Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழு பேர்... ஒரு பேய்... எப்படி இருக்கிறது ஸ்டீபன் கிங்கின் IT..?

 

                        வீட்டில் என்றேனும் தனியாக ஓர் இரவைக் கழித்து இருக்கிறீர்களா? தூங்கும்  முன் கட்டிலுக்கடியில், பரண் மேல் எல்லாம் பார்த்துவிட்டு கதவின் அனைத்து பூட்டுகளையும் போட்டுவிட்டு விளக்குகளை அணைக்காமல் எப்போது தூங்கினோம் என தெரியாமல் தூங்கிய அனுபவம் இருக்கிறதா? பேய் என்று ஒன்று இருக்கோ இல்லையோ தெரியாது. ஆனால், அதன் மீது இருக்கும் பயம் மட்டும் அப்படியே இருக்கிறது என்பார் ஓர் மூத்த தமிழ் எழுத்தாளர். பயத்தினூடே நம்மை மிரளவைத்து அள்ளு கிளப்புவது தான் பேயின் ஸ்டைல். எல்லாப் பேய் படங்களிலுமே அப்படித்தான். ஆனால், பயந்தால் மட்டுமே கொல்வேன் என்பது தான் IT (அது). உங்களை எது அதிகமா மன உளைச்சலுக்குத் தள்ளுகிறதோ, அந்த உருவத்தை பேய் எடுத்துக்கொண்டு உங்களைக் கொள்ளை கொல்லும் என்பது தான் ITன் ஒன்லைன். 

IT


ஓர் மழைநாளில், பில் தனது ஏழு வயது சகோதரனுக்காக ஒரு காகிதகப்பலை செய்கிறான். மழைத்தண்ணீரில் செல்லும் அந்தக் காகிதக்கப்பல் பின்னாலேயே ஓடுகிறான் ஜியார்ஜ். கப்பல் அங்கிருக்கும் பாதாள சாக்கடைக்குள் செல்கிறது, ஜ்யார்ஜி குனிந்து, அந்த பாதாள சாக்கடையை பார்க்கிறான். அங்கு ஜோக்கர் வேசத்தில் தோன்றுகிறான் பென்னிவைஸ் கிளவுன். (எல்லாம் டிரெய்லர் சீன் தான் ஸ்பாய்லர் அல்ல. நோ டென்சன்) . அந்தக் காட்சியில் இருந்து படம் முழுக்க த்ரில்லர் சரவெடி தான். பில், பென், பெவெர்லி, ரிட்சி, ஸ்டேன் , மைக், எட்டி என ஏழு பேர் தான் படத்தின் ஹீரோ. பதின்ம வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பென்னிவைஸ் என்னும் பேய் செய்யும் எல்லா பீதிகளும் தெரியும். 

IT


ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒவ்வொரு கதை. தம்பியை இழந்து வாடும் பில்;தந்தையால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெவெர்லி; குண்டாக இருப்பதால் பிறரால் ஓரங்கட்டப்பட்டு எப்போதும் லைப்ரரி புத்தகம் என இருக்கும் பென்; எப்போதும் பேசிக்கொண்டே கவுன்ட்டர் கொடுக்கும் ரிச்சி; நிறவெறியால் பாதிக்கப்பட்ட மைக்; தாயின் அதீத பயமுறுத்துலால் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் எட்டீ; மைன் நகரத்தில் சிறுபான்மையினராக இருக்கும் யூத அப்பாவிடம் திட்டு வாங்கும் ஸ்டேன் என லூசர் கிளப்பில் ஒவ்வொரு ஜீவனும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் அதே டெர்பியைச் சேர்ந்த ஹென்ரியின் குழு என படம் முழுக்க சிறுவர்கள் மட்டுமே. 

