குழந்தைகளுக்கான கோடை விருந்து: மினியன்ஸ் ஆன் தி வே! | minions மினியன்ஸ், ஹாலிவுட், ஆங்கிலப்படம்

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (04/03/2015)

கடைசி தொடர்பு:17:16 (25/03/2015)

குழந்தைகளுக்கான கோடை விருந்து: மினியன்ஸ் ஆன் தி வே!

வாழைப்பழம் மாதிரி உருவம். இரண்டு கண்கள். சமயங்களில் ஒரு கண்ணு கூட இருக்கலாம். மஞ்சள் நிற வாழைப்பழத்திற்கு கை, கால் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் மினியன்ஸ். யூனிவர்சல் ஃபிக்சர்ஸ் நிறுவனத்தில் உருவான ஒரு கற்பனை அனிமேஷன் கதாப்பாத்திரம்தான் மினியன்ஸ்.

“டெஸ்பிகபிள் மி” என்ற பெயரில் 2010ல் படம் வெளியாகி அனிமேஷனில் அப்ளாஸ் அள்ளி, அனைவரின் பாராட்டையும் தட்டிச் சென்றது இந்த மினியன்ஸ். அதன் இரண்டாம் பாகம் “டெஸ்பிகபிள் மி 2” என்று 2013ல் வெளியாகியது. இந்த இரண்டு  அனிமேஷன் படங்களையும் பெர்ரி ஃகாபின் (Pierre Coffin) மற்றும் செரிஸ் ரினோட்(Chris Renaud) இருவரும் இணைந்து இயக்கினர். 

ஹாலிவுட்டில் பல அனிமேஷன் படங்களில் உள்ள கதாபாத்திரங்களை வடிவமைக்கும் சர்ஜியோ பாப்லோஸ் (Sergio Pablos) எழுதிய கற்பனை கதையே மினியன்ஸ். அதுமட்டுமில்லாமல் குட்டி குட்டி கான்செப்டில் குறும்படமாகவும், வீடியோ கேம்ஸ்சாகவும் வெளிவந்து சிறுவர்களின் ஃபேவரைட் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது இந்த மினியன்ஸ்.

மினியன்ஸ் கதைதான் என்ன?


முதல் பாகமான 'டெஸ்பிகபிள் மி' யில், க்ரு ரொம்ப மோசமான வில்லன். இந்த வில்லன் ஹீரோவாகும் கதையே முதல் பாகம்.

உலகத்தையே கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் தனக்காக வாழைப்பழத் தோல் போன்ற மினியன்ஸ்ஸை உருவாக்குகிறார் க்ரு. வித விதமான ஆயுதங்களுடன் மக்களை ஏமாற்றுவது, அடாவடி செய்து காரியத்தை நிறைவேற்றுவதே க்ருவின் வேலை. இதற்கெல்லாம் உதவி செய்யும் குறும்புக்கார அடியாட்கள்தான் மினியன்ஸ். எப்படியாவது நிலாவைப் பிடிக்க வேண்டும் என்பதே திட்டம். இதற்கிடையில் நிலவை சிறிதாக்கும் மெஷின் எதிர் பார்ட்டியிடம் இருக்கும் அதை கைப்பற்ற நினைக்கும் க்ருவுக்கு மூன்று அப்பாவி சுட்டி குழந்தைகள் தேவைப்பட தத்தெடுத்து வளர்த்து வருவார். அந்த மூன்று சுட்டியும் செய்யும் அடாவடியால் கோபப்படுவார் க்ரு. கடைசியில் வில்லனாக இருந்த க்ரு, தன்னுடைய குழந்தைகளின் பாசத்தால்  ஹீரோவாக மாறுவதே முதல் பாகம்.

முதல் பாத்தின் தொடர்சியாகவே “டெஸ்பிகபிள் மி 2” கதையும் இருக்கும். திருந்திய க்ரு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருவார். க்ருவின் மூத்த மகள், ஒரு ஹோட்டல் அதிபரின் மகனை காதலிக்கிறாள். அந்த ஹோட்டல் அதிபரை பார்க்கும் க்ரு, ஷாக் ஆகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்படும் ஒரு பயங்கர வில்லனே அவன். விதி அவரை ஆபத்தான விளையாட்டில் இறக்குகிறது. அந்த ஹோட்டல் அதிபரின் ரகசிய மறைவிடத்தை கண்டுபிடிக்கிறார் க்ரு. 

க்ரு உருவாக்கிய மினியன்களில் சிலரை வேதிப்பொருள் கொடுத்து, கொலை ஆயுதங்களாக மாற்றி வைத்திருப்பார் வில்லன். ‘‘நான் உலகை ஆளப் போகிறேன். நீயும் உடன் வா’’ என அழைக்கிறான் வில்லன்.  க்ருவின் அடியாட்களே அவருக்கு எதிரியான சூழ்நிலையில், தன்னுடன் இருக்கும் மூன்று மினியன்ஸ் உடன் க்ரு, வில்லனை வென்று உலகத்தைக் காப்பாற்றுவதே “டெஸ்பிகபிள் மி 2”

“மினியன்ஸ்” என்ற அல்டிமேட் கற்பனையின் அன்லிமிட்டட் ட்ரீட்டாக மூன்றாவது பாகம் இந்த மாத கோடை விடுமுறையில் வெளிவரவிருக்கிறது.  "பனானா, பனானா" சொல்லிக் கொண்டு இந்த குட்டி குட்டி மினியன்ஸ் செய்யும் அட்ராசிட்டிகள் முழுக்கவே கலாட்டாவான காட்சிகளாக விரிவதுதான் இந்த படத்தின் ஹைலைட்ஸ். 

அனைத்து பாகங்களிலும் க்ருவிற்கு தொந்தரவு கொடுத்து வாட்டி வதைக்கும் இந்த மினியன்ஸ், பனானா வேண்டும் என்று அழுவது, க்ருவின் பேச்சைக் கேட்காமல் ஆபத்தில் சிக்கிக் கொள்வது என பலவிதமாக செய்யும் குறும்புகள் அசத்தல் காமெடி. முந்தைய பாகங்களில் இருந்த நகைச்சுவையுடன் இந்த பாகம், ஒரு அட்வென்சராக உருவாகி வருகிறதாம்.

அமெரிக்காவில் 2015 -ம் ஆண்டிற்கான பொம்மைக் கண்காட்சியில் இந்த வருடத்திற்கான யூனிவர்சல் ஃபிக்சர்ஸ் வழங்கும் ஜுராசிக் பார்க் பொம்மைகளை விட மினியன்ஸ் பொம்மைகளுக்கே படு மவுஸ். கடந்த அனைத்து பொம்மை கண்காட்சியிலும் அதிக விற்பனையாகி வந்த ஜூராசிக் பொம்மைகளைக் கடந்து விற்பனையாகிவருகிறது இந்த மினியன்ஸ் பொம்மைகள்.

முதலில் டிசம்பர் 19, 2014ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட மினியன்ஸ், இன்னும் பல கதாபாத்திரங்களை படத்தில் இணைப்பதற்காக தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் கோடை விடுமுறையை குறிவைத்தே பல ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவரும்.

அந்தவகையில் இந்த கோடைக்கு விஷுவல் விருந்து வைக்க இந்த “மினியன்ஸ்” ஆன் தி வே..!

- பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close