Published:Updated:

நமீதா பிக்பாஸில் இருந்து வெளியேற கொரோனாதான் காரணமா?

``எங்களின் உரிமைகளை, கோரிக்கைகளை இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 100 நாள்களும் கேட்டுக்கொண்டே தான் இருப்பேன்" என்றார் நமீதா.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விஜய் டிவியில் கடந்த 3-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, முதல் திருநங்கையாக மாடலும் நடிகையுமான நமீதா மாரிமுத்து களமிறங்கினார்.

``எங்களின் உரிமைகளை, கோரிக்கைகளை இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 100 நாள்களும் கேட்டுக்கொண்டேதான் இருப்பேன். சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா போராடியதற்கு நிகராக எங்கள் திருநங்கைகளின் போராட்டமும் இருக்கிறது'' என்று ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக நமீதாவின் குரல் பிக்பாஸ் வீட்டில் ஒலித்தது. மேலும் `ஒரு கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் நமீதா, தான் கடந்து வந்த பாதையைச் சொல்லி, பலரின் இதயத்தையும் தன் வசம் ஆக்கினார்.

பிக்பாஸ் நமீதா
பிக்பாஸ் நமீதா
பிக் பாஸ் - 7 | நமீதா வெளியேறியது ஏன்… ஓட்டு போடும் மக்களிடம் உண்மைகள் சொல்வார்களா?

நமீதா பிக்பாஸ் வீட்டில் 100 நாள்கள் பயணம் செய்தால் மக்கள் மனதில் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் . மூன்றாம் பாலினத்தவர் பற்றிய பார்வை மாறும் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், `தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்' என பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆனால் எதற்காக வெளியேறினார் என்பது பற்றி பிக்பாஸ் தரப்பில் இருந்து காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. சகபோட்டியாளர்கள் நமீதா பற்றி பேசுவது போன்ற சீன்களோ, புரோமோவோ இதுவரை வெளியாகவில்லை.

ஆனால், சமூக வலைதளங்களில், நமீதா உடல்நிலை பிரச்னை காரணமாக வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகின. நமீதாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் , பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், 14 நாள்களுக்குப் பிறகு, மீண்டும் போட்டியாளராகத் தொடர்வார் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்னையின் காரணமாக நமீதா வெளியேறி உள்ளார் என்றும் ஒரு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

நமீதாவிற்கு கொரோனா என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக்கொள்வது உட்பட, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்வதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. உண்மையில் என்ன காரணத்திற்காக நமீதா வெளியேறியுள்ளார் என்பது போகப் போகத் தான் தெரியும்.

பிக்பாஸ் நமீதா
பிக்பாஸ் நமீதா

இது குறித்து விளக்கம் கேட்க அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, ``என்ன நடந்ததுனு எங்களுக்கும் தெரியல, நமீதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்களும் விசாரிச்சுட்டுதான் இருக்கோம்'' என்று தெரிவித்தார்கள். உங்களை ஏற்றுக்கொள்ள கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு