இந்த படத்திற்கு இந்தியாவில் தடை!

உலகமே ஒரு பக்கம் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு காத்து நிற்க படம் அமோகமாக வெளியாகியுள்ளது. ‘50 ஷேட்ஸ் ஆஃப் கிரே' . ஆனால் ஆளாலுக்கு அமைதியா இருந்தா எப்படி நம்மூர்ல படம் வரலை ஆராவது பிராது குடுத்திருக்கீகளா?'னு கேட்டா எல்லா பக்கமும் கப் சிப். ஏனென்றால் நம்மூர் வாசிகளுக்கு இது குறித்து பேசுவதிலேயே சற்று தயக்கம். 

படம் அப்படி கிளு கிளு கில்பான்சே . எனினும் சென்ற வருடம் அதிகம் பார்த்த டிரெய்லர் லிஸ்டில் முதல் இடம் இந்த படத்திற்கு தான் இதுவரை கொடூரமாக 5 கோடிக்கும் மேற்பட்டோர் டிரெய்லரை கண்டு களித்துள்ளனர். 47 வயது பெண்மணி எரிகா மிட்செல் கிரே எழுதிய நாவல் தான் இந்த ‘50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ . நாவலுக்கு கிடைத்த வரவேற்பு இப்போது ஹாலிவுட்டில் படமாக வெளியாகியுள்ளது. 

படுக்கையறை காட்சிகளை அசால்டாக பார்க்கும் அமெரிக்க உலகமே படத்தை பார்த்து உறைந்து போயுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் படத்திற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளது. இந்தியா ,மலேசியா , அரேபியா நாடுகளில் முற்றிலுமாக தடை விதிக்க தற்போது சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமாகியுள்ளது.

எனினும் அடுத்த கட்ட ரிலீஸ் இம்மாதம் 27ம் தேதி என அறிவிப்பு வர அந்த லிஸ்டிலாவது நம்ம நாட்டுக்கு வருமா என்றால் சந்தேகமே என்கிறது சென்சாருக்கு நெருங்கிய வட்டாரங்கள். அடப்பாவிகளா இந்த பாவம் உங்களை சும்மா விடாது என விவரம் தெரிந்த சில இளசுகள் தற்போது புலம்ப துவங்கியுள்ளனர். எதாவது பரீசிலனை பண்ணுங்கப்பா... 

- ஷாலினி நியூட்டன் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!