Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

சரத்
பிரீமியம் ஸ்டோரி
சரத்

ஐ.டி கம்பெனியில் நைட் ஷிப்ட் வேலை முடிச்சிட்டு காலையில 6 மணிக்கெல்லாம் சென்னையி லிருந்து பெங்களூர் கிளம்பிடுவேன். ஏன்னா, அங்க பகல்ல நிறைய பஸ் இருக்கும்.

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

ஐ.டி கம்பெனியில் நைட் ஷிப்ட் வேலை முடிச்சிட்டு காலையில 6 மணிக்கெல்லாம் சென்னையி லிருந்து பெங்களூர் கிளம்பிடுவேன். ஏன்னா, அங்க பகல்ல நிறைய பஸ் இருக்கும்.

Published:Updated:
சரத்
பிரீமியம் ஸ்டோரி
சரத்

‘வேகமா ஓடுற பேருந்து ஜன்னலில் இருந்து ஊரை வேடிக்கை பார்க்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு எனக்குத் தெரியும். அந்த சந்தோஷத்தை நிறைய பேர்கூட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் ‘Tuber Basss' என்கிற சேனலை ஆரம்பிச்சேன்” என்கிறார், சரத்.

பஸ்ல டிராவல் பண்ண விரும்பும் நபரா நீங்கள்? டிராவல் சம்பந்தமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறவரா நீங்கள்? உங்கள் எல்லோருக்கும் ‘Tuber Basss' பெஸ்ட் சாய்ஸ்!

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

“சொந்த ஊர் ராமேஸ்வரம். அண்ணனும் அக்காவும் இன்ஜினீயரிங் படிச்சதால கேட்டரிங் தான் படிப்பேன்னு சொல்லியும், கேட்காம இன்ஜினீயரிங்ல சேர்த்துவிட்டுட்டாங்க. ஐ.டி கம்பெனியில் வேலை கிடைச்சது. 12,000 ரூபாய் என் முதல் சம்பளம். ஒரு வருஷம் வேலை பார்த்தேன். என் அப்பா சொந்தமா பிசினஸ் பண்றார். அப்பாவோட பிசினஸை கவனிச்சிக்கிறதுல அப்போவே எனக்கு உடன்பாடில்லை. சுயமா சம்பாதிக்கணும்னு நினைச்சேன். அப்பாவுக்கு என்னை கலெக்டரா பார்க்கணும்னு ஆசை. அவருக்காக ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படிச்சேன். ரெண்டு மாசத்திலேயே ‘இது நமக்கான இடம் இல்லை’ன்னு தெரிஞ்சிடுச்சு.

என் மாமா துபாய்ல வேலை பார்த்தார். ‘துபாய்ல நிறைய வேலை கிடைக்கும். இங்கே வா’ன்னு அவர் சொன்னாரு. துபாய் கிளம்பிப் போய்ட்டேன். வேலை தேடி ஒவ்வொரு ஆபீஸுக்கும் போனேன். யாரும் வேலை கொடுக்கிற மாதிரி தெரியல. அதனால, மறுபடி சொந்த ஊருக்கே வந்துட்டேன்.

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

பல கட்ட முயற்சிக்குப் பிறகு சென்னையில் ‘HCL' ஐ.டி கம்பெனியில் வேலை கிடைச்சது. அங்கே வேலை பார்த்துட்டிருந்தேன். அப்துல் கலாம் இறந்தப்போ அவர் இறுதி ஊர்வலம் எங்க வீட்டு வழியாகத்தான் நடந்துச்சு. அதை வீடியோவா எடுத்து யூடியூப்பில் அப்லோடு பண்ணியிருந்தேன். அப்போ யூடியூப் மூலமா பணம் வரும்னுலாம் எனக்குத் தெரியாது. எதார்த்தமா யூடியூப் பார்த்தப்போ அந்த வீடியோவை 60,000 பேர் பார்த்திருந்தாங்க. அப்போதான் ‘நாம ஏன் இதுல கவனம் செலுத்தக் கூடாது’ன்னு தோணுச்சு. உடனே சேனல் ஆரம்பிச்சேன். என் அப்பா பெயர் பாலசுப்பிரமணியன். அம்மா பெயர் அம்பிகா. அக்கா ஸ்ருதி. அண்ணன் சரண். அப்புறம் என் பெயர்னு எங்க ஃபேமிலியோட முதல் எழுத்தை வச்சி ‘Tuber Basss'னு சேனலுக்குப் பெயரும் வச்சிட்டேன்.

சரி, என்ன வீடியோ போடலாம்னு யோசிச்சேன். எனக்கு டிராவல்னா பிடிக்கும். அதிலும் குறிப்பா பஸ்ல முன்னாடி சீட்ல உட்கார்ந்துட்டு டிரைவர் அண்ணாகிட்ட மணிக்கணக்கா பேசிட்டு வர அவ்வளவு பிடிக்கும். அவர்கிட்ட நான் கேட்கிற கதையை, அந்த ஜன்னல் வழியா எனக்கு முன்னாடி அழகா விரியுற பாதையை எல்லாருக்கும் காட்டலாம்னு நினைச்சேன். அது தொடர்பா வீடியோ பண்ணினேன். டிரைவர், பஸ் கிளீனர்னு எல்லாரும் அவங்க படுற கஷ்டத்தை ஷேர் பண்ணி கிட்டாங்க. அந்த வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சேன். அதே மாதிரி, வெளியூருக்கு டிராவல் பண்ற பஸ் எப்படி இருக்குன்னு ரிவ்யூ பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைச்சது.

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

ஐ.டி கம்பெனியில் நைட் ஷிப்ட் வேலை முடிச்சிட்டு காலையில 6 மணிக்கெல்லாம் சென்னையி லிருந்து பெங்களூர் கிளம்பிடுவேன். ஏன்னா, அங்க பகல்ல நிறைய பஸ் இருக்கும். அதனால அந்த ஏரியா செட்டாகும்னு அங்கே கிளம்பிப் போய் வீடியோ எடுப்பேன். மறுபடி அங்கே இருந்து கிளம்பி சென்னை வந்து நைட் ஷிப்ட் வேலைக்குப் போயிடுவேன். தூங்கிறதுக்குக்கூட நேரம் இல்லாம ஓடிட்டிருந்தேன்.

வீட்ல எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைப் பண்ணு’ன்னு பர்மிஷன் கொடுத்தாங்க. அதனால ஐ.டி வேலையை விட்டுட்டு முழுநேர யூடியூபர் ஆனேன். என் பெஸ்ட் ஃப்ரெண்ட் கார்த்திக். நானும், அவனும் மாலத்தீவுக்குப் போகிறதா ஒரு பிளான். கோவாவில் இருந்து இதுக்காகப் போகும்போது ஹைவேஸில் ஆக்ஸிடென்ட் ஆகி திடீர்னு கார் தீப்பிடிச்சிடுச்சு.

ஒரு பஸ் டிரைவர் அண்ணாதான் பஸ்ஸை நிறுத்தி எங்களுக்கு ஹெல்ப் பண்ணினாரு. கண்ணாடியை உடைச்சி எங்களை வண்டியிலிருந்து வெளியே எடுத்தாங்க. கார்த்திக் ஊர் கோவாங்கிறதனால அங்கேயே அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. என்னை ஊருக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. என் அக்காவும் அண்ணனும் ஃபாரின்ல இருக்கிறதனால அவங்களைப் பார்க்க அம்மாவும், அப்பாவும் போய்ட்டாங்க. ஆக்ஸிடென்ட் ஆனது தெரிஞ்சி எங்க சொந்தக் காரங்கதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. விபத்துல எனக்கு இடுப்பு எலும்பு உடைஞ்சிடுச்சு. ரெண்டு மேஜர் ஆப்ரேஷன் பண்ணுனாங்க. ஆப்ரேஷன்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாதான் என் ஃப்ரெண்ட் இறந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க.

ஷேர்பட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர்கள்தான் என் ஸ்ட்ரெஸ்பஸ்டர்!”

அவனுடைய இழப்புக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னே எனக்குத் தெரியல. மிகப்பெரிய மன அழுத்தத்தோட படுத்த படுக்கையா கெடந்தேன். ‘Play with Tuberbasss'ன்னு முன்னாடியே ஒரு சேனல் ஆரம்பிச்சிருந்தேன். எனக்கு பப்ஜி விளையாடப் பிடிக்காது. பஸ் ஓட்டப் பிடிக்குங்கிறதனால அது தொடர்பான கேம் விளையாடுறதுக்காக இந்த சேனலை ஆரம்பிச்சேன். அதுவும் பலருக்குப் பிடிச்சிருந்தது.

நான் ஸ்ட்ரெஸ் ஆன சமயத்துல லைவ் வந்து என் சப்ஸ்கிரைபர்கள்கூட பேசுவேன். அவங்க கூட பேசுற ரெண்டு மணி நேரமும் என் கவலை எல்லாத்தையுமே மறந்திடுவேன். இப்போவரை கார்த்திக் இல்லைங்கிறதுக்கு நானும் ஒரு காரணங்கிற குற்ற உணர்ச்சி எனக்குள்ளே இருந்துட்டே இருக்கு. அதுல இருந்து நிச்சயமா என்னால மீண்டுவர முடியாது” என்றவர் சில நொடிகள் ஆழ்ந்த மெளனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.

“இப்போ ஒரு மாசமாதான் பழையபடி நடக்க ஆரம்பிச்சிருக்கேன். என் ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணணுங்கிறதுதான் இப்போதைக்கு என் பிளான். அவங்களுக்காக ஐஸ்லாந்தைச் சுற்றிக் காட்டணும்னு பிளான் பண்ணியிருக்கேன்” என்றவரிடம் மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டோம்.

“சிம்லா பக்கத்தில் Spiti Valley-ன்னு ஒரு இடம் இருக்கு. பிப்ரவரியில் அங்கே போயிருந்தேன். குளிர்ல அந்த இடத்துல நின்னு வீடியோ எடுத்துட்டு இருந்தேன். நாங்க இருந்த இடத்துக்கு மேல உலகத்திலே அதிக உயரமான கிராமம் இருந்துச்சு. சுற்றிப் பார்த்துட்டு இருந்தப்போ திடீர்னு பனிச்சரிவு ஏற்பட்டு ஜீப்பை எடுக்க முடியாமப்போச்சு. அதை சரிசெய்ய மறுநாள்தான் ஆள் வருவாங்கன்னு சொல்லிட்டாங்க. குளிரும் தாங்க முடியலை. அப்போ ஒரு அம்மா அவங்க வீட்ல தங்கிக்கச் சொன்னாங்க. அந்த ட்ரிப் ரொம்பவே ஸ்பெஷலா பல அனுபவங்களைக் கொடுத்துச்சு.

எனக்கு வீடியோ ரீச் முக்கியமில்லை. பிடிச்சதைப் பண்ணணுங்கிறதுல உறுதியாவே இருக்கேன். ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு அப்புறம் வீட்ல டிராவல்னு சொன்னாலே பயப்படுறாங்க. இடுப்புல பிளேட் வச்சிருக்காங்க. ஹெல்த்தையும் மனசில வைச்சிக்கிட்டு அடுத்த ட்ரிப் பிளான் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்” என்கிறார் சரத்.