Published:Updated:

``கலக்கப்போவது யாரு தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு வெற்றி மாறன் சார் சொன்னார்!" - TSK சரவணன்

TSK சரவணன்

`விடுதலை' படத்துக்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்க என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் படத்தில் வருகிற சின்ன, சின்ன கேரக்டருக்கு என் வாய்ஸ் செட்டா இருக்கும்னு சார் சொல்லியிருக்காங்க.

``கலக்கப்போவது யாரு தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு வெற்றி மாறன் சார் சொன்னார்!" - TSK சரவணன்

`விடுதலை' படத்துக்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்க என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் படத்தில் வருகிற சின்ன, சின்ன கேரக்டருக்கு என் வாய்ஸ் செட்டா இருக்கும்னு சார் சொல்லியிருக்காங்க.

Published:Updated:
TSK சரவணன்

தனது எதார்த்தமான டைமிங் காமெடி மூலமும், மிமிக்ரி மூலமும் மக்கள்மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் TSK சரவணன். சமீபத்தில், `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் இவருடைய நண்பர் அசாருடன் இணைந்து போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் தட்டிச் சென்றார். இவர் பிரபல இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்தது குறித்து ஒரு பதிவு ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,

TSK சரவணன்
TSK சரவணன்

`என்னுடைய வாழ்க்கையில் இந்த சந்திப்பை எப்பொழுதும் என்னால் மறக்கவே முடியாது. என் வேலையை நீங்கள் பாராட்டினது எனக்கு இன்னும் அதிக எனர்ஜியை கொடுத்திருக்கு. ரெண்டு மணி நேரம் உங்க கூட இருந்தது லைஃப் டைம் மொமன்ட்! உங்களுடைய நேரத்தைக் கொடுத்ததற்கு நன்றி!' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

`சாருடைய `விடுதலை' படத்துக்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்க என்னை கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் படத்தில் வருகிற சின்ன, சின்ன கேரக்டருக்கு என் வாய்ஸ் செட்டா இருக்கும்னு சார் சொல்லியிருக்காங்க. அதனால டெஸ்ட்டிற்கு கூப்பிட்டாங்க. அப்ப நான் ஒரு ஈவன்ட்டுக்காக கத்தாரில் இருந்தேன். அங்கிருந்து வந்த மறுநாளே வெற்றிமாறன்கிட்ட கிளம்பி போயிட்டேன்.

TSK சரவணன்
TSK சரவணன்

நான் போனப்போ காலையில் சார் அங்க இல்லை. அதனால வாய்ஸ் டெஸ்ட் மட்டும் கொடுத்துட்டு வந்துட்டேன். சாயங்காலம் சார் வந்திருக்காருன்னு சொல்லவும் அவரைப் பார்க்கிறதுக்காக நானும், அசாரும் போனோம். 

அவர் காமெடி ஷோவுக்கு மிகப்பெரிய ஃபேன். `கலக்கப்போவது யாரு?' ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிச்சீங்க? என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரே கலக்கப்போவது யாரு தான்னு சொன்னார். காமெடி நிகழ்ச்சிகள் அவர் ரொம்ப விரும்பி பார்ப்பார். அவர்தான் கலக்கப்போவது யாரு பார்க்கச் சொல்லி தனுஷ் சாருக்கு ரெஃபர் பண்ணியிருக்கார். அதன் பிறகுதான் தனுஷ் சார் kpy பார்த்துட்டு என்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசினார். 

ஃப்ரெண்ட்லியா நிறைய விஷயங்கள் எங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டார். நான் தீவிரமான வெற்றிமாறனுடைய ரசிகன். அவர்மீது எப்போதும் மரியாதை உண்டு. அவருடைய பேச்சு, ஆளுமை, ஸ்டைல், உணவு பழக்கவழக்கம்னு எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவரிடம் அவருடைய படத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா எனக் கேட்டோம்.

TSK சரவணன் - அசார்
TSK சரவணன் - அசார்

யாருக்குத்தான் அவருடைய படத்தில் நடிக்க ஆசை இருக்காது. அதெல்லாமே கதைக்களத்தை சார்ந்தது.  ஆனா, இந்த சந்திப்பு வாய்ஸ் டெஸ்ட்டிற்கான சந்திப்பு மட்டும்தான்!' என்றார்.