Published:Updated:

Shareபட்டா பரம்பரை: மக்களிடம் செல்வதே மகிழ்ச்சி!

திவ்யா - வேத ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா - வேத ராஜன்

எப்பவும் என் மனசுக்குப் பிடிச்சதைப் பண்றேன் அவ்வளவுதான்! ஆனாலும், இதற்கும் சில நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும். அது எல்லாத்தையும் நான் பாசிட்டிவ் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன்

Shareபட்டா பரம்பரை: மக்களிடம் செல்வதே மகிழ்ச்சி!

எப்பவும் என் மனசுக்குப் பிடிச்சதைப் பண்றேன் அவ்வளவுதான்! ஆனாலும், இதற்கும் சில நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும். அது எல்லாத்தையும் நான் பாசிட்டிவ் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன்

Published:Updated:
திவ்யா - வேத ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா - வேத ராஜன்

``Save Memories... Not Money!’ இதுதான் என்னுடைய இலக்கு! என் மனசுக்குப் பிடிச்சதைப் பண்ணணும் என்கிற எண்ணத்தில்தான் ஐ.டி வேலையை விட்டுட்டு வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன். இப்ப தேடித்தேடி எளிய மனிதர்களுடைய கதைகளைக் கேட்க ஆரம்பிச் சிருக்கேன். அந்தக் கதைகளை வீடியோவாக என்னுடைய யூடியூப் தளத்தில் தொடர்ந்து பதிவு பண்ண ஆரம்பிச்சிருக்கேன்...’’ என்றவாறு பேசத் தொடங்கினார், ‘MOP’ என்கிற யூடியூப் தளத்தில் தொடர்ந்து டிராவல் சார்ந்த வீடியோக்களையும், எளிய மனிதர்களின் கதைகளையும் பதிவு செய்துகொண்டிருக்கும் வேத ராஜன்.

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். படிப்பு முடிஞ்சதும் ஐ.டி வேலை பார்த்துட்டிருந்தேன். ஸ்கூல் படிக்கும்போது எனக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம் என்பதால் அது தொடர்பான வீடியோக்கள் பார்ப்பதற்கு அப்பவே யூடியூப் தளத்தைப் பயன்படுத்தியிருக்கேன். மனசுக்குப் பிடிச்ச வேலையைப் பார்க்கணும் என்கிற எண்ணம் ஓடிட்டே இருந்ததனால ஐ.டி வேலையை விட்டுட்டு யூடியூப்பில் பிடிச்ச விஷயங்களைப் பண்ணி அதை வீடியோ எடுத்துப் போடலாம்னு நினைச்சேன்.

Shareபட்டா பரம்பரை: மக்களிடம் செல்வதே மகிழ்ச்சி!

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ஷிப்ட் ஆனோம். என் மனைவி திவ்யா, இப்ப அவங்களும் யூடியூப்பில் பிரபலமாகிட்டாங்க. ஆனா, ஆரம்பத்தில் அவங்களுக்கு யூடியூப் பரிச்சயமில்லாதப்பவே என் ஆசைக்கு மறுப்பு சொல்லாம எல்லாச் சூழலிலும் என்னுடன் இருந்தாங்க... என்னை நம்பி எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. நான் வேலையை விட்ட சமயம் அவங்க வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. கோயம்புத்தூர் அருகில் சிறுவாணி ஆறு இருக்கும் இடத்திற்குப் போய் முதன்முதலா வீடியோ எடுத்தேன். டிராவல் vlog, ஃபுட் vlog எனத் தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன். 2019-ல் சேனல் ஆரம்பிச்சேன். படிப்படியா சேனல் வளர ஆரம்பிச்சது” என்றவரிடம் சேனல் பெயர்க் காரணம் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

“நான் ஸ்கூல் படிக்கும்போது என்னோட தமிழ் சாருக்கு என்ன காரணம்னே தெரியாது என்னைக் கண்டாலே பிடிக்காது. நான் ஸ்போர்ட்ஸ், டிராயிங்னு எல்லாத்திலும் பரிசு வாங்கினாலும் படிப்பில் கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்தான்! எப்பவும் ‘நீ ஊருதான் சுத்துவே’ன்னு சொல்லித் திட்டுவார். நான் நார்த் மெட்ராஸ் பையன் என்பதால் சேனல் ஆரம்பிக்கும்போதே அவர் சொல்ற மாதிரி நாம ஊர் ஊரா டிராவல்தானே பண்ணப் போறோம்.. சேனலுக்கு ‘Mr Ooru Porukki ன்னு பெயர் வச்சிடுவோம்னு முடிவு பண்ணி இப்படிப் பெயர் வச்சேன். ஆனா, இப்ப பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எல்லா சோசியல் மீடியா தளங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் என்னை ஃபாலோ பண்றாங்க. அவங்க எல்லாரும் இந்தப் பெயர் தெரிஞ்சு பாசிட்டிவான எண்ணத்தோடுதான் என்னைப் பார்க்கிறாங்க.

