Published:Updated:

`உன்னால எதுவும் செய்ய முடியாது என மிரட்டினார்!'- ஈஸ்வர் விவகாரத்தில் விபரீத முடிவெடுத்த ஜெயஸ்ரீ

ஈஸ்வர், ஜெயஸ்ரீ
ஈஸ்வர், ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீயின் நிலைமையை உணர்ந்த அந்த நண்பர், உடனடியாக விரைந்து சென்று நீலாங்கரையிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஜெயஶ்ரீயை அட்மிட் செய்திருக்கிறார்.

சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை மீண்டும் உச்சகட்டத்துக்கு வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன், ‘ இந்த விவகாரம் குறித்து எங்கும் எதையும் பேசக்கூடாது’ என தனக்கு மிரட்டல் வருவதாக ஜெயஸ்ரீ பேட்டி அளித்திருந்தார்.

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ
மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

இந்த நிலையில், இரு தினங்களுக்குமுன் தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஜெயஸ்ரீ. அவர், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, நண்பர் ஒருவருக்கு போன் செய்து, சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். ஜெயஸ்ரீயின் நிலைமையை உணர்ந்த அந்த நண்பர், உடனடியாக விரைந்து சென்று நீலாங்கரையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்திருக்கிறார். தற்போது, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயஸ்ரீ இருக்கிறார்.

`குடும்பப் பிரச்னை சற்று ஓய்ந்துவிட்டதுபோல் தெரிந்த ஜெயஸ்ரீ – ஈஸ்வர் – மகாலட்சுமி விவகாரத்தில் மறுபடியும் என்ன நடந்தது?' என விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நடிகை ஒருவர், "கைதுசெய்யப்பட்ட ஈஸ்வர், அடுத்த சில நாள்களிலேயே வெளியே வந்துவிட்டதால் ஜெயஸ்ரீ சோர்ந்துபோய்விட்டார். ’ஜெயில்ல இருந்து உடனே வெளியில வந்துட்டேன், அதனால இனி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. நீ எங்க வேணாலும் போய் புகார் சொல்’ என ஈஸ்வர் கேலி செய்திருக்கார். போதாக்குறைக்கு மகாலட்சுமிக்கு ஆதரவாக பெண் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலையிட்டு, ‘இனி இந்த விவகாரம் குறித்து மீடியாவிடம் பேசக்கூடாது’ எனக் கூறியிருக்கிறார்.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

மக்கள் மத்தியில இந்த விவகாரம் பெரிய அளவில் போய் சேர்ந்துவிட்டதால், ஈஸ்வர்-மகாலட்சுமி சேர்ந்து நடிச்சிட்டுவந்த `தேவதையைக் கண்டேன்’ சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என ஜெயஸ்ரீ நம்பினார். ஆனால், டிசம்பர் இறுதி வாரத்துடன் முடியப் போவதாகச் சொல்லப்பட்ட தொடரை மறுபடியும் நீட்டித்துவிட்டனர். இதனால், ஜெயஸ்ரீ மேலும் அப்செட் ஆகிவிட்டார்" என்றார் வருத்தத்துடன்.

``ஏற்கெனவே, குடியிருக்கிற ஃபிளாட்ல தனக்குத் தெரிஞ்ச சிலரை வச்சு ஜெயஸ்ரீயைக் கண்காணிச்சுட்டுவந்தார் ஈஸ்வர். ஈஸ்வர் வாங்கின சில கடன்களுக்காகக் கடன் கொடுத்தவங்க, ஜெயஸ்ரீயைத் தேடி வரத் தொடங்கினாங்க. இதனால ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தார் அவர். இந்தச் சூழல்ல, ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஈஸ்வர்-மகாலட்சுமியுடன் அந்தத் தொடர்ல நடிச்சிட்டிருக்கிற சிலரே ஜெயஸ்ரீகிட்ட பேசியிருக்காங்க.

முடிகிறதா ஈஸ்வர் - மகாலட்சுமியின் `தேவதையை கண்டேன்' சீரியல்! பின்னணி என்ன?!

‘பழையபடி ஷூட்டிங் ஸ்பாட்ல ஈஸ்வரும் மகாலட்சுமியும் நெருக்கமாகத்தான் பழகிட்டிருக்காங்க’ன்னு சொல்லியிருக்காங்க. இதில், விரக்தியின் உச்சத்துக்குப் போய் தூக்க மாத்திரைகளைப் போட்டிருக்காங்க. சரியான நேரத்துல மருத்துமனைக்கு மட்டும் போகாம இருந்தா நிலைமை மோசமாப் போயிருந்திருக்கும்" என்கின்றனர், `தேவதையைக் கண்டேன்' தொடரில் பணியாற்றும் சிலர்.

இதுகுறித்து ஜெயஸ்ரீயுடன் பேச முயற்சித்தோம். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு