ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

##~##

• கொழுகொழு அரபிக் குதிரை ஹன்சிகா மோத்வானிக்கு டைரக்டர் ஷங்கர் மீதுதான் கண். அவர் இயக்கத்தில் நடிக்கிறோமோ இல்லையோ, ஒரே ஒரு முறை நேரில் சந்தித்தால் போதும் என்று ஆசைப்பட்டார். சமீபத்தில், ஹன்சிகாவையும் அவருடைய அம்மாவையும் அழைத்து ஷங்கர் தன் வீட்டைச் சுற்றிக்காண்பிக்க, பாராசூட் இல் லாமல் வானத்தில் மிதந்தாராம் ஹன்சிகா. 

• சமீபகாலமாக, இளையராஜாவுக்கும் பிரகாஷ்​ராஜுக்கும் அப்படி ஒரு நெருக்கம். எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அவரது கதாபாத்திரத்தை இளையராஜாவை இமிடேட் செய்வது​போல அமைத்து இருந்தாராம் சூர்யா. 'நோ’ சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகிக்​கொண்டாராம் பிரகாஷ்ராஜ்.

மிஸ்டர் மியாவ்

• 'யாருடா மகேஷ்’ இன்னும் ரிலீஸே ஆகவில்லை. அதற்குள் அந்தப் பட ட்ரெய்லரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் யூ-டியூப்பில் பார்த்து விட்டனர். வசன விஷயத்தில் 'டூ’ விட்டுக்கொண்டு விஜயகாந்த், வடிவேலு ரேஞ்சுக்கு மோதிக்கொண்ட இயக்குநர் மதனும் கேமராமேன் ராண்டியும் இப்போது பழம் விட்டுக்கொண்டு பாச மழை பொழிகிறார்களாம். (நடுவுல கொஞ்சம் கோபத்தைக் காணோம்)

• 'ஆதிபகவன்’ படத்துக்காகக் கடுமையாக ஹோம் ஒர்க் செய்து நடித்தார் 'ஜெயம்’ ரவி. படம் நிறைவடைய இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சிதான் பாக்கி. அது இதுவரை 'ஜெயம்’ ரவி படத்துக்காகப் பட்ட வலிகளுக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கும் என்றனர். எடுக்க இருந்தது, நீது சந்திராவுடனான நெருக்கமிகு பாடல் காட்சியாம். இப்போது திடீரென்று அந்தப் பாடலைப் படமாக்கப் போவது இல்லை என்று ரவியின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார் அமீர்.