கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

ட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்!

இர்ஃபான், ஜென்சன் திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
இர்ஃபான், ஜென்சன் திவாகர்

யூடியூப்... நிறைய இளைஞர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக்கியிருக்கிறது. யூடியூப் பஸ் பிடித்து, கோலிவுட் வந்திறங்கி சாதித்துக்கொண்டிருக்கும் ஸ்டார்களுடன் ஒரு சந்திப்பு

IRFAN VIEWS இர்ஃபான்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் இர்ஃபான். ஹோட்டலில் போய் சாப்பிட விரும்புபவர்கள் முதலில் பார்ப்பது இர்ஃபானின் ரிவ்யூவைத்தான்.லட்சக்கணக்்கான சப்ஸ்கிரைபர்களோடு யூடியூபில் கலக்கும் இர்ஃபான் இப்போது சினிமாவிலும் களமிறங்கியிருக்கிறார்.

"நியூ காலேஜ்ல பி.காம் முடிச்சேன்்.சினிமா ஆசை இருந்துச்சு. ஆனா அதுக்கு முன்ன நமக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கிக்கலாம்னு சினிமா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சேன். சேனல் ஆரம்பிக்கலாம்னு தோணுனா எல்லாருக்கும் முதல்ல தோணுறது சினிமா விமர்சனம் தான் போலனு அத நிறுத்திட்டு வேற ஐடியா பிடிக்கலாம்னு தோணுச்சு.

ட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்!

இயல்பிலேயே சாப்பாடு மேல ஆர்வம் இருந்ததால அந்தப் பக்கம் கவனம் திரும்புச்சு. முதல் ஒரு வருஷம் வீட்டுக்கு இந்த வீடியோ மேட்டர் எல்லாம் சுத்தமா தெரியாது. அந்த டைம்ல நமக்கும் எந்த ரீச்சும் இல்லாததால வசதியா இருந்துச்சு. அப்போ தான் இண்டர்நேஷனல் ஃபுட் தேடிப்போகலாம்னு தாய்லாந்து மலேசியானு போக ஆரம்பிச்சேன். முதலைக் கறி, பாம்பு கறின்னு தேடிப்போயி சாப்பிட ஆரம்பிச்சேன். தவளை தேள்னு ஒரு வித்தியாசமான அட்வென்சர் த்ரில் கிடைச்சது. நானும் வெளில தெரிய ஆரம்பிச்சேன். இப்போ சேனலுக்கு நாலாவது வருசம். எங்க போனாலும் இர்ஃபான்னு ஈசியா கண்டுபிடிச்சுடுறாங்க. ஒருநாள் ஜிம்ல பார்த்த டைரக்டர் ஆனந்த் அண்ணா, 'படம் பண்ண போறேன்... ஆஃபிஸ் வா, பேசலாம்'னு கூப்பிட்டார். ஒரு கேரக்டர் சொல்லி, 'உனக்கு செட்டாகும் பண்ணு'னு சொன்னார்.

ட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்!

நாமளா சேனலுக்கு கேமரா எடுத்துட்டு போனப்ப ஒண்ணும் பெருசா தோணல. ஆக்சன் கட்ன்னு நடிக்க நின்னப்ப புதுசா இருந்துச்சு. எல்லாம் மீறி டைரக்டர் சொல்லி குடுத்ததைப் பண்ணிருக்கேன். ஜாலியா எல்லாருக்கும் புடிக்கிற மாதிரியான கேரக்டரா இருக்கும்." என்கிறார்் இர்்ஃபான்

மஞ்ச நோட்டீஸ் ஜென்சன் திவாகர்

`மஞ்ச நோட்டீஸ்' யூடியூப் சேனலிலிருந்து, கோலிவுட்டுக்கு புரொமோஷன் ஆகியிருக்கும் கோவை இளைஞர் ஜென்சன் திவாகர். நிறைய ஹியூமர்... கூடவே அரசியல் நையாண்டி என்பதுதான் ஜென்சனின் அடையாளம். ஓ.பன்னீர்செல்வம், ஹெச்.ராஜா, எடப்பாடி பழனிசாமி கெட்டப் எல்லாமே அக்மார்க் ஸ்ட்ரெஸ்பஸ்டர் வீடியோக்கள்.

ட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்!

``விஸ்காம் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனா வீட்டுல யாரும் அனுமதிக்கலை. பிசினஸ் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன்.எந்த வேலையிலயுமே மனசு ஒட்டலை. கல்யாணம் ஆகிருச்சு. வருமானத்துக்கு பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டாச்சுனு ஆரம்பகாலத்துல எல்லாருக்குமே இருக்கிற அதே கிளிஷேவான போராட்டங்கள்தான் எனக்கும்... இயக்குநராகணும்கிற கனவுலதான் உள்ளே வந்தேன்.`நக்கலைட்ஸ்' சேனலோட டைரக்டர் அப்போ சினிமா எடுக்குற முயற்சியில இருந்தார்.அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து வேலை பார்த்தேன். திடீர்னு ஒருநாள் முக்கியமான கேரக்டர்ல நடிக்க வேண்டிய ஒரு ஆள் அன்னிக்கு ஷூட்டிங்குக்கு வரலை. அதனால என்னை நடிக்கச் சொன்னாங்க.அதுதான் என்னோட முதல் கேமரா பிரவேசம்.ஒல்லியான உடல்வாகு... கேமராவுக்கு செட்டாகாத முகம்னு எனக்குள்ளேயே நிறைய தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. நடிப்பு இயல்பாவே வருதுனு அப்போ செட்ல இருந்த நண்பர்கள் எல்லாம் சொல்லிச் சொல்லி, அசிஸ்டென்ட் டைரக்டர்ங்கிறதையே மறந்து, முழு நேர நடிகனா மாறிட்டேன். `மஞ்ச நோட்டீஸ்' சேனல் ஆரம்பிக்கும்போது பெரிய அளவுல ரீச் இல்லாம இருந்துச்சு. கூட என்னை நம்பி வந்த நண்பர்களுக்கெல்லாம் கொஞ்சம் பயமும் வர ஆரம்பிச்சுது. ஆனாலும் நம்பிக்கையோட வேலை செய்ய ஆரம்பிச்சோம். அதே நேரத்துல விகடன்ல `ஷட்டப் பண்ணுங்க'னு வீடீயோ பண்ண கூப்பிட்டாங்க. நல்ல ரீச் கிடைச்சுது.கலைஞர் டி.வி-யில ஒண்ணரை வருஷம் வரை என்னோட எபிசோட் வந்தது. இப்படி கோவைக்கும் சென்னைக்கும் வாரத்துல நாளு நாள் ஓடிட்டு இருந்தேன். ஒருநாள் சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலீதா ஷமீம், `இந்த லாக்டௌன்ல என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரே இந்த சேனல் தான்'னு `மஞ்ச நோட்டீஸ்' சேனலை ஷேர் பண்ணியிருந்தாங்க. திடீர்னு ஒரு நாள் போன்ல கூப்பிட்டு நிறைய நம்பிக்கையான வார்த்தைகள் சொன்னாங்க. அந்த நேரத்துல அது அவ்வளவு எனர்ஜியா இருந்துச்சு.கூடவே அவங்க இயக்கப்போற படத்துல ரொம்ப முக்கியமான ஒரு ரோல் குடுத்திருக்காங்க... கண்டிப்பா பிரேக் கிடைக்கும்னு நம்புறேன். அதுபோக பி.வி.ஷங்கர் சார் டைரக்‌ஷன்ல பாரதிராஜா சாரும், ஜி.வி.பிரகாஷ் சாரும் நடிக்கிற படத்துலயும் கமிட் ஆகியிருக்கேன்.’’

ட்ரெண்டிங் : சினிமாவில் கலக்கும் யூடியூப் ஸ்டார்ஸ்!

``அரசியல் நய்யாண்டி பண்ணும்போது நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாச்சும் இருக்கா?’’

``ரொம்பவே மறக்க முடியாத சம்பவம்னா, அமைச்சர் ஜெயக்குமார் பத்தி ஒரு வீடியோ பண்ணியிருந்தோம். அதோட புரோமோவையும் ஷோவையும் முழுசா பார்த்துட்டு அமைச்சர் ஜெயக்குமாரே டைரக்டருக்கு போன் பண்ணி `அந்தப் பையன் ரொம்ப நல்லா பண்ணியிருக்கான் எனக்கே சிரிப்பு வர்ற அளவுக்குப் பண்ணியிருக்கான். கண்டிப்பா ஒரு நாள் பார்க்கணும்'னு சொல்லி பேசியிருக்காரு. அதைத்தான் மறக்க முடியாத ஒரு பாராட்டா பார்க்குறேன்.’’