Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: டாக்டர், இன்ஜினீயர்... இப்போ யூடியூபர்ஸ்!

மாயழகன் & முத்துசிவா
பிரீமியம் ஸ்டோரி
மாயழகன் & முத்துசிவா

காலேஜ் படிக்கும்போது ஸ்காலர்ஷிப் கொடுப்பாங்க. அந்தப் பணத்தில் ஒரு லேப்டாப் வாங்கியிருந்தேன். அந்த லேப்டாப்பை வெச்சு வீடியோவை எடிட் பண்ணக் கத்துக்கிட்டேன்

SHAREபட்டா பரம்பரை: டாக்டர், இன்ஜினீயர்... இப்போ யூடியூபர்ஸ்!

காலேஜ் படிக்கும்போது ஸ்காலர்ஷிப் கொடுப்பாங்க. அந்தப் பணத்தில் ஒரு லேப்டாப் வாங்கியிருந்தேன். அந்த லேப்டாப்பை வெச்சு வீடியோவை எடிட் பண்ணக் கத்துக்கிட்டேன்

Published:Updated:
மாயழகன் & முத்துசிவா
பிரீமியம் ஸ்டோரி
மாயழகன் & முத்துசிவா

“வீடியோவில் எடுக்கிற ஒவ்வொரு கான்செப்டையும் லைவ்வா செய்து பார்த்து அதோட ரிசல்ட்டை அப்படியே மக்களுக்குக் காட்டுறோம். அப்படி உண்மையைக் காட்டியதாலதான் மக்கள் தொடர்ந்து எங்க சேனலைப் பார்த்து, எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. சமீபத்தில் சவுண்ட் மூலமா பாட்டிலை உடைக்கிற முயற்சி மேற்கொண்டோம். ஐந்து நாள்கள் முயற்சிக்குப் பிறகு அந்தக் கண்ணாடி பாட்டிலை உடைச்சோம். அந்த ஐந்து நாள்களும் இதை எப்படியாவது செய்து முடித்து ஆடியன்ஸுக்கு ரிசல்ட் காட்டிடணும் என்கிற எண்ணம் மட்டும்தான் எங்களுக்கு இருந்தது’’ என்கிறார்கள், மாயழகன் & முத்துசிவா.

தன்னம்பிக்கைக் கதைகள், பல்சுவைச் செய்திகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஏற்ற யூடியூப் தளம் ‘Minutes Mystery.’ அண்ணன், தம்பி இருவரும் அவர்களுடைய யூடியூப் பயணம் குறித்து நம்மிடம் பேசினர்.

“எங்க சொந்த ஊரு, மதுரை அருகே உள்ள திருமங்கலம். அப்பா தையல்காரர். அம்மா குடும்பத்தலைவி. எங்க ரெண்டு பேரை எப்படியாவது நல்லா படிக்க வெச்சிடணும் என்கிற எண்ணம் அவங்களுக்கு இருந்துச்சு. என் அண்ணன் சூப்பரா படிப்பான். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ரெண்டிலும் அவன்தான் மாவட்டத்தில் ஃபர்ஸ்ட் மார்க். கடன் வாங்கி, பேங்க்ல லோன் போட்டு அவனை டாக்டருக்குப் படிக்க வச்சாங்க. நான், இன்ஜினீயரிங் படிச்சேன். அண்ணன் எம்.பி.பி.எஸ் முடிச்சிட்டு வில்லிபுத்தூர் பக்கத்துல வேலைக்குப் போய்ட்டிருந்தான். நான் படிப்பு முடிஞ்சதும் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். எங்கேயும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கலை. கடைசியா தெரிஞ்ச அண்ணன் மூலமா ஒரு யூடியூப் சேனலில் எடிட்டர் வேலை கிடைச்சது.

SHAREபட்டா பரம்பரை: டாக்டர், இன்ஜினீயர்... இப்போ யூடியூபர்ஸ்!

காலேஜ் படிக்கும்போது ஸ்காலர்ஷிப் கொடுப்பாங்க. அந்தப் பணத்தில் ஒரு லேப்டாப் வாங்கியிருந்தேன். அந்த லேப்டாப்பை வெச்சு வீடியோவை எடிட் பண்ணக் கத்துக்கிட்டேன். பிறகு, அந்த யூடியூப் சேனலுக்கு வேலைக்குப் போனேன். அங்க வேலை பார்த்தப்போதான், யூடியூப் மூலமா எவ்வளவு பெரிய பிசினஸ் நடக்குதுன்னு புரிஞ்சது. யூடியூபில் வீடியோ மட்டுமே பார்த்துட்டிருந்த எனக்கு, அது தொடர்பா வேலை பார்க்கும்போது அதில் என்னென்ன நன்மைகள் இருக்குதுங்கிற விஷயம் தெரிஞ்சது. யூடியூப் மூலமா பணம் சம்பாதிக்க முடியும் என்பது தெரிஞ்சதுமே அண்ணன்கிட்ட ‘இந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துடுறேன். நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்’னு சொன்னேன். அண்ணனும் வரச் சொன்னார். தனித்துவமா என்ன பண்ணலாம்னு யோசிச்சு ‘2 minutes news’னு ஒரு சேனல் 2016-ல் ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்தில் அந்த நேரத்தில் தெரிந்த செய்தியைப் பதிவு பண்ண நினைச்சேன். வெறுமனே வாய்ஸ் ஓவரில் செய்தியைச் சொல்லி வீடியோ போட ஆரம்பிச்சேன். ஜெயலலிதா இறந்த செய்தியிலிருந்து இறுதி ஊர்வலம் வரைக்கும் எல்லாத்தையும் பேசி வீடியோவா பதிவிட்டேன். அந்த வீடியோ நல்ல ரீச் கொடுத்துச்சு. அதுல வந்த வருமானம் என் மாச சம்பளத்தைவிட அதிகம். அப்போதான் நானும் அண்ணனும் ‘இதையே நம்மளோட வேலையா மாத்திப்போம்’னு முடிவெடுத்தோம்.

எங்க வீடு ரொம்பச் சின்னது. அங்கே உட்கார்ந்து வாய்ஸ் ஓவர் பேசுறது ரொம்பக் கஷ்டம். பக்கத்துல வண்டி ஓடுற சத்தத்திலிருந்து, வீட்டுச் சுவர் எதிரொலிக்கிறது வரைக்கும் வாய்ஸ் ஓவரில் பிரச்னை இருக்கும். ‘வாய்ஸ் நல்லாவே இல்லை’ன்னு கமெண்ட்டில் பலர் திட்டினாங்க. ‘நாம வெற்றியடைய மாட்டோமோ’ன்னு பயங்கர மன அழுத்தத்துக்குள்ளே போயிட்டேன். அண்ணன் கொடுத்த நம்பிக்கையால் தொடர்ந்து வாய்ஸ் ஓவர் கொடுத்துட்டிருந்தேன். ஆனாலும், பெரிய அளவிற்கு ரீச் ஆக முடியலை” என்ற மாயழகனை நிறுத்தி முத்துசிவா தொடர்ந்தார்.

“நான் காதலிச்சிட்டு இருந்தவங்களோட வாய்ஸ் டிரை பண்ணிப் பார்ப்போம்னு சொல்லி அவங்களை வீடியோவுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கச் சொன்னேன். அவங்களும் பேசிக் கொடுத்தாங்க. அவங்க குரல் பலருக்கும் பிடிச்சிருந்தது. சேனலும் ஹிட் ஆச்சு. பிறகு, எங்க காதலை வீட்டில் சொல்லி ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கிட்டோம். தம்பியும் வாய்ஸ் ஓவரில் டிரெயின் ஆகிட்டான். என் மனைவியும் தம்பியும் மாறி மாறிப் பேச ஆரம்பிச்சாங்க.

திருமணம் முடிந்த சமயம் எனக்குத் தஞ்சாவூரில் பிஜி சைக்கியாட்ரி பண்ண சீட் கிடைச்சது. தம்பிகூடச் சேர்ந்து நாமளும் யூடியூப்பில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணினேன். படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு வீட்டுக்கு வந்துட்டேன். தம்பி வேலையை விட்டதுக்கே வீட்டில் பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஒருவழியா எல்லாரையும் சமாதானப்படுத்தினோம்” என்றதும் மாயழகன் தொடர்ந்தார்.

“யூடியூப் பொறுத்தவரை வருஷா வருஷம் பாலிசி மாத்திட்டே இருப்பாங்க. அந்தச் சமயம், அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மட்டும்தான் நியூஸ் பற்றிய செய்தி வெளியிடணும். மத்த சேனல் எல்லாம் ‘காசிப் சேனல்’னு சொல்லி அதை நாங்க புரமோட் பண்ண மாட்டோம்னு யூடியூபில் பாலிசி கொண்டு வந்துட்டாங்க. 2017-ல் சேனல் மொத்தமா டௌன் ஆச்சு. மூன்று மாசத்துக்கு வருமானம் வராதுன்னு தெரிஞ்சிடுச்சு. அதுக்குப் பிறகு 2017-ல் ‘Minutes Mystery’ சேனலை ஆரம்பிச்சோம்.

SHAREபட்டா பரம்பரை: டாக்டர், இன்ஜினீயர்... இப்போ யூடியூபர்ஸ்!

எங்க வீட்டுக்குப் பக்கத்துல வாடகைக்கு ஒரு இடம் பிடிச்சோம். ‘வெறுமனே வாய்ஸ் ஓவர் மட்டும் வேண்டாம். ஸ்கிரீன் முன்னாடி வரலாம்’னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் வீடியோவில் பேச ஆரம்பிச்சோம். ‘வாய்ஸ் நல்லா இருக்கு... முகம் கேவலமா இருக்கு’ன்னு அப்பவும் கமெண்ட் பண்ணிட்டுதான் இருந்தாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம ஓட ஆரம்பிச்சோம். வெவ்வேறு நாடுகளில் நடந்த கதைகள், தன்னம்பிக்கைக் கதைகள்னு பேச ஆரம்பிச்சோம்.

சொந்தமா கான்செப்ட் கிரியேட் பண்றவங்களை ‘ரியல் கிரியேட்டர்ஸ்’னு யூடியூப் டேர்மில் சொல்லுவாங்க. அப்படி நாமளே கன்டென்ட் உருவாக்கலாம் என 2020-ல் ‘Gazilions’, ‘SMBros Vlog & Cooking’னு ரெண்டு சேனலை ஆரம்பிச்சோம். நாங்க மட்டும் வளராம, எங்க குடும்பத்தையும் சேர்த்து வளர்க்கணும்னு நினைச்சோம். இப்போ அப்பாவும் எங்ககூட வீடியோ பண்ணிட்டிருக்காரு. மாமா பொண்ணுங்களும் பசங்களும் எடிட்டிங் வேலைகளை கவனிச்சிக்கிறாங்க. டீமில் இருக்கிற எல்லாருக்கும் அம்மா சமைச்சுக்கொடுப்பாங்க. அண்ணி கன்டென்ட்டில் உதவி பண்ணுவாங்க. இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமே யூடியூபிற்காக உழைக்கிறோம்...”

அவர்கள் சிரிப்பில் குடும்பத்தின் மகிழ்ச்சி தெரிகிறது.