Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: குறுந்திரையில் மருத்துவம்!

 தீப்தி ஜம்மி
பிரீமியம் ஸ்டோரி
தீப்தி ஜம்மி

ஆரம்பத்தில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் வீட்டிலேயே போனில் வீடியோ எடுப்போம். பேசுறப்போ மெடிக்கல் டேர்ம் பயன்படுத்திடுவேன்.

SHAREபட்டா பரம்பரை: குறுந்திரையில் மருத்துவம்!

ஆரம்பத்தில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் வீட்டிலேயே போனில் வீடியோ எடுப்போம். பேசுறப்போ மெடிக்கல் டேர்ம் பயன்படுத்திடுவேன்.

Published:Updated:
 தீப்தி ஜம்மி
பிரீமியம் ஸ்டோரி
தீப்தி ஜம்மி

“ஸ்கேன் எடுக்க வரும்போது என்னுடைய பேஷண்ட்ஸ் ரொம்ப பயந்துட்டே வருவாங்க. அவங்களோட பயத்தைப் போக்கி ஸ்கேன் பற்றி சரியான புரிதலை அவங்களுக்கு ஏற்படுத்தணும்னு ஸ்கேன் எதுக்காக எடுக்கிறோம்னு ஒரு வீடியோ எடுத்தேன். ஸ்கேனுக்கு முன்னாடி அந்தப் பத்து நிமிட வீடியோ பார்த்துட்டுதான் பேஷண்ட்ஸ் என்கிட்ட வருவாங்க. அப்படி வர்றவங்க, `இதுவரைக்கும் ஸ்கேனில் இவ்வளவு பாசிட்டிவான விஷயங்கள் இருக்குன்னு எங்களுக்குத் தெரியாது மேடம்... ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு'ன்னு சொல்லுவாங்க. அவங்களுக்காக ஆரம்பிச்ச வீடியோ இன்னைக்கு யூடியூபரா என்னை அடையாளப்படுத்தியிருக்கு!’’ எனப் புன்னகைக்கிறார், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவர் தீப்தி ஜம்மி.

நம்முடைய உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன காரணம், எதனால் அந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு `Dr.Deepthi Jammi' யூடியூப் தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். மருத்துவர், யூடியூபரான வெற்றிக்கதை குறித்து நம்மிடையே பேசத் தொடங்கினார் தீப்தி.

“பேஷண்ட்ஸ் கேட்கிற சந்தேகங்களுக்கு வீடியோ மூலம் பதில் சொல்றதுக்காக 2017-ல் சேனல் ஆரம்பிச்சோம். என்னோட துறை பெண்கள் சார்ந்தது என்பதால் அவங்களுக்கான விஷயங்களை மட்டும் ஆரம்பத்தில் சொல்லிட்டு இருந்தேன். பிறகு அனைவருக்குமான மருத்துவம் குறித்துப் பேசத்தொடங்கினேன்.

SHAREபட்டா பரம்பரை: குறுந்திரையில் மருத்துவம்!

ஆரம்பத்தில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் வீட்டிலேயே போனில் வீடியோ எடுப்போம். பேசுறப்போ மெடிக்கல் டேர்ம் பயன்படுத்திடுவேன். என் கணவர் அதை சரியா நோட் பண்ணி என்கிட்ட சொல்லுவார். பேஷண்ட் மனநிலையிலிருந்து அவர் அந்த வீடியோ பார்க்கிறதனால அதுல அவருக்கு நான் சொன்ன விஷயம் புரியலைன்னா ஓப்பனா மறுபடி பேசுன்னு சொல்லிடுவார். என்னோட முதல் விமர்சகர் அவர்தான்! அவர் பார்த்து எனக்கு கன்டென்ட் புரியுதுன்னு சொன்னா மட்டும்தான் அந்த வீடியோவை அப்லோடு பண்ணுவோம்.

