காயமடைந்தார் டேனியல்! சொன்ன தேதியில் வெளியாகுமா ஸ்பெக்டர்?

ஆக்‌ஷன் சினிமாக்களின் மூலம் உலக மக்களைக் கட்டிப் போட்ட முதல் பெருமை ஜேம்ஸ்பாண்ட் 007 படங்களுத்தான். இதன் 24வது படமான “ஸ்பெக்டர்”  படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேய்க் நடிப்பில் வெளியாகவிருக்கிறது. இதன் படப்பிடிப்பு நடக்கும் போது டேனியலுக்கு மூட்டில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

47 வயதான டேனியல் கிரேய்க் ஹீரோவாக நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடந்தது. சண்டைக்காட்சியின் போது மூட்டில் லேசாக காயம் ஏற்பட்டது. அதை கவனிக்காமல் விட்டு விட்டனர் படக்குழுவினர்.

இதைத் தொடர்ந்து பக்கிங்ஹாம் பகுதியில் உள்ள பைன்வுட்ஸ் ஸ்டுடியோவில் மற்றொரு சண்டைக் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் டேனியலின் மூட்டில் ஏற்பட்ட காயம் மேலும் தீவிரமடைந்தது.

வலியால் துடித்த டேனியல் நீயூயார்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசரமாக  ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது. ஓய்வில் இருக்கும் டேனியல் வரும் ஏப்ரல் 22ல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள் படக்குழுவினர்.  இந்த வருடம் நவம்பர் 6ம் தேதி  படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SPECTRE TEASER TRAILER

Do you like the story?

Please Appreciate the Author by clapping!