Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”

ஆதி & மகி.
பிரீமியம் ஸ்டோரி
ஆதி & மகி.

நாங்க இரண்டு பேருமே கோயம்புத்தூர் தான். காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டோம். என் வீட்டில் எங்க திருமணத்திற்கு சம்மதிக்கலை.

ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”

நாங்க இரண்டு பேருமே கோயம்புத்தூர் தான். காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டோம். என் வீட்டில் எங்க திருமணத்திற்கு சம்மதிக்கலை.

Published:Updated:
ஆதி & மகி.
பிரீமியம் ஸ்டோரி
ஆதி & மகி.

"இதுவரை எங்களுக்குப் பெருசா எந்த அங்கீகாரமும் கிடைச்சதில்லை. ஆனாலும், அதையெல்லாம் யோசிக்காம உழைச்சதனாலதான் சக்சஸ்ஃபுல் யூடியூபர்ஸ் வரிசையில் எங்களுக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு!' எனப் புன்னகைக்கிறார்கள், ஆதி & மகி.

ஜாலியாக பாசிட்டிவ் எண்ணத்துடன் கலகலப்பான வீடியோக்கள் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ஏற்ற தளம் adi & mahi யூடியூப் சேனல்.

இன்று பலரும் ஜோடியாக இணைந்து யூடியூப்பில் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் முன்னோடியாக முதன்முதலில் தமிழில் ஜோடியாக யூடியூப் தளத்தில் வீடியோ பதிவிட்ட பெருமை இவர்களையே சேரும், முதலில் பேசத் தொடங்கினார் ஆதர்ஷ்.

ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”

“ஆதர்ஷ் என்கிற என் பெயரிலிருந்து ஆதியையும், மரகதவள்ளி@மகாலட்சுமி என்கிற இவங்களுடைய பெயரிலிருந்து மகியையும் தேர்ந்தெடுத்து அதையே எங்களுடைய சேனலுக்குப் பெயராக வச்சிட்டோம். இது மட்டும்தான் என்னுடைய கிரியேட்டிவிட்டி. சேனலைப் பொறுத்தவரை எல்லா கிரியேட்டிவிட்டிக்கும் மகிதான் சொந்தக்காரி.

நாங்க இரண்டு பேருமே கோயம்புத்தூர் தான். காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டோம். என் வீட்டில் எங்க திருமணத்திற்கு சம்மதிக்கலை. நண்பர்கள் மத்தியில்தான் எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. திருமணம் முடிஞ்சு நாங்க சென்னைக்கு வந்தப்போ எங்களுக்கு இரண்டு, மூணு ஃப்ரெண்ட்ஸ்தான் இருந்தாங்க. எந்த சொந்தமும் இல்லை. ரொம்ப வெறுமையா இருந்துச்சு. அந்த வெறுமையைப் போக்கிக்க தான் யூடியூப் சேனலே ஆரம்பிச்சோம்” என்ற ஆதியைத் தொடர்ந்து மகி பேசினார்.

ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”

“நிறைய ஆங்கில யூடியூப் சேனல்கள் பார்த்துட்டிருப்போம். எனக்கு சமையல் ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் நல்லாவே சமைப்பேன். அதனால முதலில் எனக்குன்னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். அதுல எனக்குப் பிடிச்ச டிஷ்களை சமைச்சுக் காட்டுவேன். இப்போ வரைக்குமே அந்த வீடியோக்கள் பெரிய அளவில் ரீச் ஆகலை. இருந்தாலும் எனக்குப் பிடிச்சதைப் பண்ணிட்டிருந்தேன். அப்போதான் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து vlog மாதிரி பண்ணலாம்னு பிளான் பண்ணினோம். 2018-ல் ஆதி & மகி சேனலை ஆரம்பிச்சோம். அந்தச் சமயம் தமிழில் யாரும் ஜோடியா வீடியோஸ் பண்ண ஆரம்பிக்கலை. எங்களுக்குப் பிடிச்சதையெல்லாம் வீடியோவாக எடுக்க ஆரம்பிச்சோம். நாங்க இரண்டு பேரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தோம். சமீபத்தில்தான் நான் வேலையை விட்டேன். கிரியேட்டிவ் ஆக யோசிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால, கேமரா, எடிட்டிங்னு எல்லா வேலைகளையும் நானே கவனிச்சிக்கிறேன். சொந்தம் வேணும்னுதான் இந்த சேனலை ஆரம்பிச்சோம். அந்த ஆசை எங்களுக்கு நிறைவேறிடுச்சு. இந்த சேனல் மூலமா எங்களுக்கு நிறைய குடும்பங்கள் கிடைச்சிருக்காங்க” என்றதும் ஆதி தொடர்ந்தார்.

“ஒரு தடவை 24 மணி நேர கார் சேலஞ்ச் வீடியோ எடுத்தோம். அதாவது, 24 மணி நேரமும் காரிலேயே இருக்கணும். காரை விட்டு இறங்கக்கூடாது. அதான் கான்செப்ட். அந்த வீடியோ எடுத்துட்டு இருக்கும்போது நைட் சிக்னலில் நின்னுட்டிருந்தோம். அப்போ திடீர்னு ஒருத்தர் எங்களுடைய கார் கிளாஸைத் தட்டினார். யாருன்னு கேட்டப்போதான் அவர் எங்களுடைய சப்ஸ்கிரைபர்னு தெரிஞ்சது. எங்கேயோ எங்களைப் பார்த்துட்டு ஃபாலோ பண்ணிட்டு வந்து பேசிட்டுப் போனார். அந்தத் தருணம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”
ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”
ஷேர்பட்டா பரம்பரை: “யூ ட்யூப் மூலமா சொந்தங்கள் கிடைச்சாங்க!”

புதுசா எங்களுடைய பேஜுக்கு வருகிற பலரும் நீங்க ரொம்ப தனித்துவமா பாசிட்டிவ் கன்டென்டாகப் பண்றீங்க. ஆனா, நீங்க அவ்வளவு ரீச் ஆகாதது வருத்தமா இருக்குன்னு எங்களுக்கு பர்சனலா மெயில் அனுப்புவாங்க. அதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாய் இருக்கும். இந்த யூடியூப் தளத்துக்குள் நாங்க வந்த நோக்கம் எங்களுக்கு நிறைவேறிடுச்சு. பணம், புகழ் சம்பாதிக்கணுங்கிறது எங்களுடைய நோக்கம் இல்லை. அது கிடைக்கும்போது அதை ஏத்துக்குவோம். ஆனா, அது இல்லைன்னு என்னைக்கும் அதைத் தேடி ஓடியதில்லை.

வாரத்தில் இரண்டு வீடியோஸ் போடுவோம். எங்க சப்ஸ்கிரைபர்ஸ் கேட்டதனால் இனிமேல் மூணு வீடியோஸ் போடலாம்னு முடிவெடுத்திருக்கோம். நாங்க ரசிக்கிற இடங்களை, எங்களுக்குப் பிடிச்ச இடங்களை, நாங்க பகிர்ந்துக்க நினைக்கிற கதைகளை நிச்சயம் தொடர்ந்து எங்க பார்வையாளர்களுக்குக் கொடுத்துட்டே இருக்கணுங்கிறது மட்டும்தான் இப்போதைக்கு எங்க இலக்கு!’’ என்றவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார் மகி.