ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விகடன் : உண்மை தெரிஞ்சாகணும்!

சினிமா விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விகடன்

பேச்சுவார்த்தைதான் போயிட்டிருக்கு. இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

கோலிவுட்டின் தற்போதைய வைரல் டாக் சிம்புவின் வெயிட் லாஸ். இது எப்படி சாத்தியமானது?

டிரெய்னர் சந்தீப் ராஜ்: “கடந்த ஆண்டு நவம்பரில் ‘மஹா’ படப்பிடிப்பில் இருக்கும் போதே சிம்புவுக்கு வொர்க் அவுட்டை ஆரம்பித்து விட்டேன். அப்போ சிம்புவின் வெயிட் 110. செமையாக வொர்க் அவுட் செய்து, தற்போது 71.1 கிலோவுக்கு முன்னேறியிருக்கிறார்.”

மணிரத்னமும் நீங்களும் சேர்ந்து தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜியின் லாபத்தை ஃபெஃப்சி அமைப்பினருக்குக் கொடுக்கப்போவதாக செய்திகள் வந்ததே; அது உண்மையா?

தயாரிப்பாளர் ஜெயேந்திரா: ‘‘உண்மைதான். சினிமாத் தொழிலாளர்கள் கடந்த ஒன்பது மாசமா வேலையில்லாம இருக்காங்க. இவங்களுக்கு உதவி செய்றதுக்காக ‘நவரசா’வைத் தொடங்கியிருக்கோம்.’’

சினிமா விகடன் :  உண்மை தெரிஞ்சாகணும்!

‘கொரோனா அச்சத்தைப் போக்க, ரசிகர்களுடன் நடிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்’ என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

மிர்ச்சி சிவா: ‘`யார் படம் பார்க்க வந்தாலும் நம்மளை நாம பாதுகாப்பா வெச்சுக்கிறது ரொம்பவே முக்கியம். அவர் சொல்ற மாதிரி நடிகர்கள் படம் பார்க்க வந்தால், மக்களும் பயம் இல்லாமல் வருவாங்க என்பதிலும் ஒரு நியாயம் இருக்கு. ஆனால், எல்லாரும் பாதுகாப்பாகத்தான் இருக்கணும்.”

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் வில்லன் கேரக்டரில் நீங்க நடிக்கப் போவதாக செய்திகள் வருதே?

சமுத்திரக்கனி: “லாக்டெளனுக்கு முன்னாடி இப்படி ஒரு செய்தி எனக்கும் வந்தது. ஆனால், படக்குழு சார்பாக யாரும் என்னிடம் பேசவில்லை. தெலுங்கு, தமிழ்ப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.’’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதால், நீங்கள்தான் அந்தப் படத்தை இயக்கப்போகிறீர்கள் எனச் சொல்கிறார்களே?

இயக்குநர் பேரரசு: “பேச்சுவார்த்தைதான் போயிட்டிருக்கு. இன்னும் எதுவும் முடிவாகவில்லை.”