
நட்புதான் என் குடும்பம்
``ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மூத்த பொண்ணு ஜோவிகா ஏஜ் அட்டென்ட் பண்ணியிருக்கா. அதுக்காக வீட்டுல சின்னதா ஒரு ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணியிருந்தேன். தாய்மாமன்கிற முறையில் சேரன் அண்ணா வந்தார். அண்ணான்னு பேருக்காக மட்டும் கூப்பிடல. எனக்கு ஏதாவதுன்னா, என் அண்ணா வருவார்’’ என்று மகிழ்ச்சியாகப் பேசுகிறார் வனிதா விஜயகுமார்.
எல்லாருக்கும் குடும்பம்தான் பெரும் துணையா இருக்கும். துரதிஷ்டவசமா என் வாழ்க்கையில் அப்படி நடக்கல.
அப்பா அம்மாவுக்குத்தான் சினிமாவுல நண்பர்கள் அதிகம். எனக்கு `பிக் பாஸ்' மூலமா புது சொந்தங்கள் கிடைச்சிருக்கு. லாஸ்லியாவை என் சொந்த தங்கச்சியாத்தான் பார்க்கிறேன்.
வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு?
நிச்சயம் என் திருமண வாழ்க்கைதான். மெச்சூரிட்டி இல்லாத வயசுல எனக்குத் திருமணம் நடந்தது. என் குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்காக வாழணும்னு தோண ஆரம்பிச்சது. அட்வெஞ்சர் நிறைஞ்ச வாழ்க்கை என்னோடது. ஆனா, அதுக்காக நான் வருத்தப்பட்டதில்லை.
திருமணம் பற்றிய புரிதல் என்ன?
கணவன் மனைவி ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழ்ற வாழ்க்கைமேல எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு. என்னை மாதிரி வாழ்க்கையில் அடிபட்டவங்களுக்கு மட்டும்தான் இது புரியும். வெளியே இருந்து கமென்ட் பண்றது ஈஸி. ‘கபாலி’ ஷூட்டிங்கின்போது ரஜினி அங்கிள்கிட்ட ‘வாழ்க்கையில் சரி எது? தப்பு எது?’ன்னு கேட்டேன். ‘எதுவும் சரி இல்லை. அதே மாதிரி எதுவும் தப்பும் இல்லை. மத்தவங்களுக்கு எது சரின்னு பார்த்தா உன்னால வாழ முடியாது. உன் வாழ்க்கையை நீ வாழ்’ என்று ரஜினி அங்கிள் சொன்னார். அதைத்தான் இப்ப செய்துட்டு இருக்கேன்.
சமீபத்தில் ஷேர் பண்ணியிருந்த உங்க குடும்பத்தின் குரூப் போட்டோ பத்தி..?
அதைப் பார்த்தப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நானா இருந்திருந்தா, குடும்பத்தில் இருக்கிற ஒருத்தரை ஒதுக்கிவெச்சிட்டு சந்தோஷமா போட்டோ எடுத்து வெளியிட மாட்டேன். ப்ரீத்தா, ஸ்ரீதேவியை நான் தூக்கி வளர்த்திருக்கேன். ப்ரீத்தாகூட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து டிரஸ் செலெக்ட் பண்றது, ஹேர் ஸ்டைல் பண்றதுன்னு பல வேலைகள் பார்த்திருக்கேன். சமைச்சுக்கொண்டுபோய் ஊட்டிவிட்டிருக்கேன். மொத்தத்துல அம்மாவைவிட அதிகமா கவனிச்சிருக்கேன். என் வாழ்க்கையைக்கூட பார்க்காம அவளைப் பத்திரமா பார்த்துகிட்டேன். ஆனா, அவங்க வளர்ந்ததுக்குப் பிறகு என்னை மறந்துட்டாங்க. இதையெல்லாம் இப்ப நான் பெருசா எடுத்துக்குறது இல்லை. கடந்து போயிட்டே இருக்கேன்.

குடும்பத்தினருக்கு உங்க மேல என்ன கோபம்?
யாருக்கும், யார் மேலேயும் கோபம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவங்க யார் சொத்தையும் நான் அபகரிக்கலை. என் சொத்தைதான் அவங்க வாங்கியிருக்காங்க. என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்தாங்க. ஆக்சுவலா, நான்தான் அவங்கமேல கோபப்படணும். என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல. சினிமாவைச் சேர்ந்த எங்க குடும்ப நண்பர்கள் பலர் அப்பாகிட்ட பேசியிருக்காங்க. அவர் தனியா ஒரு கதை சொல்லியிருக்கார். மொத்தத்துல சொல்றதுக்கு எதுவும் இல்லை!
மீடியா முன்னாடி பொண்ணுங்களோட நின்னு சண்டை போட்டது தப்பா தெரியலையா?
சினிமா பிரபலங்களா இருந்தா நம்மைச் சார்ந்த நல்லது, கெட்டது ரெண்டுமே வெளியே வரும். அதுக்கு நாம தயாரா இருந்தாதான், சினிமாவுக்கே வரணும்.
என் விஷயங்கள்ல மீடியா எனக்குப் பாதுகாப்பா இருந்திருக்கு. கேமரா இருக்குன்றதுனாலேயே என்கிட்ட போலீஸும் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் சாஃப்டா நடந்திருக்காங்க. பசங்களுக்கு குடும்ப விஷயம் தெரியாம பொத்திப்பொத்தி ஃப்ரிஜ்ட்ல எத்தனை நாள் வைக்கப்போறீங்க? தங்களைச் சுத்தி நடக்குற விஷயங்கள் குழந்தைகளுக்குத் தெரியறதுல தப்பில்லை. அது, தப்பா ஒரு விஷயத்தைச் செய்றதுக்கு முன்னாடி, நம்ம அம்மா எவளோ கஷ்டப்பட்டாங்கன்னு யோசிக்க வைக்கும்.