இது கோஸ்ட் ரைடர் இல்ல பாஸ் கோட் ரைடர்!

ட்விட்டரில் படு ஃபேமசாக பரவி வருகிறது # என்ற ஹேஷ் டேக் இட்ட வார்த்தை. அதாவது படங்களின் பெயர்களை ஆட்டின் ஆங்கிலப் பெயரான GOAT என்ற வார்த்தையுடன் இணைத்து காமெடியான தலைப்பாக்குவது.. 

இப்படி ட்விட்டரில் ஒரு க்ரூப் களம் இறங்க உலகம் முழுவதும் பல ஃபேமஸ் படங்களின் ஹீரோ ஹீரோக்களின் தலைக்கு பதில் அதில் ஆட்டுத் தலையை ஒட்டி அழகு பார்க்க துவங்கிவிட்டனர். படங்களின் பெயர்களில் ஆட்டை இணைத்து இவர்கள் வெளியிடும் போஸ்டர் பட்டையை கிளப்பி வருகிறது. 

இப்படி இவர்கள் ஒரு பக்கம் ஆட்டை வைத்து ஆட்டம் காட்ட நாமும் ஏன் சும்மா இருக்க வேண்டும் இதோ நம்மூரின் சில படங்களின் தலைப்பில் ஆட்டை இணைத்த போது கிடைத்த சில காமெடி தலைப்புகள் ,  ‘இது நம்ம ஆடு’ , ’ஆடு’களம், அனேகஆடு, ஆட்டை அறிந்தால், காக்கி ஆடு, உத்தம ஆடு, 'கோட்'சடையான், அழகிய ஆட்டு மகன் . 

இதோ ஹாலிவுட் படங்களின் பெயர்களின் ஆட்டு பெயர் சேர்ந்த சில குபீர்ட் சிரிப்பி போஸ்டர்கள்.

 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!