Published:Updated:

பசு நெய் சமையலில் கலக்கிய `அவள் வாசகிகள்'... டாப் 10 ரெசிபிக்களில் ஜெயித்தது எது தெரியுமா?

டாப்-10 ரெசிப்பிக்கு உரியவர்கள் நேற்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்துகொண்டார்கள். இதில் முதல் கட்டமாக ஃபைனலிஸ்ட்டுகள் தங்களின் ரெசிபிக்களை ஜூம் கால் வழியே ஆசிரியர் குழுவின் மேற்பார்வையில் செய்துகாட்டினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வள் விகடன், A1 SKC பசு நெய்யுடன் இணைந்து வழங்கிய `பசு நெய்யுடன் சமைங்க! பரிசுகளை அள்ளுங்க!' என்ற மாபெரும் சமையல் போட்டியின் இறுதிச் சுற்று விகடன் அலுவலகத்தில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

அவள் விகடன் சமையல் போட்டி
அவள் விகடன் சமையல் போட்டி

சில வாரங்களுக்கு முன்பு அவள் விகடன் சார்பில் ஒரு மெகா சமையல் போட்டியை அறிவித்திருந்தோம். "A1 SKC பசு நெய் பயன்படுத்தி உங்கள் ரசனைக்கு ஏற்ப நீங்கள் செய்யும் இனிப்பு, காரம், பலகாரம் என ஏதேனும் ஒரு ரெசிபியுடன் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு A1 SKC பசு நெய் வழங்கும் ரூ.1000 மதிப்பிலான கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும். பிற ஃபைனலிஸ்ட்டுகளுக்கு ரூ. 500 மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும். ரெசிபிக்களை அனுப்பும் அனைத்து போட்டியாளர்களுக்கும் 50 மில்லி A1 SKC பசு நெய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் அவள் விகடனின் இ-சர்ட்டிஃபிகேட் அனுப்பப்படும்" என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா காலம் என்பதால் கூட்டத்தைத் தவிர்க்க போட்டியின் முதல் சுற்று இணையத்தின் வழியே நடைபெற்றது. அவள் விகடன் சார்பில் வழங்கப்பட்ட இணைய முகவரிக்கு வாசகிகளை ரெசிப்பிகளின் செய்முறைகளை அனுப்பச் சொல்லியிருந்தோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 675 வாசகிகள் போட்டியில் கலந்துகொண்டு தங்களின் ரெசிபிக்களை அனுப்பி வைத்தனர். இதைப் பரிசீலித்த அவள் விகடன் ஆசிரியர் குழு 675 ரெசிப்பிகளிலிருந்து டாப்-15 ரெசிபிக்களை தேர்வு செய்தது. இந்த டாப்-15 ரெசிப்பிகளில் முதல் பத்து இடங்களிலிருந்த ரெசிப்பிக்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

அவள் விகடன் சமையல் போட்டி
அவள் விகடன் சமையல் போட்டி

மில்லட் முருங்கை இலை லட்டு, குஞ்சாலாடு, நியூட்ரி டிலைட், த்ரீ இன் ஒன் கேக், பனை கிழங்கு காஜு கட்லி, நிகிடி, தந்தூரி வெஜ் மோமோஸ், கோதுமை குருணை இனிப்பு பொங்கல், பூசணிக்காய் அல்வா, சிறுதானிய பிஸிபேளாபாத் ஆகியவை இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப்-10 ரெசிப்பிக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த டாப்-10 ரெசிப்பிக்கு உரியவர்கள் நேற்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்துகொண்டார்கள். இதில் முதல் கட்டமாக ஃபைனலிஸ்ட்டுகள் தங்களின் ரெசிபிக்களை ஜூம் கால் வழியே ஆசிரியர் குழுவின் மேற்பார்வையில் செய்துகாட்டினர். ரெசிப்பிக்கள் தயாரான பிறகு, சென்னை, அண்ணாசாலையில் உள்ள விகடன் அலுவலகத்திற்கு அவற்றை எடுத்து வந்து காட்சிப்படுத்தினர். பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் நடுவராகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார்.

சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்
சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

ரெசிப்பிகளை டேஸ்ட் செய்த நடுவர் அவற்றுக்குக் கொடுத்த கமென்ட், அதற்கு வாசகிகளின் பதில் என நிகழ்ச்சி களைகட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நடுவர் மல்லிகா பத்ரிநாத் சமையலில் தன் ஆரம்பகால அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். "கல்யாணம் ஆன புதுசுல ஒரு முறை என் மாமியார் ஊருக்குப் போயிட்டாங்க. கத்திரிக்காய் கறி செய்யலாம்னு ட்ரை பண்ணினேன். கொஞ்சம் சொதப்பலா பண்ணிட்டேன். புளிப்பு அதிகமாயிடுச்சு. காரத்தை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா போட்டு ஒரு வழியா சமாளிச்சிட்டேன். இதுமாதிரி ஒவ்வொரு ரெசிப்பியா நானே தனியா சொதப்பி, சொதப்பிச் செய்துதான் நல்லா செய்யக் கத்துக்கிட்டேன்" என்று சுவராஸ்யமான அனுபவங்களைக் கூறி நிகழ்ச்சிக்கு மேலும் சுவை கூட்டினார்.

அரங்கமே ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 'மில்லட் முருங்கை இலை லட்டு' செய்த பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதா நாராயணசாமி முதல் பரிசு பெற்றார். 'நிகிடி' ரெசிபியை செய்த நங்கநல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா இரண்டாம் பரிசை பெற்றார். 'கோதுமை குருணை இனிப்பு பொங்கல்' செய்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி மூன்றாம் பரிசு பெற்றார். முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு உரிய பரிசு தொகையுடன் சேர்ந்து A1SKC பசு நெய் சார்பில் ரூ. 1,000 மதிப்பிலான கிஃப்ட் ஹேம்பர்களும் வழங்கப்பட்டன. பிற ஃபைனலிஸ்ட்டுகளுக்கு ரூ.500 மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர்கள் வழங்கப்பட்டன.

அவள் விகடன் சமையல் போட்டி
அவள் விகடன் சமையல் போட்டி

இந்தப் பரிசுகளை நிகழ்ச்சியின் நடுவர் மல்லிகா பத்ரிநாத்துடன் இணைந்து, A1 SKC பசு நெய் நிறுவனத்தின் இயக்குனர்(மார்க்கெட்டிங்) எஸ். வெங்கடேசனும் மற்றும் அவரின் மனைவி கலைவாணியும் வழங்கினர். தவிர போட்டியில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவள் விகடனின் இ-சர்ட்டிஃபிகேட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் லைவ் ஷோ விகடன், அவள் விகடன் மற்றும் அவள் கிச்சன் ஃபேஸ் புக் பக்கங்களில் ஒளிபரப்பப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு