Published:Updated:

Shareபட்டா பரம்பரை: பாட்டு கேட்டு பழகிடு பாப்பா!

ஜெயலட்சுமி, குபேர் நடராஜன்.
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலட்சுமி, குபேர் நடராஜன்.

2015-ல் யூடியூப்பில் கன்டென்ட் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். தமிழில் ரைம்ஸ் இருக்குன்னு அதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது.

Shareபட்டா பரம்பரை: பாட்டு கேட்டு பழகிடு பாப்பா!

2015-ல் யூடியூப்பில் கன்டென்ட் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். தமிழில் ரைம்ஸ் இருக்குன்னு அதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது.

Published:Updated:
ஜெயலட்சுமி, குபேர் நடராஜன்.
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலட்சுமி, குபேர் நடராஜன்.

‘குழந்தைகளுக்குப் பிடிக்கிறதைவிட பெற்றோர்களுக்கு எங்க பாட்டு பிடிக்கணும். பெற்றோர்களைப் பொறுத்தவரையில் பயனுள்ள கருத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைப்பாங்க. அதனால, கருத்தோட சேர்த்து குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி பாடல் வரிகளை எழுதணும். வரிகளுக்காகவே ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கும். அந்த மெனக்கிடல் இன்னைக்கு எங்களுக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கு” என்று உற்சாகமாய் ஆரம்பிக்கிறார் குபேர் நடராஜன்.

குழந்தைப் பாடல்களைக் கேட்கப் பிரியப்படுபவர்களுக்கு `infobells' யூடியூப் தளம் மிகவும் உதவியாக இருக்கும். யூடியூப் சேனலின் மூலம் வெற்றியடைந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள், குபேர் நடராஜன் மற்றும் அவரின் மனைவி ஜெயலட்சுமி குபேர்!

Shareபட்டா பரம்பரை: பாட்டு கேட்டு பழகிடு பாப்பா!

“சொந்த ஊர் நாமக்கல். ஆனா, குடும்பத்தோடு பெங்களூரில் செட்டில் ஆகிட்டோம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னாடி ஆங்கிலத்தில் மட்டும்தான் ரைம்ஸ் இருந்துச்சு. மற்ற மொழிகளில் பெரிய அளவில் குழந்தைகளுக்கான பாட்டு இல்லாததனால, நாம ஏன் மண் சார்ந்த பாடல்களைக் குழந்தைகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதுவரை பாடல் சி.டி-களை விநியோகம் பண்ணிட்டு இருந்த நாங்களே புது கன்டென்ட் உருவாக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்ற குபேரைத் தொடர்ந்து ஜெயலட்சுமி பேசினார்.

“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிச்சேன். அதனால, 2டி தெரியும். 3டியும் தெரிஞ்சிருக்கணும்னு கிளாஸுக்குப் போய்ப் படிச்சேன். அப்போ என் பையனுக்கு ஒரு வயசு. வீட்டையும் பார்த்துகிட்டு கிளாஸுக்கும் போய்ட்டு வந்துட்டு இருந்தேன். பிறகு, நாங்களே அனிமேஷன் ஒர்க் ஆரம்பிச்சோம். நானும், என் கணவரும் சேர்ந்து பாடல் வரிகள் குறித்து விவாதிப்போம். முதல் ரெண்டு வருஷம் எங்களுக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. 2011-ல் `infobells' கம்பெனி ஆரம்பிச்சோம். சூப்பர் மார்க்கெட், பொருட்காட்சி போன்ற இடங்களில் டி.வி.டி-யில் எங்களுடைய பாடல்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.

எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க பசங்கதான் எங்களோட இன்ஸ்பிரேஷன். எதைப் பார்த்து என் குழந்தை சிரிக்குதுன்னு ஒவ்வொண்ணும் கவனிப்பேன். பாட்டு ரெடியானதும் முதலில் அதை எங்க பசங்களுக்குப் போட்டுக் காட்டுவோம். அவங்க அதை என்ஜாய் பண்ணி ரசிச்சாங்கன்னா மட்டும்தான் அடுத்த லெவலுக்குக் கொண்டு போவோம்” என்றவரைத் தொடர்ந்து குபேர் பேசினார்.