கோயம்புத்தூர் அருகே வடிவேலம்பாளையம் என்கிற கிராமத்தில் பழங்குடியினர் வாழுறாங்கன்னும், அந்த ஊருக்கு கிட்டத்தட்ட 40 வருடங்களாக கரண்ட் வசதி இல்லைன்னும் கேள்விப்பட்டேன். அங்கே, கரண்ட் வசதி ரெடி பண்ணிக் கொடுக்கணும்னு நினைக்கும்போது அதில் சில சிக்கல்கள் இருந்துச்சு. அந்தச் சிக்கல்கள் எல்லாத்தையும் சரி பண்ணி அந்த ஊருக்கு கரன்ட் கனெக்‌ஷன் கொடுத்தோம். அதை என்னுடைய பிறந்தநாளில் பண்ணினேன். அந்த வீடியோ எனக்கு ரொம்பவே ஸ்பெஷலா இருந்துச்சு.

Shareபட்டா பரம்பரை: மக்களிடம் செல்வதே மகிழ்ச்சி!

அதே மாதிரி, கோயம்புத்தூரில் கோல்டு காயின் ஏ.டி.எம் மெஷின் இருக்கு. அந்த மெஷினில் நாம பணம் கட்டினால் ஒரு கிராம் கோல்டு காயின் வரும். அன்னைக்கு அந்த காயினை எப்படி எடுக்கணும்னு சும்மா ஆடியன்ஸ்கிட்ட காட்டிடலாம்னு முடிவு பண்ணுனப்ப எதார்த்தமா அந்த காயினை யாருக்காச்சும் கொடுக்கலாம்னு தோணவும் வீடியோவிலேயே அதைச் சொன்னேன். காயின் எடுத்துட்டு வெளியே வந்ததும், அங்கே 50 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருத்தங்க பூ வித்துட்டிருந்தாங்க. அவங்ககிட்ட நாலு முழம் பூ கேட்டேன். அவங்க ஐந்து முழம் கொடுத்தாங்க. அவங்ககிட்ட, நீங்க எனக்கு அதிகமா ஒரு முழம் பூ கொடுத்ததனால இந்த காயின் உங்களுக்குக் கொடுக்குறேன்னு சொல்லி அவங்ககிட்ட கொடுத்துட்டு காரில் ஏறிட்டேன். அவங்க அந்தச் சமயம் குழப்பத்தில் எதுவும் பேசல. காரை எடுக்கப் போறேன்னு தெரிஞ்சதும் என்னைத் தேடி வந்து, ‘என் பையன் தற்கொலை பண்ணி இறந்து ரெண்டு வருஷமாச்சு. அவனுடைய மூன்றாவது திதி வருது... அதுக்கான செலவுக்கு என்ன செய்யன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... என் பையன் உருவத்தில் நீ வந்து எனக்கு உதவி பண்ணியிருக்கப்பா... நீ நல்லா இருக்கணும்’னு சொன்னாங்க!

எப்பவும் என் மனசுக்குப் பிடிச்சதைப் பண்றேன் அவ்வளவுதான்! ஆனாலும், இதற்கும் சில நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும். அது எல்லாத்தையும் நான் பாசிட்டிவ் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். எங்ககிட்ட ஒரு குட்டி டீம் இருக்கு. அதில், மொத்தம் 8 பேர் இருக்காங்க. சேனல் ஆரம்பிச்ச சமயம் தினமும் ஒரு வீடியோ போட்டுட்டு இருந்தேன். இப்ப மாசத்துக்கு 6 வீடியோக்கள் போடுறேன். டிராவல், கதைகள், சாப்பாடுன்னு இப்படியே என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களை தொடர்ந்து செய்துட்டே இருக்கப்போறேன்!’ என்கிறார் வேத ராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism