Published:Updated:

Shareபட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திடும்!”

சுஹேல். - பமினா
பிரீமியம் ஸ்டோரி
சுஹேல். - பமினா

ஒன்றரை மாதம் கழிச்சுதான் நூறு சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. என்னோட சொந்தக்காரங்ககிட்ட என் வீடியோ அனுப்பி அவங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணச் சொன்னேன்.

Shareபட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திடும்!”

ஒன்றரை மாதம் கழிச்சுதான் நூறு சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. என்னோட சொந்தக்காரங்ககிட்ட என் வீடியோ அனுப்பி அவங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணச் சொன்னேன்.

Published:Updated:
சுஹேல். - பமினா
பிரீமியம் ஸ்டோரி
சுஹேல். - பமினா

‘நானும் பமினாவும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். அதனால, சொந்தக்காரங்க மத்தியில் யாருமே எங்களை மதிக்கலை. நான் பேசுறதைக் கேட்கக்கூட அவங்க எல்லாரும் தயாராக இல்லை. என் பேச்சை நாலு பேராவது கேட்கணும், நம்மளைச் சுற்றி உள்ளவங்க நம்மளை மதிக்கிற அளவுக்கு ஏதாவது செய்து காட்டணும் என்பதற்காகத்தான் யூடியூப் ஆரம்பிச்சேன். இப்ப என் நோக்கம் நிறைவேறியிருக்குன்னு ரொம்பவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு!' எனத் தன்னம்பிக்கை ததும்பப் பேச ஆரம்பித்தார் சுஹேல்.

டெக்னாலஜி தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு, சுஹேலின் ‘Cyber Tamizha - சைபர் தமிழா' சிறந்த தளம்.

Shareபட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திடும்!”

“சொந்த ஊர் கோயம்புத்தூர். எனக்கு டெக்னாலஜி குறித்த விஷயங்கள் பேசப் பிடிக்கும் என்பதால் அது தொடர்பா 2010-ல் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். ஆனா, அந்த சேனல் சக்சஸ் ஆகலை. கல்யாணத்துக்குப் பிறகு, தினசரி நடக்கிற சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசலாம்னு மறுபடியும் ஒரு சேனல் ஆரம்பிச்சேன். எப்படி வீடியோ பண்றதுன்னு தெரியாம அந்த சேனலும் சக்சஸ் ஆகலை. ஆனா, அந்த சேனலின் மூலமா யூடியூப்பில் எப்படியான கன்டென்ட் கொடுக்கணும், என்ன மாதிரி பேசணும் என்கிற டெக்னிக்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.

2018-ல் ‘Cyber Tamizha - சைபர் தமிழா’ என்கிற சேனலை ஆரம்பிச்சேன். டெக்னிக்கலா நான் ஸ்டிராங் என்பதால், அது தொடர்பான வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சேன். முதல் வீடியோ எல்லாம் லோகோகூட இல்லாம அப்படியே அப்லோடு பண்ணினேன். அதை நாலு பேருகூட பார்க்கலை. காலையில் ஹார்டுவேர் கடைக்கு வேலைக்குப் போயிட்டு வந்து நைட்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வீடியோ பேசி சேனலில் அப்லோடு பண்ணுவேன். தூக்கமில்லாம தொடர்ந்து கிட்டத்தட்ட 6 வீடியோ பண்ணினதில் உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. மருத்துவமனையில் இருக்கும்போதே சேனலுக்கான லோகோ ரெடி பண்ணினேன். அப்ப நான் கிரியேட் பண்ணின லோகோதான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு!

Shareபட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திடும்!”

ஒன்றரை மாதம் கழிச்சுதான் நூறு சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. என்னோட சொந்தக்காரங்ககிட்ட என் வீடியோ அனுப்பி அவங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணச் சொன்னேன். அதுக்கு அவங்க, ‘நீ பார்க்கவே ரொம்ப அசிங்கமா இருக்க.. இதை எப்படி நான் மத்தவங்களுக்கு அனுப்புறது’ன்னு என் முகத்துக்கு நேராகவே சொன்னாங்க. தொடர்ந்து வீடியோ போட்டுட்டே இருந்தேன். முதன்முதலில் 7,800 ரூபாய் ரெவின்யூ கிடைச்சது. அதில் டிரைபேட், மைக் வாங்கினேன். அடுத்ததாகக் கிடைத்த 25,000-ல் கேமரா வாங்கினேன்.

ஒரு வருஷத்துக்குள்ளேயே ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. நம்மளுடைய மொபைல் போனை எப்படிப் பாதுகாப்பா பயன்படுத்தலாம்னு ஒரு வீடியோ பதிவிட்டேன். அதுக்கு நல்ல ரீச் கிடைச்சது. கிட்டத்தட்ட மூன்று நாள்களிலேயே மூன்று லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. அப்பதான் பமினா வேலையை விட்டுட்டு முழுசா சேனலைக் கவனிச்சிக்கச் சொன்னாங்க. மத்தவங்க என்னை நம்பலை. பமினா மட்டும்தான் என்னை நம்பி வேலையை விடச் சொன்னா. பிறகு, முழு நேர யூடியூபரானேன். ஒன்றரை வருடத்திலேயே ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உருவானாங்க. கோல்டு பிளே பட்டனும் வாங்கினேன். இந்த சேனலில் ஐந்து லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்தப்பவே 2019-ல் ‘Suhail - Vlogger’ என ஒரு சேனலை ஆரம்பிச்சேன். ஆனா, அதில் தொடர்ந்து வீடியோ போடாம இருந்தேன்” என்றதும் பமினா தொடர்ந்தார்.

Shareபட்டா பரம்பரை: “சப்ஸ்கிரைபர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திடும்!”

“லாக்டௌன் வந்த சமயத்தில் எனக்கு வேலை போச்சு. சுஹேல் ‘நீயும் நானும் சேர்ந்து வீடியோ பண்ணலாம்’னு சொன்னார். ஆரம்பத்தில் எனக்கு வீடியோ பண்ண விருப்பம் இல்லை. ஆனா, முதல் வீடியோ எடுக்க ஆரம்பித்ததும் அந்த ஒர்க் எனக்கும் பிடிச்சுப்போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து முதல் வீடியோ பண்ணி ‘Suhail - Vlogger’ சேனலில் பதிவிட்டோம். அதை இன்னொரு சேனலிலும் ஷேர் பண்ணியிருந்தோம். அப்போதான் சுஹேலுக்குக் கல்யாணமான விஷயமே அவருடைய சப்ஸ்கிரைபர்ஸுக்குத் தெரிஞ்சது. நாங்க சேர்ந்து பண்ணின வீடியோ நல்லா ரீச் ஆச்சு. எங்க ஃபேமிலிக்குள்ளே மரியாதை கிடைக்க ஆரம்பிச்சது. எங்களோட ரெண்டு சேனலும் வளர ஆரம்பிச்சது.

இப்ப நான் மாசமா இருக்கிறதனால ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ பண்றதுல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். என்னைப் பார்த்துக்க எங்க வீட்டில் பெரியவங்கன்னு யாரும் கிடையாது. சுஹேலும், நானும் மட்டும்தான் என்பதால் நேரத்துக்கு சாப்பிடாம வீடியோ எடுத்து கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகிடுச்சு. சப்ஸ்கிரைபரா ஒருவர் அறிமுகமாகி இப்ப எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் ஆகிட்டார். அவருடைய வீட்ல இருந்து கடந்த ஒரு மாசமா மதிய சாப்பாடு டைமுக்கு வந்திடும். அதுதவிர, இப்ப எடிட்டிங் விஷயங்களை ஒருவர் பார்த்துப்பார். நாங்க வீடியோவில் மட்டும் கவனம் செலுத்துறோம்” என்றதும் சுஹேல் தொடர்ந்தார்.

“போன வருஷம் பிளாக்‌ஷிப் அவார்ட்ஸ் எங்களுக்குக் கிடைச்சது. ‘நீ உருப்படமாட்டே’ன்னு சொன்னவங்க மத்தியில், என்னுடைய சப்ஸ்கிரைபர்ஸ் எனக்காக ஓட்டு போட்டு அந்த ஸ்டேஜ்ல என்னை நிற்க வச்சு விருது வாங்க வச்சாங்க. அந்த விருது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதைவிட, அந்த நிகழ்ச்சியில் கமல்சார்கிட்ட பேசுற வாய்ப்பு கிடைச்சது. அந்தத் தருணத்தை என்னால எப்பவும் மறக்கமுடியாது” என்று நெகிழ்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism