Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகு குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாம்! நடுத்தர மக்களுக்கும் நனவாகும் ஃபாரின் டூர்

T O U R I S M

பிரீமியம் ஸ்டோரி

கொரோனாவுக்குப் பிறகு, சுற்றுலாத்துறை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. முடங்கிக் கிடந்த மக்கள் ஆர்வமாக வெளியில் சென்று வர விரும்புகிறார்கள். தற்போது சுற்றுலாத் துறை எப்படி இருக்கிறது, சுற்றுலா செல்பவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்பது குறித்து ஜி.டி ஹாலிடேஸ்ஸின் நிறுவனர் கார்த்திக் எம் மணிகண்டனிடம் கேட்டோம்.

சுற்றுலா
சுற்றுலா

கோவிட்டுக்கு பிறகான சர்வதேச சுற்றுலாத் துறை செயல்பாடுகள் எப்படி உள்ளது?

“மெதுமெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்பவர்கள் இப்போது பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடியும். மாலத்தீவு, துபாய், எகிப்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளுக்கு இப்போது இந்தியர்கள் சுற்றுலா செல்ல முடியும். இங்கு சுற்றுலா மேற்கொள்ள கோவிட் பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவை. விரைவில் மற்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டால் இந்தத் துறை வேகமான வளர்ச்சியைக் காணும்.”

சுற்றுலா செல்ல விரும்புகிறவர்கள் தற்போது என்னென்ன விஷயங்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்?

‘‘முதலில் கோவிட் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களை தேர்வு செய்வது கட்டாயம். அதிக மக்கள் நெருக்கம் இல்லாமல், நெருக்கமாக அதிக ஹோட்டல்கள் இல்லாத நகரங்களாகப் பார்த்து சுற்றுலா செல்லும் இடத்தைத் தேர்வு செய்வது பாதுகாப்பாக இருக்கும். மலைப்பாங்கான இடங்கள், ரிசார்ட் போன்ற இடங்களைத் தேர்வு செய்வது நல்லது.’’

கோவிட்டுக்குப் பிறகு சுற்றுலா செல்வதற் கான செலவு குறைந்திருக்கிறதா?

‘‘நிறையவே குறைந்திருக்கிறது. தேவை மிகவும் குறைந்ததே இதற்குக் காரணம். சுற்றுலாத் தலங்களுக்கு, ஹோட்டல்களுக்கு மக்களை வரவைக்க வேண்டும் என்பதற்காக கட்டணங்களை இந்தத் துறை சார்ந்த சேவைகளைத் தருபவர்கள். கொரோனாவுக்கு முன்பு ரூ.1 லட்சம் செலவு செய்து போய்வந்த இடத்துக்கு இப்போது ரூ.70,000-க்குகூட போய் வர முடியும்.’’

விலை உயர்ந்த சர்வதேச சுற்றுலாத் தலங்களை குறைவான செலவில் எப்படி அனுபவிப்பது?

‘‘திட்டமிடுவது மூலம் இதைச் செய்ய முடியும். எந்த நாட்டுச் சுற்றுலாவும் அதிக செலவைக் கொண்டதல்ல, சரியாகத் திட்ட மிட்டால் குறைந்தது 4 முதல் 6 மாதங்களுக்கு முன்கூட்டியே விமான டிக்கெட், ஹோட்டல் களை புக் செய்தால் செலவு கணிசமாகக் குறையும். இதன் மூலம் சுற்றுலா செலவில் 20% - 30% வரை செலவைக் குறைக்க முடியும்.”

நடுத்தர மக்களின் வெளிநாட்டு சுற்றுலாக் கனவை நனவாக்க இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?

‘‘சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் சுற்றுலா ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம் பத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவர அதிக சலுகைகள் அளிக்கப்படும். இதைப் பயன் படுத்தி வெளிநாட்டு சுற்றுலாக் கனவை நனவாக்கி மகிழ முடியும்.”

சுற்றுலாத் தலங்களின் விதி முறைகள், வழிமுறைகள், கட்டணம் போன்ற தகவல்களைப் பெறுவது எப்படி?

‘‘ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான வழி முறைகள் இருக்கின்றன. இவற்றைத் தெரிந்துகொள்ள அந்தந்த நாட்டின் சுற்றுலாத்துறை, குடியேற்றத் துறை (இமிக்கிரேஷன்) இணையதளங்களைப் பார்க்க வேண்டும். அதில் எப்போது விசா கொடுக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். எங்களைப் போன்ற சுற்றுலா நிறுவனங்களை அணுகியும் விவரங்களைப் பெற முடியும்.”

சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

“மிகப் பிரகாசமாக இருக்கும். கோவிட் காலத்தில் அடைந்துகிடந்தவர்கள் எல்லாம் சுதந்திரப் பறவைகளாக பல இடங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். பலரால் சுற்றுலா செல்ல முடியாத காரணத்தால்தான் சுற்றுலா வளர்ச்சி குறைந்திருக்கிறதே தவிர, வேறு காரணம் இல்லை. அனைத்து நாடுகளும் சுற்றுலாவுக்குத் திறந்துவிடும்பட்சத்தில் முன்னைவிட அதிகமாக மக்கள் சுற்றுலா செல்வார்கள் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு” என்று நிறைவு செய்தார்.

கொரோனா முடிந்த பின் நீங்கள் எங்கே சுற்றுலா செல்லப் போகிறீர்கள்?

கார்த்திக் எம் மணிகண்டன்
கார்த்திக் எம் மணிகண்டன்

“கல்லூரியில் ஜாலியாக ஆரம்பித்தேன்..!”
கார்ப்பரேட் டூரில் கலக்கும் கார்த்திக்

“நான் கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, இண்டஸ்டிரியல் விசிட் (ஐ.வி) என்கிற தொழில் சுற்றுலாவுக்கு என் வகுப்பில் படிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு வந்தது. இதை நல்லபடியாக முடித்துக் கொடுத்தபின், கோவையில் உள்ள இதர கல்லூரி மாணவர்களும் ஐ.வி செல்ல ஏற்பாடு செய்துதந்தேன். இந்தத் தொழிலில் இதற்கென இருப்பவர்களைவிட சிறப்பாகச் செய்ததால், 400-க்கும் மேற்பட்ட ஐ.வி-க்களை ஏற்பாடு செய்ய முடிந்தது. படிப்பை முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்த ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்தேன். முதலில் ஐ.வி-க்கு மட்டும்தான் ஏற்பாடு செய்தோம்.

பிறகு, கார்ப்பரேட் டூரில் இறங்கினேன். ஆறு மாத கால தொடர்முயற்சிக்குப் பிறகு, ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 24. இப்படி ஆரம்பித்துதான் அடுத்து இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஹேவல்ஸ், இந்தியா சிமென்ட் என நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். இப்போது 200-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இப்போது 90 கோடி ரூபாய்க்கு டேர்ன்ஓவர் செய்து வருகிறோம். விரைவில் ரூ.100 கோடி என்ற இலக்கை அடைவோம்” எனப் பெருமையாகச் சொல்லும் கார்த்திக்குக்கு இப்போது வயது 32 மட்டுமே!

“பொதுவாகவே பிசினஸில் ‘பர்சனல் டச்’ என்கிற விஷயம் ஜெயிக்க வைக்கும். சுற்றுலாத் தொழிலில் இது மிக முக்கியம். உதாரணத்துக்கு, நம்மூர்க்காரர்கள் எங்கு சென்றாலும் இரவு சாப்பாட்டில் கொஞ்சம் ரசம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அவர்களுக்காக நாங்கள் ரசப்பொடி, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றையும் எடுத்துச் செல்வது வழக்கம். இதேபோல் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவுக்கு ஏற்பாடு செய்வது எங்கள் ஸ்பெஷல். வாடிக்கை யாளரின் மனதுக்கு பிடித்த தனித்துவமான விஷயங்களைக் கண்டறிந்து பர்சனல் டச்சோடு செய்யும்போது கண்டிப்பாக ஜெயிக்க முடியும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்” என்றார் கார்த்திக் எம். மணிகண்டன். இவருடைய வெற்றிக்கதையை விரிவாக வீடியோவில் பார்க்க: https://www.youtube.com/watch?v=2ZiPcQ33Z08

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு