சினிமா
Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”

டியூப்லைட்’ சேனல் ராஜா.
பிரீமியம் ஸ்டோரி
News
டியூப்லைட்’ சேனல் ராஜா.

படத்துக்கு எந்த அளவுக்கு டெக்னிக்கல் யூனிட் தேவைப்படுமோ அதே அளவுக்கான யூனிட்டை நாங்களும் பயன்படுத்துறோம்.

ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்தச் சேனலை ஆரம்பிச்சோம். தொடர்ந்து டிரெண்டிங்ல எங்களுடைய வீடியோஸ் வந்தப்போ கஷ்டப்பட்டதுக்கான பலன் கிடைச்சதுன்னு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு!’’ என நம்பிக்கை ததும்பப் பேசத் தொடங்கினார், ‘டியூப்லைட்’ சேனல் ராஜா.

காதலை மையமாகக் கொண்டு சின்னச் சின்ன கான்செப்ட்களில் வீடியோக்கள் பதிவிட்டு பலரது பாராட்டைப் பெற்ற தளம் ‘Tube Light.’ இவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ‘நிறைமாத நிலவே’ என்கிற கான்செப்ட் வீடியோக்களை அடிக்கடி டிரெண்டிங்கில் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட எல்லா எபிசோடுகளுமே டிரெண்டிங்கில் இடம்பெற்றதுதான் இவர்களுடைய சேனலின் தனித்துவம். இந்தச் சேனலின் வெற்றிக்கதை குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார் ராஜா.

ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”

‘‘நடிக்கணுங்கிற ஆசையில் விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு வந்தேன். ஆனா, எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை. அப்போதான் ‘நம்மளாலதான் நடிக்க முடியலை. நடிக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்கு நாம ஏன் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது’ன்னு தோணுச்சு. அதுக்காக ‘சிறப்பா செய்வோம்'னு ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். கரூரில் இருந்து சரவணன் என்கிற நண்பரும், மதுரையிலிருந்து வெங்கடேஷ் என்கிற நண்பரும் பார்ட்னராக என் கூட வந்து சேர்ந்தாங்க. மூணு பேரும் சேர்ந்து ‘SVS என்டர்டெயின்மென்ட்' என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி ‘Tube Light' என்கிற சேனலை ஆரம்பிச்சோம்.

ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”

18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருப்பவர்கள் தான் எங்களுடைய சேனலை அதிகம் பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்த மாதிரியான கான்செப்ட்களைத் தேர்வு செய்து, அதற்கேற்ற மாதிரி கதைகளை ரெடி பண்ணுவோம். படத்துக்கு எந்த அளவுக்கு டெக்னிக்கல் யூனிட் தேவைப்படுமோ அதே அளவுக்கான யூனிட்டை நாங்களும் பயன்படுத்துறோம். குவாலிட்டியான வீடியோ மேக்கிங் எங்களோட பிளஸ். ‘நிறைமாத நிலவே' சீரிஸ் கடைசி எபிசோடிற்கு ஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணினோம். சேனல் மூலமா கிடைக்கிற பணத்தைத் தரமான வீடியோக்கள் உருவாக்கிறதுக் காகவே அதிகம் செலவழிக்கிறோம். இப்போ எங்க டீம்ல 75 பேர் இருக்காங்க. போன வாரம் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் எங்க சேனலுக்கு வந்ததுக்காக எல்லோரும் சேர்ந்து கொண்டாடினோம். ஆரம்பத்தில் வீடியோ ரீச் ஆகுறதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். இப்போ எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் ரீச் கிடைக்குது. அதனால ஒவ்வொரு வீடியோ போடும்போதும் ரொம்பவே கவனமா இருக்கோம்.

ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”
ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”
ஷேர்பட்டா பரம்பரை: “நடிக்க வந்தேன்... இப்போ நடிக்க வைக்கிறேன்!”

‘நிறைமாத நிலவே' கடைசி எபிசோடில் ஹீரோ, ஹீரோயினுக்குக் கல்யாணம் ஆகி அவங்க இரண்டு பேரும் கார்ல போகிறப்போ அவங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த சீனை நைட் 10 மணிக்கு ஹைவேயில் ஷூட் பண்ணிட்டிருந்தோம். நான்தான் காரை ஓட்டினேன். காரில் டைரக்டர், ஆர்ட்டிஸ்ட் இரண்டு பேர், கேமராமேன் இருந்தாங்க. அது ஆட்டோமேட்டிக் கார்... ஓட்டிட்டிருக்கும்போது திடீர்னு கார் பேனட் ஓப்பன் ஆகி நிஜமாகவே ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. நல்லவேளை யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படல. காருக்கு மட்டும்தான் சேதாரம். அதைச் சரிபண்றதுக்கே 55,000 ரூபாய் செலவாகிடுச்சு” என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.

“எங்களுடைய புரொடக்‌ஷனில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மாதிரியான ஆர்ட்டிஸ்ட்களை வச்சு ஒரு படம் பண்ணணும். அதுதான் இப்போதைக்கு எங்களுடைய இலக்கு!” என சிரிக்கிறார், ராஜா.