ஒரு வருஷம் வரையில் போனிலேயே வீடியோ எடுத்துட்டிருந்தோம். அதுக்குப் பிறகு, குவாலிட்டி தேவைன்னு தோணுச்சு. சமீபத்தில், என் கணவர் ஒன்பது மாசத்துக்கு முன்னாடி ஒரு டீம் உருவாக்கினார். கேமரா, எடிட்டிங், அனிமேஷன் என எல்லா விஷயங்களையும் டீம் கவனிச்சிப்பாங்க. பேஷண்ட்ஸ் எல்லாரையும் பார்த்து முடிச்சதுக்கு அப்புறமாதான் வீடியோ எடுக்கவே ஆரம்பிப்போம். வெறும் 10% கிரெடிட் மட்டும்தான் நான் எடுத்துப்பேன். மீதி 90% உழைப்பும் ஒட்டுமொத்த டீமுடையது. ஆரம்பத்தில் தமிழில் பேசினால் போதும்னு நினைச்சோம். ஆனா, போகப்போக வெளிநாட்டில் இருக்கும் பலர் எங்க சேனலைப் பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சது. அவங்க பலரும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லிக் கேட்டாங்க. அதனால, இப்போ சப் டைட்டில் போட ஆரம்பிச்சிருக்கோம்.

சமீபத்தில், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் குறித்து வீடியோ பதிவிட்டேன். பொதுவா புகைபிடிக்காதீங்கன்னு சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா, நீங்க புகைபிடிக்கிறதனால உங்க நுரையீரலில் இவ்வளவு பிரச்னை ஏற்படுது. இது உங்களை மட்டும் பாதிக்காம உங்க கூட இருக்கிறவங்களையும் பாதிக்கும்னு விளக்கிச் சொன்னேன். அந்த வீடியோ மூணு பார்ட்டா எடுக்க வேண்டியிருந்தது.

SHAREபட்டா பரம்பரை: குறுந்திரையில் மருத்துவம்!
SHAREபட்டா பரம்பரை: குறுந்திரையில் மருத்துவம்!

கருவிலேயே குரோமோசோம் குறைபாடுகளை அறிய உதவும் NT ஸ்கேன் பற்றி ஒரு வீடியோ போட்டிருந்தேன். திண்டுக்கலில் ஒரு தம்பதி எடுத்த ஸ்கேனில் குழந்தைக்குக் குறைபாடு இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அதனால, அவங்க அபார்ஷன் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்காங்க. அவங்க நான் NT ஸ்கேன் பற்றிப் பேசின இந்த வீடியோ பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. இந்த மாதிரியான பிரச்னைகள் நார்மலான குழந்தைகளுக்குக்கூட வரலாம். நீங்க வாங்க, முழுசா டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்னு வரச் சொன்னேன். இங்கே டெஸ்ட் எடுத்துப் பார்த்தப்போ குழந்தைக்குத் தண்டுவட பிரச்னை இருந்தது. அது சாதாரண குழந்தைகளுக்கும் ஏற்படலாம்னு சொன்னேன். அதுதவிர, அந்தக் குழந்தைக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்களும் அபார்ஷன் முடிவைக் கைவிட்டுட்டாங்க. இப்போ, அவங்களுக்குக் குழந்தை பிறந்து அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. என் குழந்தை உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்னு அவங்க சொன்னப்போ அவ்வளவு நெகிழ்ச்சியா இருந்துச்சு.

என்னோட வீடியோஸ் பார்த்துட்டு என் டாக்டர் நண்பர்கள் பலரும் வீடியோ பேசி மக்களுக்கு உன்னை மாதிரி நாங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு சொல்றாங்க. அதனால, நானும், என் கணவரும் `Mighty Mouse Media' என்கிற பெயரில் ஒரு மீடியா கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அந்தக் கம்பெனி மூலமா அவங்களுக்கு வீடியோ, எடிட்டிங் என எல்லாமும் பண்ணிக் கொடுக்கலாம் என முடிவு பண்ணியிருக்கோம்” என்று புன்னகைக்கிறார்.