Published:Updated:

``யூ-டியூப் சேனல், ஜெ பயோபிக் அப்டேட், `எள்ளுவய' பாடல் உருவான கதை.." - ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பேட்டி.

இசையமைப்பாளராகத் தன்னை நிரூபித்த ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு நடிகராக தனக்கான இடத்தைப் பிடிப்பதில் முனைப்போடு இருக்கிறார். ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும், `அசுரன்', `சூரரைப் போற்று' மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். `அசுரன்' அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார்.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை

உங்களுக்கான இடம் இதுதான்னு நீங்க நினைக்கிறது என்ன?

"இசையிலும், நடிப்பிலும் எனக்கு தனி மார்க்கெட் உருவாக்கிக்கணும்னு நினைக்கிறேன். இந்தப் படம் பண்றேன், அந்தப் படம் பண்றேன்னு நானே கேட்கமாட்டேன். இந்த வருடம் நான் இசையமைச்ச படங்கள்ல 'அசுரன்' வெளியாச்சு. நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என்டர்டெயின் பண்ற படங்கள்ல நடிக்கணும்னுதான் முடிவு பண்ணி வெச்சிருந்தேன். ஆனா, 'நாச்சியார்' படத்துல என் டிராக்கை மாத்திவிட்டார், பாலா சார். அந்தளவுக்கு என்னால நடிக்க முடியுமானு யோசிச்சேன். பாலா சார்தான் நம்பிக்கை கொடுத்தார். அப்புறம் 'சர்வம் தாளமயம்' படத்துல ராஜீவ் சார் இன்னும் என்னை மெருகேற்றினார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைப் பொறுத்தவரை நல்ல கமர்ஷியல் படம்; சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகும்னு நினைச்சேன். ஆனா, நல்லா நடிச்சிருக்கேன்னு கமென்ட்ஸ் வந்தது. நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இருந்தாலும், நான் அதிகம் எதிர்பார்க்கிறது வசந்த பாலன் சாருடைய 'ஜெயில்'. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இருக்கவேண்டிய இடத்துக்குப் போவார். முக்கியமான அரசியலைப் பேசியிருக்கார். படம் நிச்சயம் பேசப்படும்."

ஒரு வருடத்துக்கு இத்தனை படம் பண்ணணும்னு நினைக்கிறீங்களா?

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

"உதாரணத்துக்கு, வருடத்துல நாலு படம் பிளான் பண்ணா, ரெண்டு படங்கள்தான் சரியா நடக்குது. மீதி படங்கள் கொஞ்ச போர்ஷன் எடுத்ததோடு நிற்குது. சரின்னு அடுத்த படங்கள் கமிட் பண்ணா, அப்போ இந்தப் படங்களும் ஆரம்பிக்குது. இந்தப் படங்களுக்காக மத்த படங்களை கமிட் பண்ணாமலும் இருக்க முடியாது. எல்லாமே ஒரே நேரத்துல முடியிறதால அடுத்தடுத்து ரிலீஸாகிற மாதிரி இருக்கு. இப்போ அந்தப் பிரச்னைகள் இல்லாம பார்த்து, படங்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சிருக்கேன்."

'ட்ராப் சிட்டி' ஹாலிவுட் படத்துல நடிச்ச அனுபவம்?

"ஹிப்-ஹாப் பற்றிய ஹாலிவுட் படம் இது. பிராண்டன் ஜாக்சன் நடிச்சிருக்கார். முழுக்க முழுக்க இங்கிலீஷ்ல பேசி அந்த ஊர் நபர்களோட சேர்ந்து வேலை செஞ்சது ரொம்ப வித்தியாசமாவும், சந்தோஷமாவும் இருந்தது. இந்தப் படத்துல மருத்துவரா நடிச்சிருக்கேன்."

வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

வெற்றி மாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் காம்போ பயங்கரமா வொர்க் அவுட் ஆகுதே!

தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் குமார்
தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் குமார்

"சில காம்பினேஷன் க்ளிக் ஆகுறது மேஜிக்னு நினைக்கிறேன். நான் - தனுஷ் - வெற்றி மாறன் சேரும்போது ஒண்ணு நடக்குது, நான் - வசந்த பாலன் சேரும்போது 'வெயில்', 'அங்காடித் தெரு', 'ஜெயில்'னு நல்ல அவுட்புட் வருது. இதெல்லாம் நம்ம கையில இல்லை."

'அசுரன்'ல 'எள்ளுவய பூக்கலையே' பாட்டு உருவானது எப்படி?

"இந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நம்ம ஊர் இசையின் வேர்களிலிருந்து எடுத்ததுதான். 'எள்ளுவய பூக்கலையே' பாட்டுக்கு வைக்கம் விஜயலட்சுமி மாதிரி வித்தியாசமான குரல் வேணும்னு சொல்லிருந்தார், வெற்றி மாறன். அவங்க பிஸியா இருந்ததனால, பாட முடியல. தவிர, பாடல் உடனே தேவைப்பட்டதால, 'சைந்தவியை வெச்சு டிராக் எடுத்து வைக்கிறேன்'னு இயக்குநர்கிட்ட சொன்னேன். இந்தப் பாடலோட வித்தியாசமான உணர்வை சைந்தவிகிட்ட சொன்னபோது, அவங்க குரலை மாத்திப் பாடுனதுதான், இந்தப் பாட்டு. பிறகு, இயக்குநரும் தயாரிப்பாளரும் கேட்டுட்டு, 'யார் பாடுனது சூப்பரா இருக்கு'ன்னு சொன்னாங்க. அப்படியே படத்துல வெச்சுட்டோம்!"

'சூரரைப் போற்று' படம் எப்படி வந்திருக்கு?

ஜி.வி.பிரகாஷ் குமார் - செந்தில் கணேஷ் - சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷ் குமார் - செந்தில் கணேஷ் - சுதா கொங்கரா

"சூப்பரான படம். ஓப்பனிங் சீன்ல இருந்தே படம் நம்மளை ஈர்த்திடும். 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு, டைம் எடுத்து இந்தக் கதையைப் பண்ணியிருக்காங்க, சுதா. நிச்சயமா சூப்பர் ஹிட்டாகும்."

உங்க தங்கச்சி பவானியும் நடிக்க வந்துட்டாங்களே!

"பவானிக்கு சினிமாமேல அதிக ஆர்வம். கலைராணி மேடம்கிட்ட நடிப்பு கத்துக்கிட்டுதான் நடிக்க வந்திருக்காங்க. இப்போ 'க/பெ ரணசிங்கம்' ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. அப்புறம், மாரி செல்வராஜ் படத்திலும், 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா பண்ணப்போற படத்திலும் நடிக்கிறாங்க. அவங்களுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நம்புறேன்."

'மகத்தான மனிதர்கள்' யூ-டியூப் சேனல் ஐடியா எப்படி வந்தது?

"நிறைய போராட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிச்ச பிறகு, பலரை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. நம்ம சமூகம் நல்லாயிருக்கணும்னு நினைச்சு, பலபேர் நினைச்சே பார்க்க முடியாத பல விஷயங்களைப் பண்ணிக்கிட்டிருக்காங்க. அவங்களையெல்லாம் வெளியே கொண்டு வரணும்னு நினைச்சேன். அவங்களுக்காக ஆரம்பிச்சதுதான், 'மகத்தான மனிதர்கள்'. சமூக வலைதளங்கள்ல இப்போ நெகட்டிவிட்டி அதிகமா இருக்கு. அதனால, இவங்களை மாதிரி நபர்களுடைய கதைகளும், சாதனைகளும் மத்தவங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும்."

'பேச்சுலர்' பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததே!

'பேச்சுலர்' பட ஃபர்ஸ்ட் லுக்
'பேச்சுலர்' பட ஃபர்ஸ்ட் லுக்

"மாடர்ன் காதல் கதை இது. 'அர்ஜூன் ரெட்டி' மாதிரி ஒரு படமா இருக்கும். அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்குறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பண்றார். நான் நடிக்க ஸ்கோப் உள்ள படம். ஃபர்ஸ்ட் லுக்கை வெச்சு இந்தப் படம் இப்படித்தான் இருக்கும்னு நினைக்கக்கூடாது."

எந்த ஜானர் படங்களுக்கு இசையமைக்கணும், நடிக்கணும்?

"எனக்கு வரலாற்றுப் படங்கள்மேல ஆர்வம் அதிகம். அந்தமாதிரி படங்கள்ல நடிக்கணும், அந்தப் படங்களுக்கு இசையமைக்கணும்னு ஆசைப்படுறேன்."

Vikatan

ஜெயலலிதா பயோ-பிக் 'தலைவி' படத்துக்கு இசையமைக்கிறீங்க. எதுவும் அப்டேட்?

"ஒரு பாட்டு முடிச்சிருக்கேன், சைந்தவிதான் பாடியிருக்காங்க."

`பிகில்' கதை, `சக்தே இந்தியா' கதை மட்டுமல்ல... இந்தப் படங்களின் கதையும்தான்!

யார் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?

"ராஜமெளலி, சஞ்சய் லீலா பன்சாலி"

அடுத்த கட்டுரைக்கு