Published:Updated:

``நான் ஒழுக்கமா இருக்கக் காரணமே அஜித் சார்தான்; ஏன்னா?! - ஆதிக் ரவிசந்திரன் 

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

`தபாங் 3' படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். இதுகுறித்து அவரிடம் ஒரு சின்ன சாட்..!

சிம்புவை வைத்து கடைசியாக `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்தர், தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுபோக, சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியிருக்கும் `தபாங் 3' படத்துடைய தமிழ் வெர்ஷனுக்கு வசனங்களும் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

``பிரபுதேவா மாஸ்டர்கூட ஒரு படம் பண்ணிட்டிருக்கேன். அதைப் பத்தி இப்போ பேச முடியாது. இந்தப் படத்துடைய ஷூட்டிங்லதான் மாஸ்டர் எனக்கு நல்ல பழக்கமானார். இங்க இருக்கும்போதுதான் `தபாங் 3' படம் பற்றிச் சொன்னார். `தமிழ் வெர்ஷனுக்கு நீங்க டயலாக் எழுத முடியுமா'னு கேட்டிருந்தார். உடனே ஓகே சொல்லிட்டேன். `யங் மங் சங்' படத்துடைய இயக்குநர் அர்ஜுன் சாரும் நானும் சேர்ந்துதான் டப்பிங்குக்கு டயலாக் எழுதினோம்."

`` `தபாங்' படத்துடைய டிஸ்கஷன் எல்லாத்துலேயும் அர்ஜுன் இருந்தார். ஸோ, படத்துடைய அடித்தளம் அவருக்கு நல்லாவே தெரியும். முதல்ல இந்தப் படத்துடைய ஸ்க்ரிப்ட்டை வாங்கி டாப் டு பாட்டம் படிச்சேன். அப்புறம் தமிழுக்கு ஏத்த மாதிரி வசனங்களை எழுதி முடிச்சேன். வசனங்களை எழுதுறதுக்கே 30 நாள்கள் ஆகிடுச்சு. இந்தப் படத்தைப் பார்க்கிறப்போ கண்டிப்பா டப்பிங்கிற ஃபீல் வராது. சல்மான் கான் தமிழ்ல நடிச்சு வெளியாகியிருந்தா எப்படி இருக்குமோ அப்படி நெனச்சுதான் படத்துக்கு வசனங்கள் எழுதினேன்.

சல்மான்கான்
சல்மான்கான்

இந்தப் படத்துல சல்மான் கானுடைய மீசை எம்.ஜி.ஆர் ஸ்டைல்ல இருக்கும். இதுக்காகவே, `தாய்க்குலத்தை அரவணைக்கிறவன் நான்'னு தமிழ் ஆடியன்ஸுக்குத் தகுந்த மாதிரி பன்ச் டயலாக்ஸ் எழுதினேன். என்னுடைய இன்புட்ஸைப் பார்த்துட்டு பிரபு தேவா மாஸ்டர் ரொம்பப் பாராட்டினார். சல்மான் கானுக்கும் எங்களுடைய வொர்க் பிடிச்சிருந்தது."

`` `பாகுபலி', `கே.ஜி.எஃப்' போன்ற மாஸ் படங்கள்ல ஹீரோவுக்கு சேகர்தான் குரல் கொடுத்திருப்பார். அவருடைய வாய்ஸே செம கெத்தா இருக்கும். அவரைத்தான் இந்தப் படத்துலேயும் சல்மானுக்கு டப்பிங் பேச வெச்சோம். அவர் டப்பிங் பேசும்போது நானும் கூட இருந்தேன். இந்த வருஷம் ரொம்பவே பாசிட்டிவா போயிட்டிருக்கு. நல்ல படங்களும் பண்ணிட்டிருக்கேன். அஜித் சார்கூட வேலை பார்த்ததுக்கு அப்புறம் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் என்கிட்ட சொன்னதை எல்லாம் வாழ்க்கையில நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய அம்மா அஜித் சாருடைய தீவிர ரசிகை. அவர்கூட நான் வொர்க் பண்றதுல அம்மாவும் ரொம்ப ஹேப்பி. இதுக்கு அப்புறமாவது நல்ல படங்கள் பண்ணுனு சொன்னாங்க. காலையில ரொம்ப லேட்டா எழுந்திருக்கிற பையன் நான். ஆனா, அஜித் சாருடைய வார்த்தையைக் கேட்டு சீக்கிரம் எழுந்திருக்க ஆரம்பிச்சிட்டேன்.''

பிரபுதேவா
பிரபுதேவா
Vikatan

``நிறைய வேலைகளை முழு ஈடுபாட்டோட பண்ணிட்டிருக்கேன். ரொம்ப ஒழுக்கமா இருக்கேன். அதுக்கு காரணம் அஜித் சார்தான். அவரை இன்னொரு முறை பார்க்கிறதுக்காக காத்துட்டிருக்கேன். போனி கபூர், சல்மான் கான்னு இவங்ககூட வேலை பார்த்தது பாலிவுட் படங்கள் மேல நிறைய காதல் ஏற்பட்டிருக்கு. மாஸான படங்கள் எடுக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, சில காரணங்களால அது முடியாம போயிடுச்சு. இப்போவும் என்னுடைய ஃபோக்கஸ் முழுக்க படம் இயக்குறதுலதான் இருக்கு. நடுவுல படங்கள்ல நடிக்கிறப்போ வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்கவும் ஆசைப்படுறேன்" என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பின் செல்ல