Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: ஏழு நாள் சக்சஸ் பார்முலா!

ஹேமலதா
பிரீமியம் ஸ்டோரி
ஹேமலதா

ஏழு நாள்களுக்கு சிம்பிளான ஏழு சட்னி சொல்லிக் கொடுப்போம்னு முடிவு பண்ணினேன். அந்த ஏழு வகை சட்னி பெரிய அளவில் ரீச் கொடுத்துச்சு.

SHAREபட்டா பரம்பரை: ஏழு நாள் சக்சஸ் பார்முலா!

ஏழு நாள்களுக்கு சிம்பிளான ஏழு சட்னி சொல்லிக் கொடுப்போம்னு முடிவு பண்ணினேன். அந்த ஏழு வகை சட்னி பெரிய அளவில் ரீச் கொடுத்துச்சு.

Published:Updated:
ஹேமலதா
பிரீமியம் ஸ்டோரி
ஹேமலதா

’சின்ன வயசுல இருந்தே நான் விரும்பி சமைக்கிற எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்த்து நல்லாருக்குன்னு பாராட்டியவர், என் அப்பா மட்டும்தான். எந்தக் குறையும் சொல்லாம மனசாரப் பாராட்டுவாங்க. இன்னைக்கு நான் சமையலில் இந்த அளவுக்குப் பெருசா இருக்கேன்னா அதுக்கு அவர் கொடுத்த ஊக்கம்தான் காரணம். என் வளர்ச்சியைப் பார்க்க அப்பா இல்லைங்கிற வருத்தம் அதிகமாவே இருக்கு. ஒவ்வொரு நாளும் அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்!' என நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார், ஹேமலதா.

‘வாரத்தில் ஏழு நாள்களுக்கும் விதவிதமாக என்னென்ன ரெசிப்பிகள் செய்ய முடியும்’ எனக் கேட்பவர்களுக்கு ‘Hema's Kitchen' யூடியூப் தளம் மிகவும் உதவியாக இருக்கும். ஏழு நாள் சட்னி, ஏழு நாள் காலை உணவு என வெரைட்டியான ரெசிப்பிகளைக் கற்றுக்கொடுக்கும் ஹேமா, அவருடைய வெற்றிப் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

SHAREபட்டா பரம்பரை: ஏழு நாள் சக்சஸ் பார்முலா!

“சொந்த ஊர் தூத்துக்குடி. ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே சமைக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன சமைச்சாலும், அதை உடனே டேஸ்ட் பண்ண அப்பாகிட்ட கொடுத்துடுவேன். சின்ன வயசுல இருந்தே ஆனந்த விகடன், அவள் விகடன், அவள் கிச்சன் புத்தகமெல்லாம் படிப்பேன். அதில், ரெசிப்பிகள் நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. அதையெல்லாம் டிரை பண்ணிப் பார்த்திருக்கேன். என் கணவர், அருப்புக்கோட்டை. திருமணத்திற்குப் பிறகு டிரான்ஸ்பர் ஆகி இப்போ சென்னையில் செட்டில் ஆகிட்டோம். எனக்கு ரெண்டு பசங்க. பொண்ணு இப்போ வேலைக்குப் போய்ட்டிருக்கா. பையன் ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் படிக்கிறான்.

ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் டயட் குரூப்பில் இருந்தேன். நிறைய பேர் டயட் தொடர்பான ரெசிப்பிகள் ஷேர் பண்ணுவாங்க. அப்படி நானும் எனக்குத் தெரிஞ்ச டயட் ரெசிப்பிகளை எழுதி போஸ்ட் பண்ணினேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க யூடியூப் சேனல் பற்றிச் சொன்னாங்க. அப்போ யூடியூப்னா என்னன்னுகூட எனக்குத் தெரியாது. அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டு 2017-ல் சேனல் ஆரம்பிச்சோம்.

SHAREபட்டா பரம்பரை: ஏழு நாள் சக்சஸ் பார்முலா!

ஏழு நாள்களுக்கு சிம்பிளான ஏழு சட்னி சொல்லிக் கொடுப்போம்னு முடிவு பண்ணினேன். அந்த ஏழு வகை சட்னி பெரிய அளவில் ரீச் கொடுத்துச்சு. தொடர்ந்து ஏழு வகை ரெசிப்பிகள் நிறைய செய்து காட்டினேன். சமைக்க ஆரம்பித்த புதிதில் என்கிட்ட அலுமினிய பாத்திரம் மட்டுமே இருந்துச்சு. கணவர்கிட்ட 5,000 ரூபாய் வாங்கி பாத்திரம் வாங்கினேன். அதுக்கப்புறம் என் தேவையை நானே பூர்த்தி பண்ணிக்க ஆரம்பிச்சிட்டேன்.

செஃப் தாமு சார், ரேவதி சண்முகம் மேடம் எல்லாம் டி.வி-யில் சொல்லித் தரும் ரெசிப்பியை வீட்டில் சமைச்சுப் பார்த்திருக்கேன். சமையலில் அவங்கதான் என் குரு. என் வீடியோ பார்த்துட்டு ரெண்டு பேருமே பாராட்டியிருக்காங்க. குருவா நினைக்கிறவங்ககிட்ட இருந்து பாராட்டு வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லைங்க” என்றவர் சில நொடி புன்னகைக்குப் பின் தொடர்ந்தார்.

SHAREபட்டா பரம்பரை: ஏழு நாள் சக்சஸ் பார்முலா!

“சீக்கிரமே சொந்தமா ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு ஆசை. ஏன்னா, ஞாயிற்றுக்கிழமை ஆச்சுன்னா நம்ம வீட்ல காலையில் எப்படி சுடச்சுட இட்லியும், கறிக்குழம்பும் வச்சு சாப்பிடுவோமோ அப்படி எந்த உணவகங்களிலும் நாம சாப்பிட்டதில்லை. நானும், நிறைய அசைவ உணவகங்களுக்குப் போயிருக்கேன். பெரும்பாலான இடங்களில் மதியத்துக்கு மேலதான் நான் வெஜ் ரெடியாகும்னு சொல்லுவாங்க. அதுக்காகவே, ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு விதவிதமா நான்வெஜ் ரெசிப்பிகள் சமைச்சுக் கொடுக்க விரும்புறேன். விரைவிலேயே அந்தக் கனவும் நிஜமாகும்னு நம்புறேன்” என்கிறார் சிரித்தபடி.