Published:Updated:

``ரஜினியின் சின்ஸியரும் பயமும்..." - முருகதாஸ் வியந்து பகிரும் 5 விஷயங்கள்!

ரஜினி
ரஜினி

ரஜினி சாரிடம் பேசும்போது நாற்பது வயதுடையவரிடம் பேசுவது போல்தான் இருக்குமே தவிர, எழுபது வயதில் இருப்பவரிடம் பேசுவதுபோல் இருக்காது

"நான் தூரமாக இருந்து சினிமாவைப் பார்த்து, பின் அதற்குள் வந்து ஒரு படம் பண்ணினேன். அதேபோல, ரஜினி சாரையும் திரையில் பார்த்து, தூரத்தில் இருந்து பார்த்து, பின் அருகில் பார்த்துப் பேசி இப்போது அவருடன் ஒரு படம் பண்ணியிருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2PeGwIO

ரஜினி சார் கடுமையாக உழைப்பார். மிகவும் எளிமையானவர். எல்லோரிடமும் எந்தவித வேறுபாடும் இன்றி நட்பாகப் பழகக்கூடியவர் என்று அவரைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருப்பார்கள். அதனால் நான் அதையே சொல்லப் போவதில்லை.

ரஜினி
ரஜினி

ஆனால், நான் பார்த்த அளவில், சினிமாவை அவ்வளவு சின்ஸியராகவும், பயத்துடனும், மரியாதையுடனும் அணுகும் வெகு சிலரில் ரஜினி சாரும் ஒருவர்.

ஒவ்வொரு படத்திலும் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சின்ன விஷயத்துக்காகவும் மெனக்கெடுவதும், அந்தக் காட்சி சரியாக வந்துவிட்டதா' எனத் தனக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்ப்பதும் என என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தினார்.

இவ்வளவு பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட் இத்தனை வெற்றிகளுக்குப் பிறகும் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருப்பது எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. வேறு எந்தத் துறையிலும் இந்த அளவுக்கு யாரும் இவ்வளவு தீவிரமாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

ரஜினி சாரிடம் பேசும்போது நாற்பது வயதுடையவரிடம் பேசுவது போல்தான் இருக்குமே தவிர, எழுபது வயதில் இருப்பவரிடம் பேசுவதுபோல் இருக்காது. சொன்ன விஷயத்தையே சொல்வது, அதையே விரிவாகச் சொல்வது என்று இல்லாமல், எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகவும், சுருக்கமாகவும், நறுக்கென்றும் சொல்லிவிடுவார். அவருடைய அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கும்.

ரஜினி
ரஜினி

அதேபோல், ஆன்மிகத்தில் அவர் படித்த புத்தகங்களையெல்லாம் பார்த்தால் ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கும். விதவிதமான புத்தகங்களைப் படித்து, அதுபற்றி நிறைய பேசுவார். எனக்கும் இரண்டு புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எனக்கு ஆன்மிகத்தின் மீது ஆர்வம் அதிகமாகக் காரணம் அவர்தான்."

- தன் பள்ளிப் பருவம் முதல் 'தர்பார்' ஷூட்டிங் வரையிலும் ரஜினி உடனான அனுபவங்களைப் பகிரும் ஏ.ஆர்.முருகதாஸின் சிறப்புக் கட்டுரையை ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியில் முழுமையாக வாசிக்க > ரஜினி - 70 அபூர்வ தர்பார்! https://cinema.vikatan.com/tamil-cinema/ar-murugadoss

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு