Published:Updated:

`புதுசா நான் என்ன சொல்ல?' - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கலகலத்த சந்தானம்

சந்தானம்
சந்தானம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நடிகர் சந்தானம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பிறந்துள்ள புத்தாண்டு திரைப்படத்துறையில் தனக்கு நிலையான இடத்தை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார் நடிகர் சந்தானம்.

சந்தானம்
சந்தானம்

தொலைக்காட்சி காமெடி ஷோவில் அறிமுகமாகி, அதன் பின் திரைப்படங்களில் காமெடியனாகப் பிரபலமானவர் சந்தானம். கடந்த சில வருடங்களாக ஹீரோவாகத் தொடர்ந்து நடித்து வருகிறார்.

புத்தாண்டு பிறந்ததையொட்டி இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த அவர், சிறப்பு வழிபாடு செய்தார். தான் புதிதாக நடித்து வரும் டகால்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும், இந்தப் புத்தாண்டு முதல் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தன் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக மீனாட்சி அம்மன் கோயிலில் வேண்டுதல் செய்ய அவர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

சந்தானம்
சந்தானம்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்ததன் நோக்கம் மற்றும் அதன் சிறப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பு பற்றி புதுசா நான் என்ன சொல்ல? இப்போது மட்டுமல்ல, வருடாவருடம் மீனாட்சி அம்மனை வழிபட வந்து கொண்டிருகிறேன்" என்றார்.

பின் செல்ல