Published:Updated:

Shareபட்டா பரம்பரை: காஞ்சிபுரம் ரெண்டடி இட்லி!

செஃப் தீனா
பிரீமியம் ஸ்டோரி
செஃப் தீனா

குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியல என்ற காரணத்தால் ஹோட்டல் வேலையை விட்டுட்டு முழு நேர யூடியூபர் ஆயிட்டேன்

Shareபட்டா பரம்பரை: காஞ்சிபுரம் ரெண்டடி இட்லி!

குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியல என்ற காரணத்தால் ஹோட்டல் வேலையை விட்டுட்டு முழு நேர யூடியூபர் ஆயிட்டேன்

Published:Updated:
செஃப் தீனா
பிரீமியம் ஸ்டோரி
செஃப் தீனா

``சென்னையில் மிகப்பெரிய 5 ஸ்டார் ஹோட்டல் கிச்சன் எப்படி இருக்கும்? பரபரப்பா எல்லாரும் வேலை பார்த்துட்டு இருப்பாங்கதானே... அங்கே நடு கிச்சனில் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆடாம, அசையாம ஒரே இடத்தில் என்னை நிற்க வச்சாங்கன்னு சொன்னா நம்புவீங்களான்னு தெரியல. கெஸ்ட்டிற்கு நான் உணவு சமைக்கும்போது கொஞ்சம் காலதாமதம் ஆகிடுச்சுன்னு சொல்லி என் சீனியர் செஃப் எனக்குக் கொடுத்த தண்டனை இது..! பல அவமானங்கள், போராட்டங்கள்னு எல்லாத்தையும் கடந்து இப்ப செஃப் ஆக என் பயணம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிடுச்சு!’’ என்கிறார் தீனதயாளன். இவர் பலருக்கும் செஃப் தீனாவாகத்தான் பரிச்சயம்.

Shareபட்டா பரம்பரை: காஞ்சிபுரம் ரெண்டடி இட்லி!

‘ஹோட்டல்களில் சமைக்கும் உணவுகளை வீட்டில் இருக்கும் பொருள்களைப் பயன்படுத்தி எப்படி எளிமையாய் சமைக்கலாம்’ என்பவர்களுக்கு ‘Chef Deena’s Kitchen’ யூடியூப் தளம் உதவியாக இருக்கும்.

“என்னுடைய கரியரில் ரெண்டு பேர் எனக்கு ரொம்ப முக்கியமான நபர்கள். ஒன்று, செஃப் சுரேஷ் தம்பி. அவர் மேற்பார்வையில் சமைக்கும்போது நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். அந்தத் தப்புக்கு வேற யாராவதா இருந்திருந்தா என்னை வேலையை விட்டே அனுப்பியிருப்பாங்க. ஆனா, அவர் அப்படி எதுவும் பண்ணல. வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு ரொம்பப் பொறுமையா நான் பண்ணின தவற்றை எடுத்துச் சொன்னார். அன்னையிலிருந்து இப்ப வரைக்குமே என் வாழ்க்கையில் அந்தத் தவற்றை நான் திரும்பப் பண்ணலை. இன்னொருவர், செஃப் பிரகாஷ் ஜெய் தேவன். ஒவ்வொரு ஹோட்டலா வேலை தேடி ஏறி, இறங்கின சமயம் என்னை வேலைக்கு எடுத்து என்னுடைய வேலையைப் பார்த்துட்டு ரொம்ப சீக்கிரமாகவே எனக்குப் பதவி உயர்வும் கொடுத்தார்.

Shareபட்டா பரம்பரை: காஞ்சிபுரம் ரெண்டடி இட்லி!

எனக்குத் தெரிஞ்சதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதற்கு இந்தத் தளம் உதவியா இருக்கும்னு எனக்குச் சொல்லிப் புரிய வச்சது, என் மனைவி ஜூலிதான்! யூடியூப்பிற்கு வர்றதுக்கு முன்னாடி ஜீ தமிழில் ‘அஞ்சறைப்பெட்டி’ என்கிற ஷோ பண்ணியிருக்கேன். ஏற்கெனவே அனுபவம் இருந்ததால் யூடியூப்பில் பேசுறது எனக்குச் சுலபமாகிடுச்சு.

ஒவ்வொரு ஊருக்கும் டிராவல் பண்ணி அந்த ஊரோட ஸ்பெஷல் ரெசிப்பி எப்படிப் பண்றாங்கன்னு ஆடியஸுக்குக் காட்டலாம். அதே நேரம் அந்த ரெசிப்பியை நாமளும் கத்துக்கலாம் என முடிவு பண்ணினேன். ஹோட்டல் ஸ்டைலில் சமைக்கிற காஞ்சிபுரம் இட்லி நான் செய்திருக்கிறேன். ஆனா, ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி எப்படி இருக்கும்னு போய்ப் பார்த்தப்பதான் அந்த இட்லியே ரெண்டு அடிக்குப் பண்றாங்கன்னு தெரிஞ்சது. அதுவும், அந்த இட்லி வேக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டைம் எடுக்கும். அந்த ரெசிப்பியை நான் பர்சனலா கத்துக்கிட்டேன். அதுமட்டுமல்லாம, ஆடியன்ஸுக்கும் கற்றுக் கொடுத்தேன். அதே மாதிரி, சமீபத்தில் மதுரைக்குப் போயிருந்தேன். அங்கே கோவிலுக்குப் புளியோதரை பண்ணிக் கொடுக்கும் கிருஷ்ணன் என்பவர் எங்களுக்கு அந்த ரெசிப்பியைச் சொல்லிக் கொடுத்தார். அவருடைய தொடர்பு எண்ணையும் அந்த வீடியோவில் ஷேர் பண்ணியிருந்தோம். அவர் ஒரு நாள் போன் பண்ணி, ‘என்னை எங்க தெருவில் உள்ளவங்களுக்கும், என் சொந்தக்காரங்களுக்கும் மட்டும்தான் தெரியும். இன்னைக்கு உங்களால் வெளிநாட்டில் இருந்தெல்லாம் எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. அதுமட்டுமல்லாம, நிறைய ஆர்டர் வருது. ரொம்ப நன்றி!’ன்னு சொன்னார். நம்மளால இன்னொருத்தருக்கு அங்கீகாரம் கிடைச்சதுன்னு எனக்கு ரொம்பவே மனத்திருப்தி.

Shareபட்டா பரம்பரை: காஞ்சிபுரம் ரெண்டடி இட்லி!

குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியல என்ற காரணத்தால் ஹோட்டல் வேலையை விட்டுட்டு முழு நேர யூடியூபர் ஆயிட்டேன்’’ என்றவரிடம், அடுத்த திட்டம் குறித்துக் கேட்டோம்.

``இப்ப ஜெயா டி.வி-யில் ‘அடுப்பங்கரை’ என்கிற நிகழ்ச்சியில் சில ரெசிப்பிகள் சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன்” என்கிறார் தீனா.