Published:Updated:

Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!

ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
ஜனனி

ஜனனி அவங்க அம்மாவைப் பற்றி கம்ப்ளைன்ட் பண்ற வீடியோ பலருக்கும் பிடிச்சிருந்தது. அந்த வீடியோ வைரல் ஆச்சு.

Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!

ஜனனி அவங்க அம்மாவைப் பற்றி கம்ப்ளைன்ட் பண்ற வீடியோ பலருக்கும் பிடிச்சிருந்தது. அந்த வீடியோ வைரல் ஆச்சு.

Published:Updated:
ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
ஜனனி

``எல்லாருடைய வீட்டிலும் அப்பா - பொண்ணுக்கிடையே குறும்புத்தனமான உரையாடல்கள் நிச்சயம் இருந்திருக்கும். எங்க ரெண்டு பேருக்கிடையே நடக்கும் எதார்த்தமான உரையாடல்களைப் பதிவு செய்து பொக்கிஷமா வச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த வீடியோக்கள் பார்க்கும்போது அவ்வளவு பாசிட்டிவ் ஃபீலிங் கொடுத்துச்சு. இன்னைக்கு எல்லோருக்கும் தேவையானது அந்த பாசிட்டிவ் எனர்ஜிதானே... சரி, நாம ஏன் சமூக வலைதளப் பக்கங்களில் இந்த வீடியோக்களைப் பதிவிறக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் எங்களுடைய யூடியூப் பயணம் ஆரம்பிச்சது. புகழுக்காகவோ, பணம் சம்பாதிக்கிற நோக்கத்திற்காகவோ இந்தத் தளத்தை நாங்க தேர்ந்தெடுக்கவில்லை!'’ என அவ்வளவு இயல்பாய்ப் பேசத் தொடங்கினார் கார்த்திக்.

மழலை மனம் மாறாத குழந்தையின் குறும்பையும், இயல்பான அப்பா-மகள் உரையாடலையும் கேட்டு ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு `Jananima Official' யூடியூப் தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். வீடியோக்கள் முழுக்க, அப்பப்பா... அவ்வளவு கியூட்!

Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!
Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!
Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!

“எனக்கு சென்னை. என் மனைவி பாரதி, கும்பகோணத்தைச் சேர்ந்தவங்க. எங்களுடைய பெரிய பையன் சாய் சரண் இப்ப மூன்றாம் வகுப்பு படிக்கிறான். ரெண்டாவது பொண்ணு ஜனனி. எல்.கே.ஜி போக ஆரம்பிச்சிருக்காங்க. வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்ததும் அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சும்மா என் பசங்ககிட்ட பேசுவேன். அந்தச் சமயம் பாப்பாவுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை வயது. எங்களுக்கு இடையே நடக்கும் உரையாடலை வீடியோ எடுத்து வைக்க ஆரம்பிச்சேன். நைட் தூங்குறதுக்கு முன்னாடி நானும், என் மனைவியும் அந்த வீடியோவைப் பார்த்துட்டுதான் தூங்குவோம். அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் ஷேர் பண்ணினேன். அவளோட வெகுளித்தனமான மழலைப் பேச்சு பலருக்கும் பிடித்திருந்தது. நான் ஜனனிம்மாவை வற்புறுத்தி, வலிந்து எந்த கான்செப்ட்டையும் கற்றுக்கொடுத்து வீடியோ எடுக்கிறதில்லை. வீட்டில் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இடையேயான எதார்த்தமான உரையாடலை வீடியோ எடுத்துப் பதிவிடுறேன், அவ்வளவுதான்!

ஜனனி அவங்க அம்மாவைப் பற்றி கம்ப்ளைன்ட் பண்ற வீடியோ பலருக்கும் பிடிச்சிருந்தது. அந்த வீடியோ வைரல் ஆச்சு. எவ்வளவு சீரியஸா கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தாலும் அடுத்த நொடியே எல்லாத்தையும் மறந்து அம்மாவைக் கொஞ்சுவாங்க. இப்போ உள்ள குழந்தைங்களுக்குப் பல விஷயங்கள் தெரியுது. ரொம்பவே மெச்சூர்டா இருக்காங்க. அவங்களுக்கு நல்லது, கெட்டது சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. அந்த விஷயத்தில் என் மனைவி பாரதிக்குத்தான் நன்றி சொல்லியாகணும். ஜனனியுடைய ஃபேவரைட் பர்சன் பாட்டிதான். காலையில் இருந்து நைட் வரைக்கும் அவங்க பாட்டிகிட்ட ஏதாவது கதை பேசிட்டே இருப்பாங்க.

Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!
Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!
Shareபட்டா பரம்பரை - வீடியோவில் விளையாடு பாப்பா!
குடும்பத்துடன் ஜனனி
குடும்பத்துடன் ஜனனி

ஜனனிக்கு யூடியூப் மூலமா நிறைய அண்ணன்கள், அக்காக்கள் கிடைச்சிருக்காங்க. `மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!' என்கிற பாரதியாருடைய வரிகள் தான் எனக்கு ஜனனியைப் பாராட்டி கமென்ட்ஸ் வரும்போது எப்பவும் நினைவில் வரும். குழந்தை இல்லாத சிலர், ‘எனக்குக் குழந்தை இல்லை. உங்க குழந்தையைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... வாழ்த்துறேன்!'ன்னு சொல்லுவாங்க. அப்படிப் பலருடைய வாழ்த்துகள் எங்க குழந்தைக்குக் கிடைச்சிருக்கு. `குட்டிச் சுட்டீஸ்' நிகழ்ச்சிக்கு ஜனனியைக் கூப்பிட்டிருந்தாங்க. ஜனனி அங்கே செமையா என்ஜாய் பண்ணினா. நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பாப்பாவைக் கூப்பிட்டாங்க. சினிமா, சீரியல்னும் ஆஃபர்ஸ் வந்துச்சு. எனக்கு அந்தத் துறைகள் பற்றித் தெரியாததால் கொஞ்சம் தயக்கம் இருக்கு. அதுமட்டுமல்லாம, ஜனனியை கஷ்டப்படுத்தி எதுவும் பண்ணக் கூடாது என்பதில் ரொம்ப உறுதியா இருக்கேன். இப்ப என் பிரெண்டோட படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் ஜனனி நடிக்கிறாங்க. அதுகூட ஜனனிக்குப் பிடிச்சதனால மட்டும்தான் நாங்க சம்மதம் சொன்னோம்” என்கிறார்.

தெளிவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism