எக்ஸ் மென் படத்தின் கடைசி பார்ட் அறிவிப்பு...தொடரும் கடைசி பாகங்களின் லிஸ்ட்.. | Jennifer Lawrence, x-men, hollywood, ஹாலிவுட், ஜென்னிஃபர் லாரன்ஸ், எக்ஸ் மென், தி வால்வோரின்

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (24/03/2015)

கடைசி தொடர்பு:17:38 (25/03/2015)

எக்ஸ் மென் படத்தின் கடைசி பார்ட் அறிவிப்பு...தொடரும் கடைசி பாகங்களின் லிஸ்ட்..

ஹியூக் ஜாக்மேன் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் ‘எக்ஸ் மென்’. இப்படத்தின் மூலம் தான் வால்வோரின் புகழ் ஹியூக் என அவருக்கு புதிய பட்டமே கிடைத்தது.

எக்ஸ் மென், எக்ஸ்2 : எக்ஸ் மென் யுனைட்டட், எக்ஸ் மென் - தி லாஸ்ட் ஸ்டாண்ட், எக்ஸ் மென் : ஒரிஜின்ஸ் - தி வால்வோரின், எக்ஸ் மென் - த ஃபர்ஸ்ட் க்ளாஸ், தி வால்வோரின், எக்ஸ் மென் : தி டேஸ் அஃப் ஃபியூச்சர் பாஸ்ட், என இதுவரை 7 பாகங்கள் வெளியாகியுள்ளன. 

எட்டாவது பாகமாக எக்ஸ் மென் : அபோகலிப்ஸ் உருவாக உள்ளது. நீல நிற உடல் கொண்ட உருவம் மாறும் பெண்ணாக ஜெனிஃபர் லாரன்ஸ் கடைசி 2 பாகங்களில் நடித்திருப்பார். தற்போது எக்ஸ் மென் பாகங்களில் கடைசி பாகமான அபோகலிப்ஸ் பாகத்திலும் தனது மிஸ்டிக் கேரக்டரை அறிவித்துள்ளார் ஜெனிஃபர் லாரன்ஸ். எனினும் எக்ஸ் மென் கடைசி பாகம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்களுக்கு சற்றே இது வருத்தமான செய்தியே. 

இதே பாணியில் ‘ஹாரி பாட்டர்’, மற்றும் 'ஐயன் மேன் படங்களும் பாகங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close