“2015-ல் யூடியூப்பில் கன்டென்ட் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். தமிழில் ரைம்ஸ் இருக்குன்னு அதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது. ஆறு மொழிகளில் கன்டென்ட் பண்ண ஆரம்பிச்சோம். இப்போ எங்க டீமில் 45 பேர் இருக்காங்க. குழந்தைகளுக்கான பாடல்களைப் பொறுத்தவரைக்கும் அதில் சென்சிட்டிவ் மார்ஜின் ஒண்ணு இருக்கு. அவங்களை என்டர்டெயின் பண்ணணும், அதே சமயம் அதில் ஒரு கருத்தையும் பக்குவத்தோடு சொல்லிக் கொடுக்கணும். பாடல் மூலமா அவங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கணும்னு முடிவு பண்ணித்தான் சேனலுக்கு இந்தப் பெயர் வெச்சோம்” என்றார் புன்னகையுடன்.

“2017 - 18-ல் சேனல் பயங்கரமா ரீச் ஆச்சு. `உருளைக்கிழங்கு செல்லக்குட்டி' என்கிற பாடலுக்கு பில்லியன் வியூஸ் வந்துச்சு. அந்தப் பாடல் வரியை நான்தான் எழுதினேன். அந்தப் பாட்டைப் பலரும் பாராட்டி மெயில் பண்ணியிருந்தாங்க. `பரிதாபங்கள்' சேனலில் இந்தப் பாட்டு பற்றிப் பேசினாங்கன்னு எங்க ஃப்ரெண்ட்ஸ் வீடியோ கிளிப் அனுப்பியிருந்தாங்க. பாகுபலிகூட எல்லாம் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியை கம்பேர் பண்ணிப் பேசியிருக்காங்க. அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். இந்த இடத்தில் அவங்களுக்கும் எங்க நன்றியைத் தெரிவிச்சிக்கிறோம்.

Shareபட்டா பரம்பரை: பாட்டு கேட்டு பழகிடு பாப்பா!

தீபாவளிக்காக ஷேரிங் கான்செப்டில் ஒரு பாட்டு பண்ணியிருந்தோம். அதைப் பார்த்துட்டு நிறைய பெற்றோர்கள் பாராட்டி மெயில் பண்ணியிருந்தாங்க. பசுவின் கதைன்னு எமோஷனலான கதை ஒன்று பாட்டு மூலமா சொல்லியிருப்போம். அந்தப் பாடல் ரொம்பவே உருக்கமா இருக்கும். அந்தப் பாட்டை எப்ப பார்த்தாலும் நம்மை அறியாமல் கண்ணீர் வந்திடும். அதுவும் பலருக்கும் பிடிச்சிருந்தது. சில பாடல்களுக்கு நிச்சயம் வரவேற்பு நல்லா இருக்கும்னு எதிர்பார்த்து பண்ணியிருப்போம்.. ஆனா, அதுக்கெல்லாம் அந்த அளவுக்கு ரெவன்யூ வந்திருக்காது. இப்படி ஏற்ற, இறக்கங்களைக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கோம். கன்டென்ட் விஷயத்தில் எனக்கும் கணவருக்கும் நிறைய வாக்குவாதங்கள் நடக்கும். எங்க ரெண்டு பேருக்குமே ஓகே என்றால் மட்டும்தான் அடுத்த கட்டத்துக்கு அதைக் கொண்டு போவோம்” என்ற ஜெயலட்சுமியிடம் அடுத்த திட்டம் குறித்துக் கேட்டோம்.

‘‘ ‘கண்மணி, சிட்டி, பப்பு'ன்னு கதாபாத்திரங்களை உருவாக்கி அவங்க மூலமா சின்னச்சின்னக் கதைகள் சொல்ல ஆரம்பிச்சோம். அந்தக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. சில குழந்தைகள் நாங்க கற்பனையில் உருவாக்கின கதாபாத்திரங்களை நேரில் பார்க்கணும்னு அவங்க பெற்றோர்கள்கிட்ட அடம்பிடிக்கிறாங்களாம். அந்தக் கதாபாத்திரங்கள் வெச்சு ஒரு சீரிஸ் ஆரம்பிச்சிருக்கோம். ஒரு பாடல் ரெடி பண்றதுக்கு குறைஞ்சது 3, 4 மாதங்கள் ஆகும். கடந்த ஐந்தாண்டுகளாக வார வாரம் வெள்ளிக்கிழமை ஒரு புதுப்பாடலை தவறாமப் பதிவிட்டிடுவோம். அதற்கு ஏற்ற மாதிரியான திட்டமிடலுடன் அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்துட்டு இருக்கோம்’’ எனப் புன்னகைக்கிறார், ஜெயலட்சுமி குபேர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism