Published:Updated:

Chhello Show: RRR இல்லை, The Kashmir Files இல்லை; இந்தியா ஆஸ்கருக்கு அனுப்புவது இந்தப் படத்தைத்தான்!

Chhello Show
News
Chhello Show

'RRR' படத்தை ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களே சிலாகித்துப் பேசிய நிலையில், நிச்சயம் இந்தியா சார்பாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால்...

Published:Updated:

Chhello Show: RRR இல்லை, The Kashmir Files இல்லை; இந்தியா ஆஸ்கருக்கு அனுப்புவது இந்தப் படத்தைத்தான்!

'RRR' படத்தை ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களே சிலாகித்துப் பேசிய நிலையில், நிச்சயம் இந்தியா சார்பாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால்...

Chhello Show
News
Chhello Show

அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 95-வது அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் நடக்க இருக்கிறது. இந்த விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (Last Film Show) தேர்வு செய்யப்பட்டுள்ளது. பான் நளின் இயக்கிய இத்திரைப்படத்தில் பவின் ரபரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர். 2021-ல் டிரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், அதன் பிறகு பல்வேறு விருதுகளில் கலந்துகொண்டது.

Chhello Show
Chhello Show

குறிப்பாக அக்டோபர் 2021-ல் இத்திரைப்படம், 66வது Valladolid சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக் விருதை வென்றது. இந்தப் படம் படச்சுருள்களில் திரையிடப்பட்ட சினிமா பற்றியும் அதைக் கனவாகக் கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கைப் பற்றியும் பேசுகிறது.

இந்த வருடம் அதிகப்படியான கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜமௌலியின் 'RRR', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'ராக்கெட்ரி' போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 'RRR' படத்தை ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களே சிலாகித்துப் பேசிய நிலையில், நிச்சயம் இந்தியா சார்பாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

RRR
RRR

இதனிடையே சென்ற வருடம் 'ஜெய் பீம்' உள்ளிட்ட படங்கள் ஸ்பெஷல் என்ட்ரியாக தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்துகொண்டன. அதேபோல, தற்போது ராஜமௌலியின் 'RRR' படமும் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு, பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கரின் சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'Chhello Show' திரைப்படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி, இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.