சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங் - நோலனின் 'டன்கிர்க்' மூன்று விருதுகள் #Oscars | Dunkirk bags Oscars for Sound Mixing and Sound Editing

வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (05/03/2018)

கடைசி தொடர்பு:19:44 (05/03/2018)

சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங் - நோலனின் 'டன்கிர்க்' மூன்று விருதுகள் #Oscars

ஒரு படம், அதன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. 

நோலனின் மிகச்சிறந்த படம் என்னும் அடைமொழி பெற்றிருக்கும் டன்கிர்க் படத்தின் விமர்சனத்திற்கு முன், படத்தின் இசை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் ஃப்ரேமிலிருந்து, ஓர் இசை உங்களைப் பதற்றத்தில் வைக்க முடியுமா? முடியும் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். ஒவ்வொரு காட்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது ஜிம்மரின் இசை. கண்களை மூடி, அதைக் கேட்டால் நம்மை ஏதோ ஒரு பீதியில் ஆழ்த்துகிறது. விமானத்திலிருந்து குண்டுகள் விழும்போதும் சரி... துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தப்பிப் பிழைக்கும் போதும் சரி.. இசை எல்லாவற்றையும் கடந்து அசரடிக்கிறது. 

படத்தின் இசையும் ஒலிக்கலவையும் நம்மை அதன் வீரியத்தை உணர வைக்கிறது. டன்கிர்க் கடற்கரையில் இருக்கும் மோலிலிருந்து தப்பிக்க பல லட்சம் வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் , இவர்களைக் காப்பாற்ற டாசன் என்பவர் தன் மகனுடன் படகில் வருகிறார். இன்னொரு புறம், வானில் ஹெலிகாப்டரில் எதிரிகளின் படையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது ஒரு குழு. இந்த மூன்று பகுதிகளிலும் நடக்கும் சம்பவங்களுக்கான ஒலிக்கலவை அபாரமானது. ஆஸ்கர் விருதுகளில் இந்த ஆண்டுக்கான சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் விருதுகளைப் பெறுகிறது டன்கிர்க். 

Sound Mixing

Sound Mixing

 

Gary A. Rizzo, from left, Gregg Landaker, and Mark Weingarten கேரி ரிஸ்ஸோ, கிரெக் லேண்டேகர் , மார்க் வெய்ங்கர்ட்டன் மூவரும் சிறந்த இசைக்கலவைக்கான Sound Mixing விருதைப் பெறுகிறார்கள். 

Sound Mixing Oscars

 

Sound Editing

Sound Editing

ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன் இருவரும் சவுண்ட் எடிட்டிங் விருதைப் பெறுகின்றனர். 

Richard King Sound Editing Oscars

Editing

சிறந்த எடிட்டிங் விருதும், இந்த முறை டன்கிர்க் தான். நோலனின் ஆஸ்தான எடிட்டர் லீ ஸ்மித், இந்த முறை தனது முதல் ஆஸ்கர் விருதை வென்று இருக்கிறார். இதற்கு முன்னர் MASTER AND COMMANDER: THE FAR SIDE OF THE WORLD (2003) , THE DARK KNIGHT (2008) படங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார் லீ ஸ்மித் 

Lee Smith

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close