குழந்தைகளைக் கவர்ந்த ’ஜாக்கி சான்’!

க்‌ஷன் மன்னன் ஜாக்கி சானை, தலைவர் ஜாக்கியாக மாற்றிய அனிமேட்டட் தொலைக்காட்சித் தொடர், 'ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ்’ (Jackie Chan Adventures). மந்திரங்கள், மாயாஜாலங்கள், சூப்பர் பவர்கள் என்று நம்மைக் கட்டிப்போடும் தொடர்.

 

ஜான் ரோஜர்ஸ் (John Rogers) என்பவரால் 2000ம் ஆண்டில் வெளிவந்தது. ஜாக்கி சான் திரைப்படங்களில் இருந்து பல விஷயங்கள் இந்தத் தொடர்களில் பயன்படுத்தப்பட்டன. ஜாக்கி, நிஜ வாழ்க்கையில் 'ஏழு சின்ன அதிசயங்கள்’ என்ற அமைப்பின் மூலமாக நடிப்பு, இசை, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றார். இந்த அமைப்பைப் பற்றி இந்தத் தொடர்களில் காட்டியிருப்பார்கள். ஜாக்கி சானுடைய திரைப்படங்களின் பெயர்களையே, சில தொடர்களுக்குத் தலைப்பாகவும் வைத்திருப்பார்கள்.

ஜாக்கியின் உறவுக்காரப் பெண்ணாக வரும் ஜேட் சான் (Jade Chan), அங்கிள், 'தோரு’ (Tohru) என்கிற குண்டு மனிதன், காமெடி வில்லன்கள் என, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத தொடர். ஜேட் சான், கதாபாத்திரத்துக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்தவர், ஜாக்கியின் சகோதரியின் மகளான ஸ்டேசி சான்.

காமிக்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவற்றிலும் பின்னியெடுக்கிறார், ஜாக்கி சான்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!