Published:Updated:

``இவர் வீடியோவை நான் பார்த்ததே இல்ல!" - வீ.ஜே ஆஷிக் - சோனு `டூயட்' பேட்டி

VJ Ashiq & Sonu interview
VJ Ashiq & Sonu interview

புதிதாக திருமணமான இந்த ஜோடியிடம் பேசினோம்.

கடந்த ஜூன் 16-ம் தேதி, யூடியூப் தொகுப்பாளர் ஆஷிக் மற்றும் சோனு திருமணம் நடைபெற்றது. யூடியூபில் பிரபலமான `ஹேண்ட்பேக் சீக்ரெட்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கொண்டுள்ள வி.ஜே.ஆஷிக் தற்போது `நான்தான்பா ஆஷிக்' நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். புதிதாக திருமணமான இந்த ஜோடியிடம் பேசினோம்.

``எப்படி இருக்கிறது கல்யாண வாழ்க்கை?"

``நல்லா இருக்கு, சாப்பிட்டுக்கிட்டே இருக்கோம். ஊருல ஒவ்வொரு வீடா விருந்து சாப்பாடு'' என்று சோனு சொல்ல, ``ஆமா, ஏற்கெனவே ரொம்ப பெருசா இருக்குற நாம இன்னும் ஊதிடக் கூடாதுன்னு சென்னை ஓடி வந்துட்டோம்'' என்று சிரிக்கிறார் ஆஷிக்.

VJ Ashiq & Sonu interview
VJ Ashiq & Sonu interview

``எப்படி நடந்தது உங்க அரேஞ்டு மேரேஜ்?"

``எங்க கல்யாணம் சுத்தமான லாக்டௌன் கல்யாணம். போன லாக்டௌன்ல டல்கோனா காபி மட்டும் இல்லாம, மேட்ரிமோனி ஆப்களையும் ட்ரை பண்ணிணோம்'' என்ற ஆஷிக், ``அதை டேட்டிங் ஆப் மாதிரி நானும் என் தம்பியும் யூஸ் பண்ணிட்டு இருந்தோம். ஆனா யாரையும் பிடிக்கல. இவங்க புரொஃபைல்ல `பியானிஸ்ட்'னு போட்டிருந்தது. பியானிஸ்டா இருக்கறவங்க மீடியாவையும் புரிஞ்சிப்பாங்கனு நெனச்சு இவங்ககிட்ட பேசினோம். அதுக்கு அப்புறம் எந்தப் பொண்ணும் பார்க்கல. வீடியோ கால்லதான் பொண்ணு/மாப்பிள்ளை எல்லாம் பார்த்துக்கிட்டோம்'' என்ற ஆஷிக்கைத் தொடர்ந்தார் சோனு.

``அப்போதான் காலேஜ் முடிச்சு ஃப்ரீயா இருந்தேன். வீட்டுல மாப்பிள்ளை பார்த்தாங்க. மீடியால இருக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம். நிறைய போராடி இந்த அளவு ஜெயிச்சிருக்கிறவர் நம்மளையும் நல்லா பார்த்துக்குவார்னு நம்பிக்கை வந்தது'' என்கிறார்.

மனைவி குறித்து ஆஷிக் சொல்லும்போது, ``சோனு ரொம்ப ஹைப்பர் பெர்சன். ஏதாவது சின்னதா வாங்கிக் கொடுத்தாலே சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க. ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாகூட `வாவ் ஐஸ்கிரீமா!’ அப்படினு ரியாக்ஷன் கொடுப்பாங்க. இவங்கள சமாதானப்படுத்த, ஹேப்பியா இருக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்” என்கிறார்.

``ஆஷிக் வீடியோ எல்லாம் பார்த்திருக்கீங்களா?"

``மாப்பிள்ளை பார்த்தப்போ, இவரை யாருனே எனக்குத் தெரியாது. நான் அவர் நிகழ்ச்சிகள் எதுவும் பார்த்ததே இல்ல. ஆனா, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் இவரை தெரிஞ்சு இருந்தது. `ஏய்... இவரா?'னு கேட்டாங்க. மாப்பிள்ளை பார்த்ததுக்கு அப்புறம்தான் இவரோட ஒவ்வொரு வீடியோவா பார்க்க ஆரம்பிச்சேன்'' என்கிறார் சோனு.

``என்னை இவங்களுக்குத் தெரியாம இருந்ததுதான் நல்லது'' என்று சிரித்த ஆஷிக், ``தெரிஞ்சவங்க ஆஷிக் மேல பெரிய எதிர்பார்ப்பு வெச்சிருப்பாங்க. ஆனா, தெரியாததுனால எங்களால ஃப்ரெஷ்ஷா பழக முடிஞ்சது. மீடியான்னா பொண்ணு கொடுக்க மாட்டாங்க. இவங்க அப்பா பெரிய மனசு பண்ணி கொடுத்துட்டாரு'' என்கிறார்.

``பேச்சிலர்ஸ் பார்ட்டி நைட்... எப்படி இருந்தது?"

``நான் என் ஃப்ரெண்ட் ஆகாஷ் கூட இருந்தேன். `இதுதான் நாம கடைசியா சேர்ந்து இருக்குற நைட், இனி குடும்பஸ்தன் ஆகிடுவ, என் கூட சுத்த மாட்ட'னு இப்படியெல்லாம் அவர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. சோகம்னு சொல்ல முடியாத ஒரு உணர்வு இருந்தது. அதோட, எங்களுக்கு நிச்சயம் பண்ணி ஒரு வருஷம் ஆனதால நல்ல பழக்கம். இவ்ளோ நாள் போன்ல பேசிக்கிட்டு இருந்தவங்க, இப்போ நேர்ல பழகுறோம்னு தோணுச்சு'' என்ற ஆஷிக்குடன் சேர்ந்துகொண்டார் சோனு.

``ரெண்டு பேருக்கும் சண்டையே வராது, ஆனா ஏதாவது சின்னச் சின்ன பிரச்னை வர்றது சகஜம்தானே? அந்த மாதிரி சமயத்துல விட்டுக்கொடுத்து போக ரெண்டு பேருமே தயாரா இருக்கோம். எந்த சண்டையும் ஒரு நாளுக்கு மேல நீடிக்காது...”னு பெருமையானு சொல்லிக்கிறாங்க சோனுவும் ஆஷிக்கும்.

``கல்யாணத்துக்கு விஜய் சேதுபதி வந்திருந்தாரே..?"

``என்கிட்ட இவர் அதைச் சொல்லவே இல்ல... சர்ப்ரைஸா வெச்சிருந்தார்'' என்கிறார் சோனு. ``நான் அப்போ, சாப்பிடப் போகலாம்னு சொல்லிட்டு இருந்தேன். அப்போதான், `விஜய் சேதுபதி அண்ணா வர்றாரு'னு சொன்னாரு. ஜாலி ஆகிட்டேன். செம்மயா இருந்தது அவர் வந்ததும். வாய `ஆ'ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். சந்தோஷத்துல எனக்கு ஒண்ணுமே புரியல...'' என்கிறார் சோனு.

``சின்ன பசங்க எல்லாம் `மாஸ்டர்' பட எஃபக்ட்ல `பவானி வர்றார், பவானி வர்றார்'னு ஓடி வந்தாங்க. அப்புறம்... சிம்பு அண்ணா...''

சிவகார்த்திகேயனின் ஸ்வீட்டான வாய்ஸ் நோட், சிம்பு மெமரீஸ், மற்றும் ஆஷிக் & சோனுவின் ஃபன் ஆன விளையாட்டுகளுடன் க்யூட்டான வீடியோ நேர்காணலை கீழ்வரும் லிங்க்குகளில் அவள் விகடன் யூடியூபில் பாருங்கள்...

அடுத்த கட்டுரைக்கு