கற்று வருகிறார். "நான் எல்லோருக்கும் கார்டனிங்கைப் பரிந்துரைக்கிறேன். பூமிக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்தும். ஒரு உணவு எப்படி டேபிளுக்கு வருகிறது என்பதைக் கற்று வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். தவிர, சூப் ஒன்றையும் செய்துள்ளார் சம்மு. "தேங்காய் உடைக்க பல வருடங்களாக முயற்சி செய்கிறேன், முடியவில்லை" என்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார்.

நாகேந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள 'மிளிர்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதுவரை நாம் ஐஸ்வர்யாவை பார்த்ததற்கும் இந்த போஸ்டரில் பார்ப்பதற்கும் அத்தனை வித்தியாசம். சேரும் சகதியுமாக ஆக்ரோஷமான லுக்கில் இருக்கிறார். அவரது கரியரில் இந்தப் படம் கவனிக்கப்படும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு