நெக்லஸ் விலை 82 லட்சம் - கோலாகலமாக துவங்கியது கிராம்மி விருது 2015!

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்ரவரி 9- இசைத்துறைக்கான 57-வது கிராம்மி விருது அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள “Staples Centre’ என்ற இடத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.இவ்வருடம் மிக அதிகமான விருதுகளை பிரிட்டிஷ் பாடகரும் பாடலாசிரியருமான சாம் ஸ்மித் பெற்றுள்ளார். இசைத்துறையில் கால் பதித்த முதல் ஆண்டிலேயே நான்கு கிராம்மிகளை வென்றுள்ளார் சாம் ஸ்மித்

சிறந்த புதுப் பாடகர் விருது, 'ஸ்டே வித் மி' என்ற பாடலுக்காக தலைசிறந்த பாடலுக்கான விருது உட்பட நான்கு விருதுகளை அவர் வாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பியான்சே இசை நிகழ்ச்சி உடபட பலரும் தங்களது இசையை அரங்கேற்றினர். அதில் பியான்சே வெள்ளை நிற நீளமான கவுன் அணிந்து வெள்ளை நிற வைர நெக்லஸை அணிந்து அனைவரையும் கவர்ந்தார். 

அவரது நெக்லஸ் காதலர் தின சிறப்பாக மார்கெட்டுக்கு வரவுள்ளது. பிளாட்டினத்தால் ஆன இந்த நெக்லஸ் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு கழுத்தை முழுவதும் மறைக்காமல் பாதியில் நின்று விடும் மோனிக்யூ பியான் எனப்படும் இந்த காலர் வகை டைமண்டின் விலை இந்திய மதிப்பில் 82 லட்சத்து 42 ஆயிரத்து நானூற்றி பதிநாறு ரூபாய் மதிப்புடையது. 

நிகழ்ச்சியில் ஒபாமா வீடியோவில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சமூகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க இசைக் கலைஞர்கள் தமது பிரபலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டும் என இந்த விழாவில் வீடியோ இணைப்பு மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.

இதே பாணியில் பாடகி கேட்டி பெர்ரியும், அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சி அல்லது அதற்கான முயற்சியியால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் அதற்காக நாம் போராட வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!