Published:Updated:

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமண ஒளிபரப்பு; OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தமா?!

கத்ரீனா கைஃப்-விக்கி
News
கத்ரீனா கைஃப்-விக்கி

பிரபலங்கள் தங்கள் திருமணக் காட்சிகளையும், படங்களையும், பத்திரிகைகளுக்கும், சேனல்களுக்கும் விற்பது மேற்குலக நாடுகளில் வழக்கமே. அதை பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வமே, திருமணக் காட்சிகள் பிசினஸ் ஆகும் இந்த ஒப்பந்தத்திற்குக் காரணம்.

இந்தி நடிகை கத்ரீனா கைஃப், இந்தி நடிகர் விக்கி கௌஷல், வரும் டிசம்பர் 9-ம் தேதி நடக்கவிருக்கும் தங்கள் திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையை, ஒரு OTT நிறுவனத்திற்கு அளிக்கவிருக்கிறார்கள் என்றும், அதற்காக அந்த OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எனவே, வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கத்ரீனா மற்றும் விக்கி திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஸ்டார் ஜோடி, தங்கள் திருமணத்துக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்களை அழைக்கிறார்கள். மேலும் அவர்களிடமும், முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் NDA (Non Disclosure Agreement) ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர்; அந்த ஒப்பந்தத்தில், `விருந்தினர்கள் திருமணத்துக்கு தங்கள் வருகை குறித்து வெளியே பகிரக்கூடாது, புகைப்படம், ரீல்கள், வீடியோக்கள் எடுக்கக் கூடாது, இருப்பிடப் பகிர்வு (Location sharing) செய்யக் கூடாது, சமூக ஊடகங்களில் திருமண நிகழ்வுப் படங்களைப் பகிரக்கூடாது’ போன்ற விதிகள் அடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் ராஜஸ்தானின் சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட்டில் (Six Senses Fort) நடக்கவுள்ளது. ராஜ்வாடி பாணியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. திரைத்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் ஜோடியின் திருமணம் என்பதால், மக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாக்களான சங்கீத் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கும், மெஹந்தி விழா டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும், அதைத் தொடர்ந்து திருமண நிகழ்வு மற்றும் சிறப்பு வரவேற்பு என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று அறியப்படுகிறது. இந்த ஸ்டார் ஜோடி தங்களது திருமண நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் மற்றும் கொண்டாட்டங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வரும் நிலையில், கத்ரீனா மற்றும் விக்கியிடம் அவர்களின் திருமணக் காட்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்ய, OTT நிறுவனம் ஒன்று 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்பதுதான் இப்போது இவர்கள் திருமணம் பற்றிய ஹாட் நியூஸ்.

பிரபலங்கள் தங்கள் திருமணக் காட்சிகளையும், படங்களையும், பத்திரிகைகளுக்கும், சேனல்களுக்கும் விற்பது மேற்குலக நாடுகளில் வழக்கமே. அதை பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வமே, திருமணக் காட்சிகள் பிசினஸ் ஆகும் இந்த ஒப்பந்தத்திற்குக் காரணம்.

இந்நிலையில், பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா, கத்ரீனா - விஷால் திருமண ஒப்பந்தம் பற்றிய தன் செய்தியில், `ஒரு முக்கியமான ஸ்ட்ரீமிங் நிறுவனம், இந்தியாவிலும் அதே டிரெண்டைக் கொண்டுவர திட்டமிட்டு, கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷலுடன், அவர்களின் திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெற ரூ.100 கோடி வழங்க ஒப்பந்தம் பேசியுள்ளது. அதற்கு இந்த ஜோடியும் ஒப்புக்கொண்டால், அவர்கள் திருமணத்தின் அனைத்தும் நிகழ்ச்சிகளும் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தால் தங்கள் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்; எடிட் செய்யப்பட்டு படமாக வெளியிடப்படும். காத்ரீனா - விஷால் ஜோடி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவும் வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

கத்ரீனா-விக்கி கௌஷல்
கத்ரீனா-விக்கி கௌஷல்

இதற்கிடையில், கத்ரீனா - விக்கி ஜோடி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஜெய்ப்பூரை அடைந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு விருந்தினருக்கும் ரகசியக் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன; மொபைலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; அவர்களால் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடவோ, திருமண நிகழ்விடத்தை சமூக ஊடகங்களில் வெளியிடவோ முடியாது என்கின்றன செய்திகள்.

ட்ரெண்டு புதுசு!