சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகள் வென்றது 'கெட் அவுட்' 'கால் மீ பை யுவர் நேம்' - #GETOUT #CallMeByYourName" #Oscars

ஆஸ்கர் விருதுகளில் திரைக்கதைக்கான விருதை நேரடி திரைக்கதை ( 'ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே') தழுவல் திரைக்கதை ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே) என இரண்டுவிதமாகப் பிரித்து வழங்குவார்கள்.  இந்த வருடம் சிறந்த நேரடி  திரைக்கதைக்கான ஆஸ்கரை (ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே) விருதை 'கெட் அவுட்' படத்துக்காக ஜோர்டான் பீலேவும், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே)  ஆஸ்கர் விருதை 'கால் மீ பை யுவர் நேம்' படத்துக்காக ஜேம்ஸ் ஐவரி தட்டிச் சென்றனர். 

ஆஸ்கார்

 'கெட் அவுட்' -  நேரடி திரைக்கதை (ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே)  ஜோர்டான் பீலே

சிறந்த நேரடி  திரைக்கதைக்கான ஆஸ்கரை (ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே) விருதை 'கெட் அவுட்' படத்துக்காக ஜோர்டான் பீலே வென்றார். இந்த பிரிவில் விருதைப் பெறும் முதல் கறுப்பு இனத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்  ஜோர்டான் பீலே. 

Jordan Peele get out

ஜோர்டான் பீலே இயக்கியுள்ள திரைப்படம்  'கெட் அவுட்' .கறுப்பினத்தவரான கிறிஸ்-ஐக் காதலிக்கும்(ஆலிசன் வில்லியம்ஸ்)  ரோஸ்  (டேனியல் கலுயா)  தன் பெற்றோரிடம் கூறி  அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறாள். தன்னை எப்படி அவர்கள் நடத்துவார்கள் , தன் மகள் ஒரு கறுப்பரைக் காதலிக்க ஒப்புக்கொள்வார்களா என்ற அச்சத்துடனும் தயக்கத்துடனும் செல்கிறான் கிறிஸ். அனைத்தும் இவன் எதிர்பாராதவிதத்தில் பாந்தமாய் அமைகிறது. நேரம் செல்லச் செல்ல, ரோஸ் வீட்டில் அவனுக்கு அந்நியமான விஷயங்கள் நேர்கின்றன, அவன் அங்கிருந்து எப்படி வெளியேறுகிறான்  என்பதை  த்ரில்லராக சொல்கிறது 'கெட் அவுட்'. 

ஆஸ்கர் விருதை பெற்ற ஜோர்டான் பீலே " நான் இந்தப் படத்தை எடுக்க உதவியாய் இருந்த அனைவருக்கும் நன்றி " எனத் தெரிவித்தார். 

 

 

 

'கால் மீ பை யுவர் நேம் ' -  தழுவல் திரைக்கதை (அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே)

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே)  ஆஸ்கர்  விருதை 'கால் மீ பை யுவர் நேம்' Call me by your name படத்துக்காக ஜேம்ஸ் ஐவரி வென்றார். 2007-ம் ஆண்டு அன்ட்ரே அக்மீ எழுதிய 'கால் மீ பை யுவர் நேம்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் கால் மீ பை யுவர் நேம்.

James Ivory

லுகா குஆட்ரிகினோ இயக்கியுள்ள கால் மீ பை யுவர் நேம். 17 வயதான எலியோ பேர்ல்மேன் (டிமோதீ சாலாமெட்) தனது கல்லூரி விடுமுறையில் தன் குடும்பத்தைச் சந்திக்க இத்தாலியிலுள்ள தங்களது பூர்வீகக் குடியிருப்புக்குச் செல்கிறான். அங்கு தன்னுடைய தந்தைக்கு உதவியாக இருக்கும் 24 வயது நிரம்பிய ஆலிவருடன்(ஆர்மீ ஹாமர்) நட்பு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் நடக்கும்  திருப்பங்களைச் சொல்கிறது  கால் மீ பை யுவர் நேம் .    

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!