Published:Updated:

டிக்டாக் ஸ்டார் @hazelshiny20 #TopTamilTikTokers

மு.ராஜேஷ்

டாப் டிக் டாக் ஸ்டார்ஸ்

hazelshiny20
hazelshiny20

`ஒத்தையடிப் பாதையில' என்ற ஒற்றைப் பாடல் போதும் ஷைனியின் முகத்தை தமிழ் டிக்டாக் உலகுக்கு ஞாபகப்படுத்தி விடும். சில நொடிகளே ஓடும் அந்த `ஒத்தையடிப் பாதையில' வீடியோவில் அவர் கொடுத்த ரியாக்‌ஷன்களைப் பார்த்து லைக் பட்டனைத் தட்டினார்கள். அந்தப் பாடல் தனக்கு விருப்பமானது எனக் கூறும் ஷைனி ஒரு நாளைக்கு 20 தடவைக்கு மேல் அந்தப் பாடலைக் கேட்பதாக வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். அடுத்து வந்த `கம்பத்துப் பொண்ணு' ஒரு நாலு லட்சம், ஒத்தையடிப் பாதையில' ஒரு ஆறு லட்சம் என லைக்குகள் குவியத் தொடங்கின. இப்போது டிக்டாக்கில் @hazelshiny20 என்ற ஐடியில் கலக்கிக் கொண்டிருக்கும் அவரை 1.2 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதுவரை மொத்தமாக 12.3 மில்லியன் லைக்குகளை வாங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல யாருப்பா இந்த ஷைனி என்று தேடியவர்களுக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. ஷைனி வேறு யாருமல்ல கும்கி, மைனா என பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமனின் மகள்தான்.

உங்களுக்குப் பிடித்த டிக்டாக் பிரபலத்தின் ஐடியை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!