Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'Remember Me' சிறந்த அனிமேஷன், பாடல் - கோகோ #Coco #Oscars

சிறந்த அனிமேஷன் , சிறந்த பாடல் இரு விருதுகளையும் எதிர்பார்த்தது போலவே வென்றிருக்கிறது கோகோ.  டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் பல விஷயங்களைப் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ மட்டுமல்லாமல், கோகோ திரைப்படத்தில் வரும் ‘ரிமெம்பர் மீ’ என்ற பாடலும் ‘சிறந்த பாடல்’ பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

அனிமேஷன் படங்களில் சில படங்கள் குழந்தைகளைத் தாண்டி, எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும்; நம்மை நெகிழ வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வந்த இன்சைட் அவுட் இதே போன்றதொரு மனநிலையைக் கொடுத்தது. படம் முடிந்ததும் உங்கள் மொபைலில் இன்னும் இருக்கும் மறைந்த உங்களின் தாத்தா பாட்டியின் நம்பரை ஒருமுறையாவது பார்ப்பீர்கள்.

 

 

 

 ‘கோகோ’வின் கதை மிகவும் சிம்பிளானது. மெக்ஸிகோ நகரத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறான் சிறுவன் மிகெய்ல். கடந்த சில தலைமுறைகளாக மிகெய்லின் குடும்பம் இசையை அறவே வெறுத்து ஒதுக்கி வருகிறது. ஆனால், மிகெய்லுக்கோ மிகப்பெரிய இசைக்கலைஞன் ஆக வேண்டும் என்பது கனவு. மெக்ஸிகோவின் மூதாதையர்களுக்காகக் கொண்டாடப்படும் நினைவு நாளில் மிகெய்ல் இறந்தவர்களின் உலகத்திற்குச் சென்று விடுகிறான். அங்கு இருந்து வெளிவந்து தன் குடும்பத்தினரோடு மிகெய்ல் இணைந்தானா, அவனது இசைக் கனவு என்ன ஆனது என்பது மீதிக்கதை. சற்றே தலையைச் சுற்றி மூக்கை தொடும் ட்விஸ்ட் சில இருந்தாலும், படம் கிளாஸ்!.

Coco

 படத்தில் வரும் ஒன்றும் பேசாத பாட்டிம்மா கொள்ளை அழகு. மோனாவில் வரும் பாட்டிம்மாவுக்கு அடுத்தபடியான அழகு இவர். இவர் paapaa சொல்லும் அந்தக் கணம் ஏதோவொன்றை நம்முள் கடத்திவிடுகிறது. 

 

 

 

நமக்கும் ஸ்பானிஷ் மொழிக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும். குலேபகாவலி  படத்தில் வரும் ஸோகமா பாடல்கூட இங்கு ஹிட் அடிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கோகோ படத்தில் வரும் எல்லா பாடல்களுமே நமக்கு மிகவும் நெருக்கமானது. நம்மை நேசிப்பவர்களுக்காக Remember Me , ஜாலிவாலாவுக்கு Un Poco Loco எனப் பல பாடல்கள் மனதுக்கு நெருக்கமானவை.  

Lee Unkrich, Darla K. Anderson, லீ உன்க்ரிச் , டார்லா கே.ஆண்டர்சன் இருவரும் கோகோ படத்துக்காக, சிறந்த அனிமேஷன் விருதைப் பெறுகின்றனர். 

Coco Best Animation

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement