Published:Updated:

`நமக்கு எது நல்லதுங்கறது நம்ம மண்ணுக்குதான் தெரியும்!' பொங்கலுக்கு வரும் தனுஷின் 'பட்டாஸ்' டிரெய்லர்

தனுஷ்க்கு கொடி மூலம் டபுள் ரோல் ஹிட் கொடுத்த துரைசெந்தில் குமார் மீண்டும் தனுஷை வைத்து இயக்கும்படம் பட்டாஸ். கொடி படத்தில் டபுள் ரோல் இருந்ததுபோல் இந்தப் படத்திலும் டபுள் ரோல்தான். அதில் ஒரு கேரக்டருக்கு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, இன்னொரு ஹீரோயினாக மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. பொங்கலுக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன், காமெடி, கலாய் டிரெய்லரில் டபுள் ரோலில் தனுஷ் கலர்புல் காட்டுகிறார். டிரெய்லர் தற்போது வரவேற்பை பெற்றுவருகிறது.

பட்டாஸ் படம் குறித்து இயக்குநர் துரைசெந்தில் குமார் அளித்துள்ள பேட்டியை படிக்க கீழே கிளிக் செய்யவும்!

"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”
அடுத்த கட்டுரைக்கு