Published:Updated:

"பல கோடிகளைவிட ரசிகர்கள் நலனே முக்கியம்"- பான் மசாலா விளம்பரங்களுக்கு நோ சொன்ன KGF நடிகர் யஷ்

நடிகர் யஷ்

"தனிப்பட்ட அளவில் பெரிய லாபம் இருப்பினும் யஷ் நடிக்க மறுத்தது அவரின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காகத்தான்." - அருண் பானர்ஜி

"பல கோடிகளைவிட ரசிகர்கள் நலனே முக்கியம்"- பான் மசாலா விளம்பரங்களுக்கு நோ சொன்ன KGF நடிகர் யஷ்

"தனிப்பட்ட அளவில் பெரிய லாபம் இருப்பினும் யஷ் நடிக்க மறுத்தது அவரின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காகத்தான்." - அருண் பானர்ஜி

Published:Updated:
நடிகர் யஷ்
நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் நடித்த பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரம் பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார் அக்ஷய் குமார். தற்போது, நடிகர் யஷ் தனக்கு வந்த பல கோடி மதிப்பிலான புகையிலை பொருள்களுக்கான விளம்பரத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

புகையிலை மற்றும் ஏலக்காய் தொடர்பான பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க யஷ்ஷிடம் கேட்கப்பட்டது. அந்த வாய்ப்பைதான் தற்போது நிராகரித்து இருக்கிறார் KGF நடிகர். இதனை உறுதி செய்துள்ள அவரின் மீடியா ஏஜென்சியான Exceed Entertainment தலைவர் அருண் பானர்ஜி, "பான் மசாலா போன்ற பொருள்கள் மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. உயிருக்கு ஆபத்தாகக்கூட முடியலாம். தனிப்பட்ட அளவில் பெரிய லாபம் இருப்பினும் யஷ் நடிக்க மறுத்தது அவரின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்காகத்தான். உண்மையான ஹீரோவின் முடிவு இது.

அக்ஷய் குமார் விளம்பரத்தில்...
அக்ஷய் குமார் விளம்பரத்தில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரின் இந்திய அளவிலான இமேஜை பயன்படுத்தி சரியான விஷயத்தைச் சொல்வதற்கான வாய்ப்பாக இதனை பார்க்கிறோம். எங்களுடைய நேரத்தையும் வியர்வையையும் சரியான பிராண்டுகளுக்கு செலவழிப்பதே பொருத்தமாக இருக்கும், அப்போதுதான் நீண்ட நாள்களுக்கு பணி செய்ய முடியும்."

சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்த விமல் பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து விலகியுள்ளார். அஜய் தேவ்கன், ஷாரூக் கான் உடன் இணைந்து புகையிலை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். புகையிலை பொருள்களை பயன்படுத்த கூடாது என அரசின் சார்பில் விளம்பரம் செய்து வந்த அக்ஷய்குமாரே அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்காக மன்னிப்பு கேட்ட அக்ஷய் குமார், "அதீத கவனத்துடன் அடுத்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism