Published:Updated:

"திடீர்னு சீரியலை விட்டு ஒதுங்கினதுக்குக் காரணம் இருக்கு!" ரீ என்ட்ரியாகும் `திருமதி செல்வம்' அபிதா!

அபிதா

இப்ப சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'கண்ணான கண்ணே' தொடர் உட்பட பல தொடர்களில் நடிக்கக் கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு தவிர்த்தேன்! ஏன்னா... - அபிதா

"திடீர்னு சீரியலை விட்டு ஒதுங்கினதுக்குக் காரணம் இருக்கு!" ரீ என்ட்ரியாகும் `திருமதி செல்வம்' அபிதா!

இப்ப சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'கண்ணான கண்ணே' தொடர் உட்பட பல தொடர்களில் நடிக்கக் கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு தவிர்த்தேன்! ஏன்னா... - அபிதா

Published:Updated:
அபிதா

'திருமதி செல்வம்' தொடரின் மூலம் அனைவரின் மனதிலும் தனக்கென தனி ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் அபிதா. அந்தத் தொடருக்குப் பிறகு சில தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் கொரோனா லாக்டௌனின்போது நடிப்பிற்கு பிரேக் எடுத்துக்கொண்டு கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் புதியதாக ஒளிபரப்பாகவிருக்கும் 'மாரி' என்கிற தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரியாக இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

'திருமதி செல்வம்' அபிதா
'திருமதி செல்வம்' அபிதா

கொரோனா சமயத்தில் தொடர்ந்து சீரியல் பண்ண முடியல. அதனாலதான் பிரேக் எடுத்துக்கிட்டேன். 'மெளன ராகம்' கார்த்திக் சாரோட படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் இப்ப முடிஞ்சிருக்கு. சீரியல் ஷூட்டிங் போன 15 நாட்களுக்கு மேல கமிட்மென்ட் கொடுக்க வேண்டியிருக்கும். எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. ஃபேமிலியையும் கவனிச்சிக்கணும்னு சீரியல் தவிர்த்துட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்திட்டு இருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச தயாரிப்பாளர் இந்தத் தொடருக்காக என்கிட்ட கேட்டாங்க. நீங்க தான் பண்ணனும்னு சொன்னாங்க. அவங்களுக்காகத்தான் சரின்னு சம்மதம் சொன்னேன். இப்ப சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'கண்ணான கண்ணே' தொடர் உட்பட பல தொடர்களில் நடிக்கக் கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு தவிர்த்தேன். அவங்க ரொம்ப வலியுறுத்திக் கேட்டதனால இந்தத் தொடரில் நடிக்க ஓகே சொல்லிட்டேன் என்றவரிடம் இந்தத் தொடரில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்துக் கேட்டோம்.

அபிதா
அபிதா

இத்தனை வயசுக்குப் பிறகு நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன்னுலாம் சொல்ல முடியாதுங்க. இந்த சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கிறேன். ரொம்ப நல்ல கதாபாத்திரம். 6,7 நாட்கள் தான் எனக்கு ஷூட்டிங் இருக்கும். அதனால பசங்களை என் அம்மாகிட்ட விட்டுட்டு வந்துடுவேன். ஒரு வாரம் என்பதால பசங்களும் பர்மிஷன் கொடுத்திருக்காங்க என்றவரிடம் குழந்தைகள் குறித்துக் கேட்டோம்.

இப்ப அவங்களுக்கு ஸ்கூல் லீவு என்பதால் ஷூட்டிங் கிளம்பும்போது நான் ஷூட்டுக்கு போகக் கூடாதுங்கிறதுக்காக ட்ரெயினை மிஸ் பண்ணிடணும், ஷூட் கேன்சல் ஆகிடணும்னு பிரேயர்லாம் பண்ணுவாங்க. ஃபோனை எடுத்து நான் தமிழில் பேச ஆரம்பிச்சிட்டாலே அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க. 'திருமதி செல்வம்' சீரியலில் நான் குழந்தையைத் தூக்கி வச்சு சாப்பாடு ஊட்டுற மாதிரி ஒரு காட்சி வரும். அதைப் பார்த்துட்டு அந்தப் பாப்பாவை மட்டும் தூக்கி வச்சு சாப்பாடு ஊட்டுறீங்க என்னையும் தூக்கி வச்சு சாப்பாடு ஊட்டுங்கன்னு சொல்லுவாங்க. குழந்தைங்க எப்பவும் குழந்தைங்க தானே! அதே மாதிரி, நான் ஏதாவது பொருள் எடுத்துட்டு வரச் சொன்னா அந்த சீரியலில் மட்டும் ஓடி, ஓடி எல்லாருக்காகவும் வேலை பார்க்குறீங்க... இங்க மட்டும் நாங்க செய்யணுமான்னு கேட்பாங்க. இப்ப உள்ள குழந்தைங்க பல விஷயங்கள் நமக்கே சொல்லிக் கொடுக்கிற அளவில் இருக்கிறாங்க. படிப்பு விஷயத்தில் மட்டும் தான் நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் மத்தபடி நாங்க பயங்கர ஃப்ரெண்ட்லி. அவங்க மார்க் கம்மியா வாங்கிட்டா சரி அடுத்த முறை இப்படி வாங்கக் கூடாதுன்னு ரொம்ப திட்டாம, அடிக்காம சொல்லிட்டா போதும் உடனே எங்களுக்கு ரொம்ப நல்ல அம்மா கிடைச்சிருக்கீங்கன்னுலாம் சொல்வாங்க. அவங்களுடைய குறும்பை அவங்க பக்கத்திலேயே இருந்து ரசிக்கவே விரும்புறேன்.

'திருமதி செல்வம்' அபிதா
'திருமதி செல்வம்' அபிதா

என் கணவர், குழந்தைங்கன்னு எல்லாரும் எனக்கு பயங்கர சப்போர்ட். எனக்கு நடிக்கிறது ரொம்பவே பிடிக்கும். அதனால அதை விடுறதுக்கு மனசு வரல. என்னைப் பொறுத்தவரை ஃபேமிலி ஃபர்ஸ்ட்.. ஒர்க் செகண்ட்! ஃபேமிலி இல்லாம எதுவும் கிடையாதுங்கிறதனால ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி பண்ணனும். இப்ப இந்த ஒரு சீரியலில் மட்டும் கவனம் செலுத்தலாம்னு இருக்கேன். தவிர, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கும் திட்டமிட்டிருக்கேன்!' எனப் புன்னகைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism