பிரீமியம் ஸ்டோரி

facebook.com/rajeev rajamani

லாரி பின்னால ‘10மீட்டர் இடைவெளி விட்டு வரவும்’னு எழுதியிருக்கு. ஆனா அது ரெண்டு மீட்டர், கிட்ட போனதுக்கப்புறம்தான் கண்ணுக்கே தெரியுது.

facebook.com/Parthiban Gowthamaraj

அடுத்து போகிற போக்கில, பேரன்பின் ஆதி ஊற்று, விழுமியங்கள்னு ஹர்பஜன் சிங் இறங்கப் போறான். அப்படியே ‘வாசகசாலை மாதாந்திரத் தொடர் நிகழ்வு’ல விமர்சனம், நூல் அறிமுகம்னு சுருதி டிவியில சொற்பொழிவாற்றப்போறான்.

வலைபாயுதே

twitter.com/indupriya911

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் திரும்ப சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை... பிரியாணியில் பீஸாகக் கிடப்பதால்!

 twitter.com/mohanramko

‘கட்டிக்கிட்டு அழவேண்டியிருக்கு’ EMI -ஐ!

‏twitter.com/BlackLightOfl

விமானத்தை ஆச்சர்யமாகப் பார்த்த காலத்திலிருந்து பட்டாம்பூச்சியை ஆச்சர்யமாய்ப் பார்க்கும் காலத்தில் வாழ்கிறோம். #காலமாற்றம்

வலைபாயுதே

twitter.com@yugarajesh2

முதல்ல மத்தியில் பாஜக வந்தால் காவிரியில் நீர் வரும்னு சொன்னாங்க, இப்ப கர்நாடகாவில் பாஜக வந்தால் காவிரியில் நீர் வரும்னு சொல்றாங்க, அடுத்து தமிழகத்தில் பாஜக வந்தால் காவிரியில் நீர் வரும்னு சொல்லி, கதையை முடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

‏twitter.com/Thaadikkaran

“குக்கர் என்றாலே 20 ரூபாய் நோட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது” - தமிழிசை. நோட்டா என்றாலே... சரி விடுங்க, அதை எதுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு...

twitter.com/amuduarattai

பேருந்தில் நமக்குக் கால் வைக்க இடம் இருக்காது. ஆனால், கண்டக்டர் கண்களுக்கு மட்டும், பல ஏக்கர் இடம் உள்ளே காலியாக இருப்பதாகத் தெரியும்.

வலைபாயுதே

twitter.com/prabhujbps

என்னா உலகம்டா இது, பேய்க்குக் கால் இல்லைன்னு சொன்னாலும் நம்புறோம், பேய் வரும்போது கொலுசு சத்தம் கேக்கும்னு சொன்னாலும் நம்புறோம். நமக்கெல்லாம் கடைசி வரை எடப்பாடிதான் முதல்வர்...

‏twitter.com @Bubbly_Girl__

உலகத்திலேயே சிறந்த அலாரம் அம்மாதான். 7 மணிக்கு எழுப்பச் சொன்னா 6 மணிக்கே 8 மணி ஆயிடுச்சினு சொல்லி எழுப்புவாங்க. #அம்மாடா!

வலைபாயுதே

twitter.com@idumbaikarthi

‘‘ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்யத் தயார்” - பொன்னார். ‘மலையைத் தூக்கி வெச்சிங்கன்னா தூக்குறேன்’ மொமன்ட்!

facebook.com/ஜோ.ஸ்டாலின்

ரெண்டு வயசுல பேசுறதுக்குக் கத்துக்கிறோம்; ஆனா, எங்க எப்படிப் பேசணும்னு எத்தனை வயசானாலும் கத்துக்கிறது இல்ல!

வலைபாயுதே

facebook.com/Jamalan Tamil

‘எழுச்சிமிக்க உண்ணாவிரதம்’னா என்னண்ணே? தெரிஞ்சி தின்ன மிக்சரைத் தெரியாம திங்கறதுதான் தம்பி.

 - சந்தேக சாம்பிராணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு