சர்ச்சைகளுக்கு பதில் சொல்லப்போகும் ஜாக்கி சானின் சுயசரிதை!

உலக புகழ் நடிகரான ஜாக்கி சான் தனது சொந்த வாழ்க்கை குறித்து புத்தகம் வெளியிடுகிறார். 150 படங்களுக்கு மேல் நடித்து மேலும் தற்காப்பு கலை வல்லுநராகவும் திகழ்ந்த ஜாக்கி சான் சீனாவின் தற்காப்பு கலைகளில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

அதிகமான ஸ்டண்ட் பயன்படுத்திய நடிகராக கின்னஸிலும் இடம்பிடித்தவர். பாடகர், மேடை நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர் என பல முகங்களை கொண்ட ஜாக்கி சான் தனது சொந்த வாழ்க்கை குறித்து புத்தகம் வெளியிடிகிறார்.

தனது சொந்த வாழ்வில் தான் செய்த சாதனைகளையும், அடைந்த வெற்றிகளைக் காட்டிலும் தான் செய்த தவறுகள் மற்றும் சிக்கிய சர்ச்சைகள் குறித்து அதிகம் இடம்பெறும் படி எழுத உள்ள அந்த புத்தகத்தை தனது நண்பர் ஸூ மோ என்பவருடன் இணைந்து எழுதியிருக்கிறார் ஜாக்கி சான்.இதில் 1982ல் லின் ஃபெங் ஜியாஓ’வை திருமணம் செய்தது . பின் 1990களில் எலெய்ன் ங்குடன் ஏற்பட்ட சர்ச்சைகள், மற்றும் சீனா அதிபர் தேர்தலின் போது தேர்தல் முடிவுகளை அவர் ஜோக் என கிண்டலடித்தமை எல்லாவற்றிற்கும் மேல் தனக்கு எத்தனை பெண்களுடன் தொடர்பு இருந்தன என ஜாக்கி சானின் மறுபக்க வடிவமாகவே இந்த புத்தகம் வெளியாக உள்ளது

ஏப்ரலில் ஜாக்கி சானின் பிறந்த நாள் சிறப்பாக இந்த வருடம் வெளியாக உள்ளது. ’நான் பெரிய தவறு செய்து விட்டேன்’ என புத்தகத்தின் ஆரம்ப வரிகளாகவே ஆரம்பமாகும் ஜாக்கி சான் : நெவர் க்ரோ அப், ஒன்லி கெட் ஓல்டர் என்ற இந்த புத்தகம் தான் இப்போது உலகின் பல மீடியாக்கள், மற்றும் பத்திரிகை தரப்புகளிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் பல பிரபலங்களும் தனது வெற்றிகள் , சாதனைகள் என எழுதும் போது இவ்வளவு பெரிய சாதனை மனிதர் தனது தவறுகளையும், சர்ச்சைகளையும் எழுதுகிறாரே என பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஜாக்கி சான். தட் ஈஸ் மாஸ்டர்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!