தன் சொந்த படத்தை பார்ப்பதற்கே குடும்பத்தாருக்கு தடை !

ஹாலிவுட் ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்புக்குரிய படமாக வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக உள்ள படம் ‘ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’. ஆங்கில புத்தகங்களிலேயே கொஞ்சம் கிளாமர் புத்தகங்களை படிக்கும் பெண்களின் மத்தியில் பிரபலமான புத்தகம் ‘ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’.

இ.எல்.ஜேம்ஸ் எழுதிய இந்த புத்தகத்தின் நாவல் இப்போது அதே பெயரில் படமாக ஹாலிவுட்டில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சாம் டெய்லர் ஜான்சன் இயக்கியுள்ளார். ஜேமி டோர்னன் , மற்றும் டகோடா ஜான்சன் ஹீரோ ஹிரோயினாக நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் டிரெய்லரையே 5 கோடி பேர் பார்த்து வைரலில் புது சாதனையே படைத்த டிரெய்லராக மாறியுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி டகோடா ஜான்சன் தனது குடும்பத்தார் இந்த படத்தை பார்க்க கூடாது என தடை போட்டுள்ளார். 

இது குறித்து டகோடா கூறுகையில், இந்த படத்தில் நான் பல சீன்களில் ஆடையின்றி நடித்துள்ளேன். அதில் ஒன்றும் குற்றம் இல்லை. என்றாலும் சில காட்சிகள் பார்ப்போரையே மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை என் குடும்பத்தார் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!