பேயின் மீது நமக்கு ஏற்படும் எல்லாம் உணர்ச்சிகளுக்கும் காரணமான முதல் விஷயம் பயம் தான். அந்த பயத்தை மூலதனமாக வைத்து அழிச்சாட்டியம் செய்கிறது பென்னிவைஸ். 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் மக்களை சூரையாடும் பென்னிவைஸின் , இந்த சீசனின் டார்கெட் சிறுவர்கள். எனவே சிறுவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிவது, ஒவ்வொவருக்கும் ஏற்றார் போல் ஒவ்வொரு ரூபத்தில் வந்து பயமுறுத்துவது என அசத்தி இருக்கிறார் நடிகர் பில் ஸ்கர்ஸ்கார்ட். . தி ஷைனிங் படத்திற்குப் பின்னர் ஸ்டீபன் கிங்கின் நாவல் ஒன்றை அட்டகாசமாக திரைப்படத்திற்கு ஏற்றவாறு தழுவி இருப்பது IT தான். தனது குறும்படமான Mamaவை மையமாக வைத்து முதல் படத்தில் ஹாரர் கிளப்பிய அர்ஜென்டினா இயக்குநர் ஆண்டி மிஷட், இதிலும் கலக்கி இருக்கிறார்.நாவலில் இருக்கும் பல விஷயங்களைக் கத்தரித்து சினிமாவிற்கு ஏற்ற வகையில் தந்திருப்பது ஸ்பெஷல். ஆனால், மிகவும் சினிமாத்தனமான அந்த கிளைமாக்ஸ் வசனங்கள் சாரி :(

IT


லைட்ஸ் அவுட், ஆனாபெல் கிரியேசன், IT என த்ரில்லர் படங்களில் தொடர்ந்து அச்சுறுத்துகிறார் இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ஃபிஷ்.  
நிஜமாகவே ஹாரர் கதையில் வசனங்களின் வழியாக காமெடி எப்படி இருக்கவேண்டும் என்பதை சொல்கிறது IT. கரெக்ட்டான டைமிங்கில் சரியான பஞ்ச் அடிக்கும் ரிச்சியின் வசனங்கள் தொடங்கி படம் முழுக்க அத்தனை இடங்களில் திரையரங்கே சிரிப்பலைகளால் அதிர்கிறது. அதே போல், குழந்தைகள்  மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து தொடர்ந்து படங்களில் (Split ) மிகவும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி வருகிறார்கள். IT படத்திலும், காட்சிப்பூர்வமாகவே பெவெர்லியின் வலிகளைக் காட்சிப்படுத்தி இருப்பது  சூப்பர்ப். " நீ இன்னும் என்னோட சின்னப்பொண்ணு தான " என பெவெர்லியின் தந்தை கேட்பது குரூரம். "நமக்கு ரெண்டே இடம் தான் ஒன்னு இந்த ஆடுகளோட ஒன்னா இருந்து துப்பாக்கிக்கு பலியாகணும், இல்லாட்டி துப்பாக்கியால சுடணும்" என கறுப்பினத்தவரான மைக்கிடம் அந்த மூத்த நபர் சொல்வது எவ்வளவு யதார்த்தம்.


இரண்டாம் பாகத்திற்காக இப்போதிருந்தே காத்திருக்க வைக்கிறது இந்த IT.

 

 

 இனி கொஞ்சம் ஸ்பாய்லர்ஸ் 

* ஆரம்பத்தில் வரும் அந்த மழைக் காட்சி; பெவெர்லியின் அறை முழுக்க ரத்தத்தில் மிதப்பது; வேகமாக நகரும் புகைப்படத்தில் வரும் பென்னிவைஸின் காட்சி; மைக்கின் பெற்றோர் தீக்கிரையாக அந்த அறையில் இருந்து கைகள் வெளியே வருவது என பல காட்சிகள் செம்ம. 

* பென் (இரண்டாம் பாகத்தில் ஒல்லி பென்) ஆசையாக ஒன் சைட் லவ் செய்யும் பெவெர்லி, பில்லுடன் இருக்கும் போதெல்லாம் என்னசெய்வதென தெரியாமல் நிற்பது ஒரு வகையில் சோகம் என்றால், நாவலின் படி, பென் தான் பெவெர்லியுடன் இரண்டாம் பாக இறுதியில் ஜோடி சேர்கிறான் என்பதற்கு கொஞ்சம் ஹார்ட்டின்ஸ் . 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்