சாதனைப் படைத்தது ஃப்யூரியஸ் 7! | Furious 7, vin diesal, paul walker

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (07/04/2015)

கடைசி தொடர்பு:10:40 (08/04/2015)

சாதனைப் படைத்தது ஃப்யூரியஸ் 7!

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படத்தின் ஏழாவது பாகம் தற்பொழுது வெளியாகி ஹிட் அடித்துள்ளது. முதல் நான்கு நாட்களில் மட்டும் 384 மில்லியன் டாலர்களைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 7.

இதுவரை வெளியான ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் பாகங்களின் வரிசையில் அதிக வசூல் குவித்த படம் இது தான். மேலும் யூனிவர்சல் நிறுவனம் இதுவரை வெளியிட்ட படங்களிலேயே முதல் வாரத்தில் அதிக வசூலித்தப் படமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் 200 திரையரங்குகளில் படம் வெளியானது. உலகமெங்கும் 10,000க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வின் டீசல் மற்றும் பால் வாக்கரின் நடிப்பில் வெளியான இப்படம் பால்வாக்கரின் கடைசிப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது.  மேலும் உலகமெங்கும் 384 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடி இந்தப் படத்திற்கு வசூலாகியுள்ளது. ஹாலிவுட் படத்திற்கான அதிகபட்ச இந்திய வசூல் சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்