Published:Updated:

ரொமான்டிக் அதர்வா, சிலம்பம் சந்தானம்... இயக்குநர் கண்ணனின் அடுத்தடுத்த படங்கள்!

அதர்வா - கண்ணன்
அதர்வா - கண்ணன்

அதர்வா படத்தையடுத்து சந்தானத்தை இயக்கவிருக்கிறார், கண்ணன்

அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரை வைத்து இயக்குநர் கண்ணன் இயக்கி தயாரித்திருந்த படம், `பூமராங்'. விவசாயம், தண்ணீர் பிரச்னை ஆகியவற்றை இத்திரைப்படம் பேசியிருந்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் அதர்வாவை இயக்குகிறார் கண்ணன் என்ற செய்திகள் வந்தது.

கண்ணன் - சந்தானம்
கண்ணன் - சந்தானம்

தற்போது அந்தப் படத்துக்கான பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். `கொடி' படத்துக்குப் பிறகு, அனுபமா தமிழில் நடிக்கும் படம் இது. லவ் ஆக்‌ஷன் ஜானரை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அதர்வா வேறு ஒரு படத்துக்குச் செல்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் சந்தானத்தை வைத்து ஆக்‌ஷன் காமெடி ஜானரில் கிராமத்துப் படம் ஒன்றை இயக்கி முடிக்க உள்ளார், கண்ணன்.

சந்தானம்
சந்தானம்

அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த உள்ளனர். இந்தப் படத்க்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வாவிடம் சிலம்பம் கற்று வருகிறார், சந்தானம்.

அடுத்த கட்டுரைக்கு