``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்!'' - ஏ.ஆர்.ரஹ்மான் | Avengers end game tamil trailer launch

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (05/04/2019)

கடைசி தொடர்பு:16:15 (05/04/2019)

``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்!'' - ஏ.ஆர்.ரஹ்மான்

"எனக்கு அயர்ன்மேன் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. சுனாமி அடிச்சாலும் அந்தாள் சும்மாதான் இருப்பார்போல! எல்லாப் பிரச்னைகளையும் ரொம்பக் கேஷுவலா டீல் பண்ணார். இதனாலதான், அவருடைய பெயர் அயர்ன்மேன்னு நினைக்கிறேன்" - விஜய் சேதுபதி

``நம்மாளுங்க எது பண்ணாலும் மதிக்கமாட்டோம்!'' - ஏ.ஆர்.ரஹ்மான்

`அவெஞ்சர்ஸ்' படத்தின் `எண்ட் கேம்' பாகத்திற்குத்தான் எல்லோரும் வெயிட்டிங். `இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில் தானோஸ் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் சாம்பலாக்கிவிடுவார். அதைத் தொடர்ந்து என்ன ஆகும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்!. இந்நிலையில், `அவெஞ்சர்ஸ்' படத்தின் புரொமோஷன் வேலைகள் சென்னையில் பரபரவெனப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக `ஆந்தம்' ஒன்றை கம்போஸ் செய்திருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். `அவெஞ்சர்ஸ்' படத்தின் தமிழ் வெர்ஷனில் அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியும், ப்ளாக் விட்டோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளனர். படத்தின் தமிழ் வெர்ஷன் டிரெய்லரும், ஏ.ஆர்.ரஹ்மானின் ஆந்தமும் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் சேதுபதி

நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ``எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்துல வர்ற அயர்ன்மேனுக்கு நான் டப்பிங் பேசினது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஹ்மான் சார்கூட இந்த நிகழ்ச்சியில நான் கலந்துக்கிறது பெருமையா இருக்கு. அயர்ன்மேனுக்கு ரொம்பநாளா ஏற்கெனவே ஒரு ஆளுடைய குரலைக் கேட்டிருக்காங்க. புதுசா டப்பிங் கொடுக்கும்போது, எனக்கு ஒரு பயம் இருந்தது. டப்பிங்ல ஒவ்வொரு ரீல் முடியும்போதும் நான் சரியா இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். எனக்கு அயர்ன்மேன் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. சுனாமி அடிச்சாலும் அந்தாள் சும்மாதான் இருப்பார்போல! எல்லாப் பிரச்னைகளையும் ரொம்பக் கேஷுவலா டீல் பண்ணார். இதனாலதான், அவருடைய பெயர் அயர்ன்மேன்னு நினைக்கிறேன். பொதுவா நான் எந்தப் படத்துல வொர்க் பண்ணாலும், அந்தப் படத்தை நல்லா அனலைஸ் பண்ணுவேன். எல்லா ஆள்கிட்டேயும் ஒரு டாட் இருக்கும். அதைத் தொட்டுட்டா, அவர் யார்னு தெரிஞ்சிடும். அவங்க பேசுற விதம், நிற்கிற விதம், குணம்னு எல்லாத்தையும் படிப்பேன். முதல்ல அயர்ன்மேன் யாருன்னு தெரிஞ்சுக்கக் கஷ்டப்பட்டேன். போகப் போக பழகிடுச்சு" என்றார்.

அவெஞ்சர்ஸ்

தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ``இந்த முயற்சியே புதுசா இருந்தது. இந்த வாய்ப்பு மூலமா இந்தப் படத்தின் இயக்குநர் ஜோ எனக்கு அறிமுகமானார். எங்க கம்பெனியில நீங்க படம் பண்ணணும்னு சொல்லியிருந்தார். இப்போ இருக்கிற இளைஞர்கள்கிட்ட ஒரு எனர்ஜி இருக்கு. இந்தப் படத்தையும் அதையும் கம்பைன் பண்ணலாம்னு தோணுச்சு. இதை விவேக்கிட்ட சொல்லியிருந்தேன். அதுக்குத் தகுந்தமாதிரி வரிகள் கொடுத்தார். முதல்ல இந்த ஆந்தம் பண்ணும்போது, பயமா இருந்தது. என்னை மாதிரி பலபேருக்கு அவெஞ்சர்ஸுடைய ஸ்பெல்லிங்கே தெரியாது. அவங்களுக்காகதான் இந்தப் பாட்டு. இதை மனசுல வெச்சுத்தான் பாட்டை ரெடி பண்ணோம். இயக்குநர்கிட்ட முதல்ல இந்தப் பாட்டை போட்டுக் காட்டினப்போ, மறுபடியும் போடச் சொன்னார். `பயங்கரமான ஹிட் கொடுத்துட்ட நீ'னு சொன்னார்." என்றவரிடம், `எந்திரன்' படத்தின் கம்போஸிங்கை அவெஞ்சர்ஸின் இரண்டாம் பாகத்துக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிய கேள்விக்கு, ``நம்ம ஆளுங்க என்ன பண்ணாலும் மதிக்கமாட்டோம். அதை மேல இருக்கிறவங்க ஒருத்தர் சொல்லும்போது, `ஓ... ஆமா, இது பெரிய விஷயம்'னு ஒப்புகிறாங்க." என்றார். 

ஆண்ட்ரியா - அவெஞ்சர்ஸ்

அவரைத் தொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ``இதை முதல்ல சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. `இன்ஃபினிட்டி வார்' படத்தைப் பார்க்கும்போது, நோ... இவங்கலாம் எப்படிச் செத்தாங்கனு யோசிக்க வெச்சது. இதையெல்லாம் ஸ்க்ரீன்ல பார்க்கணும்னு ரொம்ப வெயிட் பண்றேன். இந்தப் படத்துல நான் ப்ளாக் விட்டோவுக்குக் குரல் கொடுத்திருக்கேன். முதல்ல டப்பிங் பேசும்போது எனக்குக் கஷ்டமா இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. இந்தியாவுல சூப்பர் ஹீரோ படம் எடுத்தா, நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு" என்று பேசி முடித்தார். 

முழு வீடியோவைப் பார்க்க...


டிரெண்டிங் @ விகடன்