Published:Updated:

முடிகிறதா ஈஸ்வர் - மகாலட்சுமியின் `தேவதையை கண்டேன்' சீரியல்! பின்னணி என்ன?!

ஈஸ்வர்
ஈஸ்வர்

ஜெயஶ்ரீ, தொடர்ந்து ஈஸ்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஶ்ரீ மீது புகார்களை வாசித்தார்.

இரு வாரங்களுக்கு முன் பரபரப்பைக் கிளப்பிய சின்னத்திரை ஜோடி ஈஸ்வர் - ஜெயஶ்ரீ குடும்ப விவகாரத்தில், அநேகமாக இதுதான் ஃபைனல் ட்விஸ்ட்டாக இருக்குமெனத் தெரிகிறது. தன் கணவர் ஈஸ்வருக்கும் சீரியலில் இணைந்து நடிக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு என்றும் அதனால்தான் விவாகரத்து கேட்டு தன்னைத் துன்புறுத்துகிறார் என்றும் ஜெயஶ்ரீ போலீஸிடம் புகாரளிக்க, அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார், ஈஸ்வர்.

மகாலட்சுமி
மகாலட்சுமி
``லிவ்-இன்  நடிகரை மிரட்டவே வந்தார் ஈஸ்வர்!'' - ஜெயஶ்ரீ - மகாலக்ஷ்மி விவகாரம்

ஜெயஶ்ரீ, தொடர்ந்து ஈஸ்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஶ்ரீ மீது புகார்களை வாசித்தார். `மகாலட்சுமியின் கணவர் அனில்தான் ஜெயஶ்ரீயைத் தூண்டிவிடுகிறார்' என்றார் ஈஸ்வர். அதற்குப் பின் அனிலும், மகாலட்சுமியும் தனித் தனியே பிரஸ் மீட் வைத்து, இதுகுறித்துப் பேசினார்கள்.

இறுதியாக, தன்னுடைய ஃபேஸ்புக்கை சிலர் ஹேக் செய்ததாகவும், அதில் விரும்பத்தகாத பதிவுகளைப் போட்டதாகவும் ஜெயஶ்ரீ கூறினார். அதுமட்டுமின்றி, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியுமெனக் கூறியதுடன், இந்த விவகாரம் அடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஈஸ்வர் - மகாலட்சுமி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் சீரியலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இது உண்மையா என விசாரிக்க, தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசினோம்.

``என்னைக் கைது பண்ணாங்க ஓகே; ஆனா ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சு தெரியுமா?!" - ஜெயஶ்ரீ கணவர் ஈஸ்வர்

"இந்தப் பிரச்னை தீவிரமாகி, ஈஸ்வர் ஜெயிலுக்குப் போன சமயத்துல, நல்லவேளையா ஷூட்டிங்கிற்கு பிரேக் கொடுத்திருந்தாங்க. அதனால, அவருக்கான சீன் இல்லை. 15 நாள் பிரேக் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிக்கிற நிலையில இருக்கும்போது, ஈஸ்வரும் மகாலட்சுமியும் பழையபடி ஷூட்டிங்கிற்கு வருவாங்களானு சந்தேகம் இருந்தது. ஆனா, அவங்க வந்தாங்க. இந்தப் பிரச்னை அவங்களுக்குள்ள எந்தவித மனக்கசப்பையும் உண்டாக்கலைனு தெரியுது. ஆனாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருடைய முகத்துலேயும் ஒருவித இறுக்கத்தைப் பார்க்க முடிஞ்சது. இவங்களுடைய பிரச்னையால சீரியலின் ஆடியன்ஸுக்கு மத்தியில ஒருவித எதிர்மறையான எண்ணம் உருவாகிட்டதா சிலர் வெளிப்படையாவே பேசிக்கிட்டாங்க."

"மக்கள் மனசுல பெயரை தக்க வெச்சிக்கணும்னா, தேவையில்லாத சர்ச்சைக்குள்ள சிக்குற ஆர்ட்டிஸ்ட்டுகளை சீரியலை விட்டே தூக்கணும், இல்லைன்னா அந்த சீரியலையே தூக்கணும்னு சேனல் நலம்விரும்பிகள் பேசத் தொடங்க, சீரியலை முடிவுக்குக் கொண்டுவர்ற முடிவை எடுத்திருக்கிறதா தெரியுது'' என்றார்கள் யூனிட்டில் சிலர்.

தேவதையைக் கண்டேன் டீம்
தேவதையைக் கண்டேன் டீம்

தகவலை உறுதிசெய்ய சேனல் தரப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, "ஆமாங்க. இந்த மாத இறுதியில சீரியல் முடிவடையப்போகுது. புது வருஷ தொடக்கத்துல, அந்த ஸ்லாட்டில் ஒரு புது சீரியலை எதிர்பார்க்கலாம்'' என உறுதிப்படுத்தினார்கள்.

'தேவதையைக் கண்டேன்' சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது, நடிகர் ஶ்ரீ ஹீரோவாகவும் ஷாமிலி ஹீரோயினாகவும், மகாலட்சுமி வில்லியாகவும் நடித்திருந்தனர். அந்தச் சமயத்தில்தான், மகாலட்சுமி நடித்த `முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேருக்குதான் அர்ச்சனை' என்கிற அரசு விளம்பரம் வைரலானது.

``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்!'' - மகாலட்சுமி

மகாலட்சுமியின் செல்வாக்கு அதிகரிக்க, அதன் விளைவாகத் தொடரிலிருந்து ஹீரோயினும் அடுத்து, ஹீரோவும் வெளியேறினார்கள். தொடர்ந்து, ஈஸ்வர் ஹீரோவக வர, மகாலட்சுமியின் நெகட்டிவ் கேரக்டரே பாசிடிவ்வாக மாறத் தொடங்கியது. இந்த நிலையில்தான், ஈஸ்வர்-ஜெயஶ்ரீ -மகாலட்சுமி பிரச்னை வெடித்து சீரியலை முடிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு